Beetroot chia seeds water: பீட்ரூட் சியா விதை தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு என்னாகும் தெரியுமா?

Benefits of drinking chia seeds and beetroot juice: பீட்ரூட் சாறுடன் சியா விதை சேர்ப்பது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் சியா விதைகளுடன் பீட்ரூட் சேர்த்து தயார் செய்த பானம் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Beetroot chia seeds water: பீட்ரூட் சியா விதை தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு என்னாகும் தெரியுமா?

Can i drink beetroot and chia seeds together: அன்றாட வாழ்வில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய சில உணவுகள் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். இந்த பழக்க வழக்கங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த காலை பானத்தில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருள்களைச் சேர்த்துக் கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். அவ்வாறு பீட்ரூட் சாறு மற்றும் ஊறவைத்த சியா விதைகள் சேர்த்த ஒரு மந்திர பானமாக அமைகிறது. இந்த பானம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இந்த பானம் உடலுக்கு நீரேற்றத்தை வழங்குவதுடன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. பீட்ரூட் சியா விதை பானத்தில் வைட்டமின்கள் பி9, சி, இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல்வேறு அத்தியாவசிய தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் சக்தியாகக் கருதப்படுகிறது. இந்த நீர் அருந்துவது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் பீட்ரூட் சியா விதை தண்ணீர் சேர்த்து அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

பீட்ரூட் சியா விதை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் எடையைக் குறைக்க

பொதுவாக சியா விதைகள் நார்ச்சத்து நிறைந்த விதைகளாகும். இவை வயிறு நிறைந்த முழுமை உணர்வை அளிப்பதுடன், ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது. மேலும் பீட்ரூட் உட்கொள்வது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், கல்லீரல் செயல்பாட்டை ஆதரிப்பதன் மூலம் எடை மேலாண்மைக்கு உதவுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மறந்தும் இந்த உணவுகளை சியா விதைகளுடன் சாப்பிட்ராதீங்க!

செரிமான ஆரோக்கியத்திற்கு

சியா விதைகளில் நிறைந்த நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது வழக்கமான குடல் இயக்கத்தை ஆதரிக்கிறது. இவை மலச்சிக்கலைத் தவிர்க்கவும் உதவுகிறது. மேலும் பீட்ரூட்டில் ப்ரீபயாடிக் இழைகள் நிறைந்துள்ளது. இவை நன்மை செய்யும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் நிறைந்ததாகும். இவை இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம். அதே போல, சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை வீக்கத்தைக் குறைப்பதுடன், ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

கல்லீரல் நச்சுக்களை நீக்க

பீட்ரூட் கல்லீரலை நச்சுத்தன்மையாக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இது நச்சுகளை அகற்ற உதவுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பீடைன் போன்ற கலவைகள் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

ஆற்றலை அதிகரிக்க

இந்தக் கலவையானது உடலின் ஒட்டுமொத்த ஆற்றல் மட்டங்களை மேம்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. இவை உடலில் ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்த உதவுகிறது. இது சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும், சோர்வைக் குறைக்கவும் உதவுகிறது. அதே போல, சியா விதைகள் அதிக புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளடக்கம் காரணமாக ஆற்றலை சீராக வெளியிடுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் காலையில் சியா விதைகளை மஞ்சளுடன் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

சரும ஆரோக்கியத்திற்கு

பீட்ரூட்டில் பீட்டாலைன்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இவை தோல் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. கூடுதலாக சியா விதைகளில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் நீரேற்றம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க உதவுகிறது.

அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் உள்ளடக்கம், அதன் சாத்தியமான அறிவாற்றல் நன்மைகளுக்காக அறியப்படுகிறது. இது அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், மூளைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்கவும், நரம்பு வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இவை மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மேலும் பீட்ரூட் சாற்றில் உள்ள நைட்ரேட்டுகள் ஆக்ஸிஜன் பயன்பாடு மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது.

பீட்ரூட் சியா விதை தண்ணீர் தயாரிக்கும் முறை

தேவையானவை

  • பீட்ரூட் - 1 நடுத்தர அளவு
  • சியா விதைகள் - 1 தேக்கரண்டி
  • தண்ணீர் - 2 கப்
  • தேன் அல்லது எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி (விரும்பினால் சேர்க்கலாம்)

செய்முறை

  • முதலில் பீட்ரூட்டை கழுவி, அதன் தோலை உரித்து துருவலாம் அல்லது சிறிய துண்டுகளாக நறுக்கலாம்.
  • பின், பீட்ரூட்டை ஒரு கப் தண்ணீர் மிருதுவாக அரைத்துக் கொள்ளலாம். சாறு பிரித்தெடுக்க கலவையை வடிகட்ட வேண்டும்.
  • அதன் பிறகு சியா விதைகளை 1 கப் தண்ணீரில் 10-15 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளவும்.
  • பிறகு பீட்ரூட் சாற்றை ஜாடியில் ஊறவைத்த சியா விதைகளுடன் சேர்க்க வேண்டும். இதன் நிலைத்தன்மையை சரி செய்வதற்கு, தேவைப்பட்டால் அதிக நீரைச் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பின் விரும்பினால் இதில் கூடுதல் சுவைக்காக தேன் அல்லது எலுமிச்சை சாறு பிழிந்து கலக்க வேண்டும். இந்த பானத்தை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Fruits with chia seeds: சியா விதைகளுடன் இந்த பழங்களை சேர்த்து சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Black Pepper Milk: ஒன்று அல்ல இரண்டு அல்ல.. கோடி நன்மைகளை வழங்கும் கருப்பு மிளகு பால்!

Disclaimer