தினமும் புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொண்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
தினமும் புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொண்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

புரோட்டீன் பவுடர்

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் சாப்பிட வேண்டிய மூன்று மிக முக்கியமான மேக்ரோ நியூட்ரியன்களில் புரதச்சத்தும் ஒன்றாகும். அதன் படி, பால், முட்டை, டோஃபு மற்றும் பட்டாணி போன்ற தாவர மற்றும் விலங்கு அடிப்படையிலான உணவு மூலங்களிலிருந்து புரதம் கிடைக்கிறது. எனினும், இதன் உட்கொள்ளல் குறைவாக இருப்பின், புரோட்டீனை மற்றொரு விதமாக புரோட்டீன் பவுடராக உட்கொள்கின்றனர். ஏனெனில், இந்த புரோட்டீன் பவுடர் புரதத்தின் சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. புரதத்தின் மூலமான புரோட்டீன் பவுடர் ஆனது புரதத்தின் செறிவூட்டப்பட்ட வடிவமாக பதப்படுத்தப்பட்டு பவுடர் வடிவில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Rich Protein Food: முட்டைக்கு இணையான அதிக ப்ரோட்டின்.. வெஜ் பிரியர்களே புகுந்து விளையாடுங்கள்!

இதில் பாலிலிருந்து பெறக்கூடிய மோர் புரதம், மெதுவான விகிதத்தில் உறிஞ்சப்படும் பாலிலிருந்து பெறக்கூடிய கேசீன் புரதம், மஞ்சள் பட்டாணியில் இருந்து தயாரிக்கப்படும் பட்டாணி புரதம் மற்றும் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்கள் கொண்ட சைவ உணவு உண்பதற்கு ஏற்ற சிறந்த விருப்பமாக அமைகிறது. மேலும் சணல் புரதம் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களையும், முட்டையிலிருந்து மஞ்சள் கருவை நீக்கி தயாரிக்கப்படும் முட்டையின் புரதப்பொடியும் தயாரிக்கப்படுகிறது.

தினமும் புரோட்டீன் பவுடர் சாப்பிடுவதால் கிடைக்கும் மாற்றங்கள்

இயற்கையான புரதத்தை தினமும் எடுத்துக் கொள்வதில் சிக்கல் உள்ளவர்கள் அல்லது ஜிம்மில் அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் போன்றோர் புரோட்டீன் பவுடர்களை அதிகம் நம்பியிருக்கின்றனர். தினமும் புரோட்டீன் பவுடரை எடுத்துக் கொள்வதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது குறித்து காணலாம்.

உடல் எடையிழப்பிற்கு

தினமும் புரோட்டீன் பவுடர் உட்கொள்வது வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து கூடுதல் திருப்தியை மேம்படுத்துவதில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. இவை வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், உடல் எடையிழப்புக்கும் உதவுகிறது. எனினும், ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, புரதத்தைத் தவிர, உடல் எடையிழப்பை இலக்காகக் கொண்டால் உணவு மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

தசைகளை வலுவாக்க

தசை வளர்ச்சிக்கு புரோட்டீன் பவுடர் பெரிதும் உதவுகிறது. புரதத்தை அதிகளவு உட்கொள்வது, அதிக மெலிந்த உடல் நிறை திரட்சியுடன் இணைக்கப்பட்டதாகும். எனவே தினசரி உணவில் புரோட்டீன் பவுடரை சேர்ப்பது உடலுக்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்கள் தசைகளை வலுவாக்க புரோட்டீன் பவுடரை சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Protein Powder Side Effects: அதிகப்படியான புரோட்டீன் பவுடர் எடுத்துக்கிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வருமாம்

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த

உலகெங்கிலும் உள்ள பெரியவர்களைப் பாதிக்கும் பொதுவான நோயாக உயர் இரத்த அழுத்தம் அமைகிறது. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய காரணியாகும். ஆய்வுகளின் படி, மோர் புரோட்டீன் பவுடர் உட்கொள்வது சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைத்து அதைக் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

பக்கவிளைவுகள்

சில ஆய்வுகளின் படி, பல்வேறு புரதப்பொடிகளில் உள்ள ஆர்சனிக், காட்மியம், பாதரசம் மற்றும் ஈயம் போன்ற கன உலோகங்கள் நீண்ட காலத்திற்கு தீங்கு விளைவிக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த உலோகங்களின் நீண்ட கால வெளிப்பாட்டால் சிறுநீரக செயலிழப்பு, தைராய்டு பிரச்சனை, நரம்பியல் செயலிழப்பு மற்றும் பலவீனமான எலும்புகள் போன்றவை ஏற்படலாம். மேலும் இன்னும் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சனையையும் உண்டாக்கலாம்.

ஒரு நாளைக்கு எவ்வளவு புரோட்டீன் பவுடர் உட்கொள்ளலாம்?

ஒரு நாளைக்கு 25-50 கிராம் அளவு புரோட்டீன் பவுடர் கொண்ட 1 முதல் 2 ஸ்கூப்களை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பொதுவாக இந்த பவுடர் உடற்பயிற்சிகளுக்குப் பிறகு எடுக்கப்பட வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: யார் புரோட்டீன் பவுடரை உட்கொள்ளக்கூடாது? இதன் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

Image Source: Freepik

Read Next

தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவதில் இவ்வளவு விஷயம் அடங்கி இருக்கா.?

Disclaimer