Rich Protein Food: முட்டைக்கு இணையான அதிக ப்ரோட்டின்.. வெஜ் பிரியர்களே புகுந்து விளையாடுங்கள்!

  • SHARE
  • FOLLOW
Rich Protein Food: முட்டைக்கு இணையான அதிக ப்ரோட்டின்.. வெஜ் பிரியர்களே புகுந்து விளையாடுங்கள்!

அதிக ப்ரோட்டின் கொண்ட உணவுகள்

ப்ரோட்டீன்கள் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது முட்டை தான். இது அதிக புரத உணவு என்று கருதப்படுகிறது. உடல் எடையில் அக்கறை காட்ட விரும்புபவர்கள், டயட்டீஷியன்கள் அல்லது ஃபிட்னஸ் நிபுணர்கள் முட்டைகளை அதிகம் சாப்பிடச் சொல்வார்கள். ஒரு கிலோ உடல் எடைக்கு 1 கிராம் புரதத்தை உட்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. 100 கிராம் வேகவைத்த முட்டையில் 13 கிராம் புரதம் உள்ளது.

இதையும் படிங்க: Chia Seeds Water: இது தெரிந்தால் உங்கள் தினசரி உணவில் கட்டாயம் சியா விதை இருக்கும்!

முட்டையை விட அதிக ப்ரோட்டின்

முட்டையை விட அதிக புரதச்சத்து கொண்ட பல உணவுகள் உள்ளது என உங்களுக்கு தெரியமா? கீழே பட்டியலில் வழங்கப்பட்டுள்ள இந்த சைவ உணவுகளை சாப்பிட்டாலே போதும் உடலுக்கு தேவையான அதிக புரததத்தை பெறலாம்.

முட்டையை விட அதிக புரதச்சத்து கொண்ட உணவுகள்

பூசணி விதைகள்

முட்டையுடன் ஒப்பிடும்போது, ​​கரும் பச்சை பூசணி விதைகளில் அதிக புரதச்சத்து உள்ளது. 100 கிராம் பூசணிக்காயில் 19 கிராம் புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கார்போஹைட்ரேட், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் கே, பாஸ்பரஸ், துத்தநாகம் உள்ளது. பூசணிக்காய் சாப்பிடும் நம்மில் பலரும் பூசணி விதையை குப்பையாக தூக்கி எரிந்துவிடுவோம். ஆனால் உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகள் பூசணி விதையில் தான் உள்ளது.

நிலக்கடலை

நிலக்கடலை இந்தியாவின் பல உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. சட்னி, பிரியாணி, குருமா போன்ற மசாலாப் பொருட்களுக்கு நிலக்கடலை பயன்படுத்தப்படுகிறது. சமைத்த நிலக்கடலையை நிறைய சாப்பிடுவதே மிக நல்லது. 100 கிராம் நிலக்கடலையில் 19 கிராம் புரதம் உள்ளது. தெரு ஓரத்தில் பேசிக்கொண்டு சாப்பிடுவதை விட, சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.

பனீர்

சைவ உணவு உண்பவர்களிடையே மிகவும் பிரபலமான மூலப்பொருள் பனீர். ஒருபுறம், பனீர் சுவையானது, ஆனால் இது புரதத்தின் சிறந்த மூலமாகும். இதில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் கால்சியம் உள்ளது. 100 கிராம் பனீரில் 23 கிராம் புரதம் உள்ளது. பனீர் அதிக விலை உயர்ந்த பொருளாக இருந்தாலும், பலரும் அதை விரும்பிச் சாப்பிடுவார்கள். பனீரில் உடலுக்கு தேவையான பல மூலச்சத்துக்கள் கிடைக்கிறது.

தயிர்

தயிர் என்றதும் தயிரா என கேள்வி எழலாம். ஆம், தயிரில் பல நன்மைகள் நிறைந்துள்ளது. தடிமனாகவும் கிரீமியாகவும் இருக்கும் தயிரை சாப்பிடுவது கூடுதல் நல்லது. இந்த மாதிரியான தயிரில் அதிக புரதம் உள்ளது. பெர்ரி, பாதாம், வாழைப்பழம் போன்றவற்றை புரோபயாடிக் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள், அவை புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம்.

சோயா பீன்ஸ்

மார்க்கெட்டில் கிடைக்கும் விலையுயர்ந்த பொருட்களில் சோயா பீன்ஸ்-ம் ஒன்று. இதை பலரும் பிடிக்காது என ஓரந்தள்ளி விடுவார்கள். சிலர் இதன் நன்மைகளே அறியாமல் லேசாகா சாப்பிட்டு தூக்கிப் போட்டுவிடுவார்கள். சோயாபீன் காய்கறி புரதத்தின் சிறந்த மூலமாகும். ஒரு கப் சோயாபீன்ஸில் சுமார் 29 கிராம் நுண்ணூட்டச்சத்து, அதாவது புரதம் உள்ளது. இனி சோயாபீன்ஸ் சாப்பிடும் போது இதன் நன்மைகளை அறிந்து மகிழ்ச்சியோடு சாப்பிடுங்கள்.

இதையும் படிங்க: தினையின் வகை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை ஆராய்வோம்?

இவை அனைத்தும் உடலுக்கு தேவையான புரதத்தை வழங்குகிறது என்றாலும் ஏதேனும் தீவிரத்தையோ அல்லது புரதக் குறைபாடுகளையோ தீவிரமாக சந்திக்கும் போது உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

image source: freepik

Read Next

Warm Water Benefits: வெறும் வெதுவெதுப்பான நீர் மட்டுமே போதும், அவ்வளவு நன்மைகள்!

Disclaimer

குறிச்சொற்கள்