Black salt with warm water: வெதுவெதுப்பான நீரில் கருப்பு உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Benefits of drinking warm water with black salt: கருப்பு உப்பு உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் உணவுப்பொருளாகும். இந்த கருப்பு உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரைக் காலையில் அருந்துவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். இதில் வெதுவெதுப்பான கருப்பு உப்பு நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Black salt with warm water: வெதுவெதுப்பான நீரில் கருப்பு உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?


Is drinking warm water with black salt good for you: உடலை ஆரோக்கியமாக வைக்க ஊட்டச்சத்துக்கள் மிக்க பானங்களை எடுத்துக் கொள்வது அவசியமாகும். பெரும்பாலானோர் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீருடன் நாளைத் தொடங்குவது ஆரோக்கியமான தேர்வாக அமைகிறது. ஆனால் நச்சு நீக்கம் செய்து ஆரோக்கியத்தை அதிகரிக்க போதுமானதாக இருக்குமா என்பதை யோசித்திருக்கிறீர்களா? காலை உணவு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீருடன் நாளைத் தொடங்குவது நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ஆனால் வெற்று தண்ணீர் மட்டுமல்லாமல், அதில் சரியான பொருள்களைச் சேர்ப்பது ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அதன் படி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு பழங்கால தீர்வாக வெதுவெதுப்பான நீரில் கருப்பு உப்பு கலப்பது அடங்கும். உண்மையில் வெதுவெதுப்பான நீரில் கருப்பு உப்பு சேர்ப்பது உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு எளிய மற்றும் சக்திவாய்ந்த வழியாகும். கருப்பு உப்பு ஆனது பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய ஆயுர்வேத நடைமுறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு தாது நிறைந்த உப்பு வகையாகும். தினசரி காலை உணவுடன் வழக்கமான வெதுவெதுப்பான நீரில் கருப்பு உப்பைச் சேர்ப்பது என்னென்ன நன்மைகளைத் தரும் என்பதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Salt Craving: உங்களுக்கு உப்பு அதிகமாக சாப்பிட தோணுதா? அப்போ இதுதான் காரணம்!

வெதுவெதுப்பான நீரில் கருப்பு உப்பு சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

செரிமான ஆரோக்கியத்திற்கு

காலையில் கருப்பு உப்பு நீரைக் குடிப்பது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. கருப்பு உப்பு நீர் அருந்துவது செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது உணவின் செரிமானத்திற்கு உதவுகிறது. இது வயிற்றில் pH அளவை சமநிலையில் வைக்கிறது. மேலும் இது அமிலத்தன்மையைக் குறைத்து நாள் முழுவதும் சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கிறது. வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் கருப்பு உப்பு நீர் வீக்கம், அஜீரணம் மற்றும் செரிமானம் தொடர்பான பிற பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது.

நச்சுக்களை நீக்குவதற்கு

கருப்பு உப்பு நீர் ஒரு சிறந்த இயற்கையான நச்சு நீக்கியாக அமைகிறது. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது செரிமானப் பாதையை சுத்தம் செய்ய உதவுகிறது. இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் நன்றாக செயல்பட வைக்கிறது. இது பொதுவான நச்சு நீக்கத்தை செய்யும் போது பொட்டாசியம் மற்றும் இரும்பு போன்ற எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்த உதவுகிறது. காலையில் இதை அருந்துவது உடலில் திரட்டப்பட்ட அனைத்து கழிவுகளையும், நச்சுகளையும் வெளியேற்ற உதவுகிறது.

எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்த

கருப்பு உப்பில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளது. சரியான எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையைப் பராமரிக்க இந்த தாதுக்கள் உடலுக்கு மிகவும் முக்கியமாகும். நீரேற்றம், நரம்பு மற்றும் தசை பயன்பாட்டின் சரியான செயல்பாட்டிற்கு எலக்ட்ரோலைட்டுகள் முக்கியமாகும். காலையில் முதலில் சிறிது கருப்பு உப்பு நீரை குடிப்பது இந்த தாதுக்களைத் தர உதவுகிறது. குறிப்பாக ஒருவர் இரவில் நீரிழப்புடன் காணப்பட்டால், காலையில் இந்த நீரை அருந்துவது உடல் நாள் முழுவதும் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Salt Types and Benefits: உப்பில் இத்தனை வகை இருக்கா? இதுல எது பெஸ்ட் தெரியுமா?

எடையிழப்பை ஆதரிக்க

கருப்பு உப்பு நீரை குடிப்பது சிறந்த வளர்ச்சிதை மாற்றத்திற்கும், கொழுப்புகளை உடைப்பதை ஆதரிக்கவும் உதவுகிறது. இது உடல் எடையிழப்பை ஊக்குவிக்கிறது. கருப்பு உப்பில் உள்ள தாதுக்கள் உடலின் திரவத்தைத் தக்கவைத்துக்கொள்வதை ஒழுங்குபடுத்தவும், நீர் தக்கவைப்பைக் குறைக்கவும் உதவுகிறது. உண்மையில், கருப்பு நீர் உட்கொள்ளல் உடலின் சோடியம் அளவை சமநிலைப்படுத்துவதன் மூலம் தேவையற்ற பசியைக் குறைக்க உதவுகிறது. மேலும் கருப்பு உப்பு நீரை அருந்துவது உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கவும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கவும் இருக்க வழிவகுக்கிறது.

சரும ஆரோக்கியத்திற்கு

கருப்பு உப்பில் உள்ள தாதுக்கள் குறிப்பாக அயோடின் ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு மிகவும் நல்லதாகும். கருப்பு உப்பு நீரைக் குடிப்பது முகப்பரு மற்றும் தழும்புகள் போன்ற சருமப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அசுத்தங்களை வெளியேற்றுகிறது. இதன் மூலம் உடலிலிருந்து நச்சுக்களை நீக்க உதவுகிறது. இவை இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. இது சருமத்திற்கு ஆரோக்கியமான பளபளப்பைத் தருகிறது. இது pH அளவை சமநிலைப்படுத்துவதன் மூலம் சரும எரிச்சலைக் குறைக்கிறது. எனவே இது சருமத்தை அமைதியாகவும் தெளிவாகவும் வைக்க உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: திடீரென உப்பு சாப்பிடுவதை குறைத்தால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Beetroot juice effects: தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதில் சில பாதிப்புகளும் இருக்கு! என்னனு தெரிஞ்சிக்கோங்க

Disclaimer