Beetroot juice effects: தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதில் சில பாதிப்புகளும் இருக்கு! என்னனு தெரிஞ்சிக்கோங்க

Side effects of drinking beet juice everyday: தினமும் வெறும் வயிற்றில் பீட்ரூட் சாறு குடிப்பது உடலுக்குச் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதில் காலை உணவுக்கு முன்னதாக வெறும் வயிற்றில் பீட்ரூட் சாறு அருந்துவதால் உடலில் ஏற்படக்கூடிய சில விளைவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Beetroot juice effects: தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதில் சில பாதிப்புகளும் இருக்கு! என்னனு தெரிஞ்சிக்கோங்க


What happens if we drink beetroot juice daily: தினமும் வெறும் வயிற்றில் ஆரோக்கியமான பானங்களை உட்கொள்வது உடலுக்குப் பலவிதமான நன்மைகளைத் தருகிறது. அவ்வாறு, உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும் உணவுப்பொருள்களில் ஒன்றான பீட்ரூட் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டதாகும். இதை நம் அன்றாட உணவில் பல்வேறு வழிகளில் சேர்த்துக் கொள்கிறோம். பீட்ரூட் சாற்றை அருந்துவது தினந்தோறும் காலை நேரத்தில் அருந்துவது பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

பீட்ரூட்டில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. கூடுதலாக, இந்த சாறு நச்சுத்தன்மைக்கு வாய்ந்ததாகும். இவை சருமத்திற்கு மிகுந்த நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இது போன்ற ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தந்தாலும், பீட்ரூட் சாற்றை தினமும் அருந்துவது சில உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதில், தினமும் வெறும் வயிற்றில் பீட்ரூட் சாற்றை உட்கொள்வதால் ஏற்படும் தீய விளைவுகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Carrot beetroot juice benefits: தினமும் கேரட் பீட்ரூட் சாறு அருந்துவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்

தினமும் காலையில் எழுந்தவுடன் அல்லது காலை உணவுக்கு முன்னதாக பீட்ரூட் சாறு குடிப்பவர்கள் சந்திக்கும் சில பிரச்சனைகளைக் காணலாம்.

இரத்த அழுத்தத்தை அதிகமாக குறைக்குமா?

வெறும் வயிற்றில் தினந்தோறும் பீட்ரூட் சாறு குடிப்பதால் உடலில் இரத்த அழுத்த அளவு திடீரென குறைவதற்கு வழிவகுக்கலாம். எனவே தான் குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டிப்பாக காலையில் பீட்ரூட் சாறு அருந்துவதை முதலில் தவிர்க்க வேண்டும். குறைந்த இரத்த அழுத்தம் ஹைபோடென்ஷன் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அறிகுறிகளாக மயக்கம், சோர்வு, குமட்டல், தலைவலி போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

பீட்ரூட் சாறு சிறுநீரக கற்களை ஏற்படுத்துமா?

தினமும் வெறும் வயிற்றில் பீட்ரூட் சாற்றை உட்கொள்ளும் போது, அது சிறுநீரகங்களுக்குள் சிறிய கற்கள் உருவாக வழிவகுக்கலாம். பீட்ரூட்டில் ஆக்சலேட்டுகள் நிறைந்துள்ளது. போதுமான அளவு ஆக்சலேட்டுகள் சிறுநீரகங்களுக்கு மோசமானதல்ல. எனவே முன்னதாகவே சிறுநீரகக் கற்கள் பிரச்சனைகளைக் கொண்டவர்கள், பீட்ரூட் சாறு அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

பீட்ரூட் சாறு சிறுநீரின் நிறத்தை மாற்றுமா?

சிறுநீரின் நிறம் மாறுவது ஒரு தீவிரமான உடல்நலப் பிரச்சனை அல்ல. ஆனால் இது கட்டுப்படுத்தப்படாவிட்டால், இது கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். தினமும் வெறும் வயிற்றில் பீட்ரூட் சாற்றைக் அருந்துவது பீட்டூரியாவுக்கு வழிவகுக்கிறது. அதாவது சிறுநீர் மற்றும் மலத்தின் நிறத்தில் மாற்றம் ஏற்படுவதாகும். இதில் சிறுநீரின் நிறம் சிவப்பு நிறமாக தோன்றலாம்.

ஒவ்வாமை எதிர்வினைகளைத் தூண்டுவது

ஒவ்வாமை பிரச்சனைகளைக் கொண்டவர்கள் வெறும் வயிற்றில் பீட்ரூட் சாறு குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது சருமத்தில் வெடிப்புகள், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் முகம் மற்றும் உதடுகளில் வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Beetroot chia seeds water: பீட்ரூட் சியா விதை தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு என்னாகும் தெரியுமா?

வயிற்று வாயு அல்லது வீக்கம்

அதிகளவு பீட்ரூட் சாறு அருந்துவதில் வயிற்று வாயு அல்லது வீக்கம் ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாகும். வெறும் வயிற்றில் இந்த சாற்றை அருந்துவது அஜீரணம், வாயு மற்றும் வீக்கம் போன்ற வயிற்று உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பீட்ரூட்டில் FODMAP கள் (புளிக்கக்கூடிய ஒலிகோசாக்கரைடுகள், டிசாக்கரைடுகள், மோனோசாக்கரைடுகள் மற்றும் பாலியோல்கள்) உள்ளது. இது சிலருக்கு செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம். எனவே உணர்திறன் செரிமான அமைப்புகள் அல்லது எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) உள்ளவர்கள் பீட்ரூட்டை உட்கொண்ட பிறகு வீக்கம், வாயு அல்லது வயிற்று அலியை அனுபவிக்கலாம்.

பீட்ரூட் சாறு கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துமா?

பீட்ரூட்டில் இரும்பு, தாமிரம் மற்றும் பிற கன உலோகங்கள் நிறைந்துள்ளது. எனவே இதை அதிகளவு உட்கொள்வதால் கல்லீரல் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்நிலையில், கல்லீரல் சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளைக் கையாளும் ஒருவர், வெறும் வயிற்றில் இந்த சாற்றைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இது போன்ற பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபட வெறும் வயிற்றில் பீட்ரூட் சாறு அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Beetroot for digestion: செரிமான ஆரோக்கியத்திற்கு பீட்ரூட் சாப்பிடுவது எந்த அளவுக்கு நல்லது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Weight Loss Tea: ஒந்த ஒரு டீ போதும்.. மடமடனு வெய்ட்டு குறையும்.!

Disclaimer