50-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கட்டாயம் எடுத்துக்கணும்

What is the most important vitamin for people over 50: மக்கள் வயதாகும் போது, குறிப்பாக 50 வயதிற்குப் பிறகு அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து தேவைகள் மாறுகிறது. இதனால், அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிப்பதற்கு சில ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியமாகிறது. இதில் 50 வயதைத் தாண்டிய நபர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சில ஊட்டச்சத்துக்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
50-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கட்டாயம் எடுத்துக்கணும்


Essential nutrients people above 50 must consume daily: பொதுவாக, வயதுக்கு ஏற்ப மக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து தேவைகளைப் பெறுவது அவசியமாகக் கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக, 50 வயதிற்குப் பிறகு, அவர்களின் ஊட்டச்சத்து தேவைகள் மாறுகின்றன. இது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்கும் வண்ணம் அமைகிறது. அவ்வாறு சில ஆரோக்கியமான ஊட்டச்சத்து தேவைகள் அவசியமாகக் கருதப்படுகிறது. எனவே, அவர்கள் தங்கள் ஊட்டச்சத்து தேவைகளைப் பற்றி புரிந்து கொள்வது அவசியமாகும்.

ஏனெனில், அந்தந்த வயதுக்கு ஏற்ப உடலில் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடலாம். இது அவர்களுக்கு வயது சார்ந்த சில பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கிறது. இந்நிலையிலிருந்து விடுபட சில ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. இதில் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தங்களின் ஆரோக்கியம், ஆற்றல் மற்றும் நீண்ட ஆயுளைப் பராமரிக்க ஒவ்வொரு நாளும் தங்கள் உணவில் சேர்க்க வேண்டிய 5 அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Diet Guidelines: ஆரோக்கியமான உணவுமுறை என்பது என்ன? WHO கூறுவது இங்கே!

50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உணவில் சேர்க்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள்

வைட்டமின் டி

உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்துக்களில் ஒன்றாக இந்த வைட்டமின் டி அமைகிறது. இந்த வைட்டமின் டி குறைபாட்டால் சோர்வு, தசை பலவீனம், எலும்பு வலி மற்றும் அடிக்கடி தொற்று போன்ற பொதுவான அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு முடி உதிர்தல், கவலை, தசை வலி போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். குறிப்பாக, 50 வயதுக்கு அதிகமானோரில் இது பொதுவான அறிகுறியாகும். இந்நிலையில், இவர்கள் வைட்டமின் டி பெறுவது அவசியமாகும். இவை உடலில் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது. சூரிய ஒளி, செறிவூட்டப்பட்ட பால் பொருட்கள் அல்லது தானியங்கள், சால்மன், கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் ஆகியவற்றிலிருந்து வைட்டமின் டியைப் பெறலாம்.

கால்சியம்

பொதுவாக வயதானவர்கள் பெரிதும் பாதிப்படக்கூடிய முக்கிய நோயாக எலும்பு தொடர்பான நோய்கள் அடங்கும். ஏனெனில், இந்த காலகட்டத்தில் எலும்புகள் பலவீனமடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கலாம். இதற்கு சிறந்த தேர்வாக கால்சியம் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வது அடங்கும். இது வலுவான எலும்புகளை பராமரிக்கவும், ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கவும் உதவுகிறது. போதுமான கால்சியம் உட்கொள்ளலைப் பெற, பால், தயிர் போன்ற குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட தாவர பால், இலை கீரைகள், எலும்புகளுடன் கூடிய மத்தி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

வைட்டமின் பி12

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வைட்டமின் பி12 மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில், இது அவர்களின் உடல் வைட்டமின் பி12 ஐ உறிஞ்சும் திறனை வயதாகும்போது இழக்கத் தொடங்குகிறது. மேலும் இதன் குறைபாடு சோர்வு, மனநிலை சரியில்லாமல் போவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். வைட்டமின் பி12-ன் உதவியுடன் நரம்பு செயல்பாடு மற்றும் இரத்த சிவப்பணுக்களை உருவாக்கலாம். போதுமான வைட்டமின் பி12 ஊட்டச்சத்துக்களைப் பெற இறைச்சி, முட்டை, பால் பொருட்கள், செறிவூட்டப்பட்ட தானியங்கள், பி12 சப்ளிமெண்ட்ஸ் போன்றவற்றை சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வேகமான எடையிழப்புக்கு இந்த ஊட்டச்சத்துக்களை உங்க டயட்ல சேர்க்க மறக்காதீங்க

நார்ச்சத்துக்கள்

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நார்ச்சத்து முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். ஏனெனில், இது பல உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக, எடை மேலாண்மை, இதய நோய்கள் தடுப்பு மற்றும் குடல் ஆரோக்கியம் உள்ளிட்டவற்றிற்கு நார்ச்சத்துக்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும் நார்ச்சத்து செரிமானத்தை ஆதரிக்கவும், இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது மலச்சிக்கலைத் தடுக்கவும், சீரான குடல் இயக்கத்தை உறுதிப்படுத்தவும் உதவுகிறது. ஒவ்வொரு நாளும் போதுமான நார்ச்சத்து பெற, முழு தானியங்கள், பீன்ஸ், பயறு வகைகள், காய்கறிகள் மற்றும் பெர்ரி, ஆப்பிள் பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

புரதம்

பொதுவாக அதிக வயதுடைய நபர்களுக்கு தங்கள் உறுப்புகளின் ஆரோக்கியமான செயல்பாட்டை பராமரிக்கவும், தசைகளை வலுவாக வைத்திருக்கவும் போதுமான புரதத்தை உட்கொள்வது அவசியமானதாகக் கருதப்படுகிறது. இது அவர்களின் தசை நிறை மற்றும் வலிமையைப் பாதுகாக்க உதவுகிறது. இயற்கையாகவே, இது வயதுக்கு ஏற்ப குறையக்கூடியதாகும். எனவே போதுமான புரதத்தைப் பெற விரும்புபவர்கள் முட்டை, பருப்பு வகைகள், டோஃபு, கிரேக்க தயிர், மெலிந்த இறைச்சிகள் மற்றும் புரோட்டீன் ஷேக்குகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இது அவர்களின் தசை வலிமையைப் பராமரிக்க உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: நீண்ட காலம் வாழ விரும்புகிறீர்களா? இந்த நியூட்ரியண்ட்ஸை கட்டாயம் உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

Image Source: Freepik

Read Next

Potatoes Benefits: தினசரி உருளைக்கிழங்கு சாப்பிட்டால் உடலில் என்ன மாற்றங்கள் வரும்?

Disclaimer