Warm Water Benefits: ஆரோக்கிய உணவுகள், டயட் என பல வழிகளை உடல் ஆரோக்கியத்திற்கு தேடும் நம்மில் பலரும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீரை எடுத்துக் கொள்வதில்லை. தினசரி உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். மருத்துவரிடம் ஏதேனும் பிரச்சனை என்று சொன்னால் அவர் பரிந்துரைக்கும் முதல்படி தினசரி வெதுவெதுப்பான தண்ணீர் குடியுங்கள் என்பது தான். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்து வந்தால், பல உடல்நல பிரச்சனைகள் நீங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது இன்னும் சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெதுவெதுப்பான நீரில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்
சளி, இருமல் மற்றும் தொற்றுநோய்களும் இந்த காலகட்டத்தில் அதிகம். இந்த உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க சூடான நீர் உதவுகிறது. வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவை முழுமையாக படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
முக்கிய கட்டுரைகள்
உடலநலக் கோளாறுகள் நீங்கும்
நாம் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியமோ அதே அளவு தண்ணீரும் முக்கியமானது. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்து வந்தால், பல உடல்நலக் கோளாறுகள் நீங்கும். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.
குளிர் காலநிலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் மந்த நிலை குறைந்து சுறுசுறுப்பு ஏற்படுகிறது. உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்கிறது. மூக்கடைப்பு, தொண்டை வலி, பேச்சுத் தொல்லை, சுவாசப் பிரச்சனைகள் குணமாகும். சளி, நடுக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் இவை குறையும்.
வெதுவெதுப்பான நீரை தினசரி காலை குடித்தால் என்ன நடக்கும்?

● அதிக எடை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் வெந்நீரை உட்கொண்டால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். உடலில் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்க வெந்நீர் உதவுகிறது. வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதால் உடல் எடையை குறைக்கலாம்.
● மாதவிடாய்க்கு முன் காலையில் எழுந்தவுடன் இரண்டு அல்லது மூன்று டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நன்மை பயக்கும். இப்படி தினமும் செய்து வந்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கும். வெதுவெதுப்பான நீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் வயிறு முழுவதுமாக சுத்தமாகும். இது உங்களுக்கு புத்துணர்ச்சியை தரும்.
● மாதவிடாயின் போது ஏற்படும் பல பிரச்சனைகளை வெதுவெதுப்பான நீரால் தீர்க்க முடியும். அலுப்பும் சோர்வும் குறையும். மாதவிடாய் காலத்தில் வயிற்று வலியில் இருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும். முகப்பரு, பொடுகு தொல்லை நீங்கும். தலைமுடி வலுவடையும்.
● வெந்நீர் அனைத்து உறுப்புகளையும் தூண்டுவதால் தசைகள் பதற்றமடையாது. செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கிறது. வயிற்றுவலி, அஜீரணக் கோளாறு மற்றும் பிற செரிமானக் கோளாறுகளால் அவதிப்படுபவர்கள் வெந்நீரைக் குடிக்க வேண்டும்.
● வெந்நீரைக் குடித்தால், உணவு விரைவில் ஜீரணமாகும். வெந்நீர் குடிப்பதால் நரம்புகளின் செயல்பாடு மேம்படும். இரத்த ஓட்டம் சீராகும். உடலில் உள்ள அனைத்து அழுக்குகளும் போய்விடும்.
● குளிர்ந்த நீரை குடிப்பதால் பற்களின் உணர்திறன் அதிகரிக்கிறது. இதே வெந்நீரைக் குடித்தால் கிருமிகள் அழிந்து பல் பிரச்சனைகள் குறையும்.
● சிலருக்கு இளம் வயதிலேயே முகச் சுருக்கம் ஏற்படும். காலையில் இரண்டு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதை வழக்கமாக்குவது பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
● வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் நரம்புகளின் செயல்பாடு மேம்படும். இரத்த ஓட்டம் சீராகும். உடலில் இருந்து அனைத்து அசுத்தங்களும் அகற்றப்படுகின்றன.
● சர்க்கரை நோய், இதயக் கோளாறு, வயிறு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெந்நீர் மிகவும் நன்மை பயக்கும்.
● மூட்டு வலி உள்ளவர்கள் வெந்நீரைக் குடித்து வந்தால், மூட்டுவலி பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
● குளிர்காலத்தில் உடல் வறட்சி அடையும். வெந்நீர் குடித்தால், உடல் வறட்சி அடையாது. முகம் பிரகாசமாக இருக்கும்.
வெந்நீரில் இதுபோன்ற பல நன்மைகள் நிறைந்திருந்தாலும் ஏதேனும் தீவிரத்தை சந்திக்கும் போது உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
image source: freepik