What happens if you take vitamins you don't need: இன்று பெரும்பாலானோர் அன்றாட வாழ்வில் சீரான உணவுகளை எடுத்துக் கொள்வதைக் காட்டிலும், கடைகளில் கிடைக்கும் உணவு சப்ளிமெண்ட்களின் மீது அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். ஆனால், உண்மையில் உணவு சப்ளிமெண்ட்களில் ஏராளம் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா? தீமை விளைவிக்குமா? என்பது குறித்து தெரியாமல் பலருக்கும் தெரிவதில்லை. அதிலும் குறிப்பாக, ஒருவரது உடல் ஆரோக்கியத்தில் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பது தெரியாமல், பல்வேறு சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக் கொள்கின்றனர்.
பெரும்பாலான கடைகளில் கிடைக்கக்கூடிய உணவு சப்ளிமெண்ட்கள் பெரிய வணிகமாகும். ஹார்வார்டு ஹெல்த் தளத்தில் குறிப்பிட்டபடி, அமெரிக்காவில் ஆண்டுதோறும் 90,000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் சுமார் $30 பில்லியனை ஈட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்த விற்பனையில் வயதானவர்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர். மேலும் அதில் குறிப்பிட்டதாவது, அக்டோபர் 1, 2017 அன்று தி ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 3,500 பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 70% பேர் தினசரி சப்ளிமெண்ட் பயன்படுத்துவதாகவும், 54% பேர் ஒன்று அல்லது இரண்டு சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வதாகவும், 29% பேர் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: கொலாஜன் சப்ளிமெண்ட் அனைவருக்கும் பாதுகாப்பானதா? நிபுணர்களின் பதில் இங்கே!
சப்ளிமெண்ட்ஸ் சாப்பிடுவது நல்லதா?
ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் மருத்துவப் பேராசிரியரான டாக்டர் ஜோஆன் மேன்சன் அவர்கள், “சமச்சீரான, ஆரோக்கியமான உணவுக்கு சப்ளிமெண்ட்ஸ் ஒருபோதும் மாற்றாக இருக்காது“ என்று கூறுகிறார். மேலும் இவை அதிக நன்மைகளை வழங்கக்கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடைமுறைகளிலிருந்து கவனத்தை சிதறடிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
அறிவியல் என்ன கூறுகிறது?
உணவு சப்ளிமெண்ட் என்பது வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முதல் தாவரவியல் மற்றும் பயோசிமிலர் பொருட்கள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பொதுவான சொல் ஆகும். எனினும், பெரும்பாலும் மக்கள் "சப்ளிமெண்ட்" என்ற வார்த்தையை ஒரு தனிப்பட்ட வைட்டமின் அல்லது தாது தயாரிப்பு அல்லது ஒரு மல்டிவைட்டமின் என்று கூறுகின்றனர்.
சப்ளிமெண்ட்ஸ்கள் பிரபலமாக இருப்பினும், இவை குறிப்பிடத்தக்க சுகாதார நன்மைகளை வழங்குகிறது என்பதற்கு வரையறுக்கப்பட்ட சான்றுகள் உள்ளது. உண்மையில், ஆய்வு ஒன்றில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் நான்கு சப்ளிமெண்ட்ஸ்கள் மல்டிவைட்டமின்கள், வைட்டமின் டி, கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளன. இவை இருதய நோய்களிலிருந்து பாதுகாக்கவில்லை என்பதைக் கண்டறிந்துள்ளது.
சராசரி ஆரோக்கியமான நபருக்கு உடல்நல நன்மைகள் மிகக் குறைவாகவோ அல்லது இல்லாவிட்டாலும், ஏன் இவ்வளவு பேர் சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்கிறார்கள் என்பது தெரியுமா?. மக்கள் பெரும்பாலும் தங்கள் அடிப்படை ஊட்டச்சத்து தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்வதற்கு கூடுதல் ஏதாவது செய்ய முடியும் என நினைக்கின்றனர் என மருத்துவர் கூறுகிறார். சப்ளிமெண்ட்களை எடுத்துக்கொள்வதில் மருந்துப்போலி விளைவும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: கொலாஜன் சப்ளிமெண்ட்ஸ் சாப்பிடுவது புற்றுநோயை உண்டாக்குமா? நிபுணர்கள் பதில் இங்கே!
சப்ளிமெண்ட்களில் காணப்படும் பிரச்சனைகள்
சப்ளிமெண்ட்களில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவெனில், இவை FDA-வால் கட்டுப்படுத்தப்படவில்லை. சப்ளிமெண்ட்ஸ் எந்த நன்மைகளையும் தராது என்பதை நிரூபிக்காமல் இருக்கலாம். ஆனால், வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வையுடன், சப்ளிமெண்ட் லேபிளில் உள்ள பொருட்களைக் கொண்டுள்ளது மற்றும் அசுத்தங்கள் இல்லாதது என்பதை உறுதியாக அறிந்து கொள்வது கடினமாக இருக்கலாம்.
சாத்தியமான உடல்நல அபாயங்கள்
- பெரும்பாலான சப்ளிமெண்ட்கள் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதாக இருப்பினும், இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன.
- அதிகப்படியான கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்றவற்றால் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
- புகைப்பிடிப்பவர்களுக்கு அதிக அளவு பீட்டா கரோட்டின் நுரையீரல் புற்றுநோய்க்கான அதிக ஆபத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
- வைட்டமின் கே, இரத்த மெலிப்பான்களின் உறைதல் எதிர்ப்பு விளைவுகளில் தலையிடுகிறது.
- அதிக அளவு வைட்டமின் ஈ ஆனது மூளையில் இரத்தப்போக்கினால் ஏற்படும் பக்கவாதத்திற்கு வழிவகுக்குகிறது.
- அதிக அளவு வைட்டமின் B6 ஐ ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் உட்கொள்வது நரம்பு சேதத்தை ஏற்படுத்துகிறது. இது உடல் இயக்கங்களைப் பாதிக்கிறது.
இருப்பினும், சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவரவர்களுக்கான நோய்களைக் கண்டறிந்து மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகக் கருதப்படுகிறது. உதாரணமாக, ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் கண்டறியப்பட்ட பெரியவர்களுக்கு அன்றாட உணவிலிருந்து பெறுவதை விட கூடுதல் வைட்டமின் டி மற்றும் கால்சியம் தேவைப்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இதய ஆரோக்கியம் முதல் ஹார்மோன் சமநிலை வரை.. பெண்களுக்கு மீன் எண்ணெய் தரும் அற்புதங்கள்
Image Source: Freepik