What Happens When You Drink Chia Soaked In Amla Juice Daily: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை நாம் ஊட்டச்சத்து மிக்க உணவுகளைக் கையாள்வது மிகவும் முக்கியமாகும். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்கு நாம் பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், நட்ஸ், விதைகள் மற்றும் இன்னும் பிற உணவுப்பொருள்களை எடுத்துக் கொள்கிறோம். அந்த வகையில், அன்றாட உணவில் நெல்லிக்காய் மற்றும் சியா விதைகளை இரண்டுமே தனித்தனியாக பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. ஆனால், இவை இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளைத் தருகிறது.
ஆம்லா என்றழைக்கப்படும் இந்திய நெல்லிக்காய் ஒரு சிறந்த குளிர்கால மூலிகையாகும். இதில் நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இயற்கையாகவே உடலில் நாள்பட்ட நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. அதே போல, சியா விதைகள் ஈர்க்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளுக்காக நன்கு அறியப்படுகிறது. சியா விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை இரண்டையும் ஒன்றிணைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. இதில் சியா விதைகள் மற்றும் ஆம்லா இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதை எப்போது உட்கொள்வது என்பது குறித்தும் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் காலையில் சியா விதைகளை மஞ்சளுடன் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
ஆம்லா சாறுடன் சியா விதைகளை சேர்த்து உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த
ஆம்லா சியா விதை நீர் ஒரு சிறந்த ஊட்டச்சத்து சக்தியாகும். மேலும், ஆம்லா உயர் வைட்டமின் சி அளவுகளுக்கு நன்கு அறியப்பட்டதாகும். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. சியா விதைகளில் புரதம், நார்ச்சத்துக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் முக்கியமான தாதுக்கள் நிறைந்துள்ளது. இவை இரண்டையும் சேர்த்து ஒட்டுமொத்த நல்வாழ்வை ஆதரிக்கும் ஒரு சத்தான பானத்தைத் தயார் செய்யலாம். இதைத் தொடர்ந்து குடிப்பது, தினசரி ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.
எடை மேலாண்மையை ஆதரிக்க
உடல் எடையிழப்பில் கவனம் செலுத்துபவர்களுக்கு ஆம்லா சியா விதை நீர் உணவில் மதிப்புமிக்க பகுதியாக அமைகிறது. பொதுவாக சியா விதைகளை ஊறவைக்கும் போது தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்ற அமைப்பை உருவாக்குகிறது. இது முழுமை உணர்வை அளித்து வயிற்றில் வீங்கி, கலோரி நுகர்வு குறைக்க உதவுகிறது. மேலும், இது கொழுப்பு எரிவதைத் தூண்டுவதன் மூலமும், பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையிழப்பை ஆதரிக்கிறது. அன்றாட வழக்கத்தில் இந்த பானத்தைச் சேர்ப்பது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும், பயனுள்ள எடை நிர்வாகத்தையும் வளர்க்க உதவுகிறது.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த
ஆம்லா சியா விதை நீரின் தனித்துவமான நன்மைகளில் ஒன்றாக செரிமானத்தை மேம்படுத்துவது அமைகிறது. சியா விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் குடலியக்கத்தைச் சீராக்கவும், குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. மேலும், இந்த விதைகளுடன் செரிமான நொதி உற்பத்தியை ஊக்குவிக்கும் ஆம்லா சாறுடன் இணைத்து எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான செரிமான அமைப்பை உறுதிசெய்கிறது. கூடுதலாக, இவை வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளைக் குறைக்கிறது. இதன் வழக்கமான நுகர்வு செரிமான ஆரோக்கியத்தில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Amla pickle benefits: இந்த குளிருல உடல் சூடாக மட்டுமல்ல, ஹெல்த்தியாவும் இருக்க இந்த ஊறுகாயை சாப்பிடுங்க
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
ஆம்லாவை ஒரு சூப்பர்ஃபுட் என்றே கூறலாம். முதன்மையாக ஆம்லாவில் உள்ள வைட்டமின் சி உள்ளடக்கம், ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு உதவுகிறது. ஆம்லா சியா விதை நீரைத் தொடர்ந்து குடிப்பதால், உடலின் தொற்று மற்றும் நோய்களைத் தடுக்கும் திறனை மேம்படுத்தலாம். ஆம்லாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைக்கவும், நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கியமான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கு சியா விதைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பானம் குளிர் மற்றும் காய்ச்சல் காலங்களில் உடலை பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு ஒரு சிறந்த வழியாகும்.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த
ஆம்லா சியா விதை நீரின் மற்றொரு ஈர்க்கக்கூடிய நன்மைகளில் ஒன்று சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும். ஆம்லாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயதான சருமத்தை எதிர்த்துப் போராடவும், கரும்புள்ளிகளை மறைக்கவும், பளபளப்பான நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதற்கிடையில் சியா விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளது. இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றுகிறது. இந்த பானத்தைத் தவறாமல் எடுத்துக் கொள்வது தெளிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு வழிவகுக்கிறது. இவை சருமத்தை உள்ளிருந்து ஊட்டமளிக்கும் இயற்கையான அணுகுமுறையைத் தருகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Amla juice at night: தினமும் இரவில் ஆம்லா சாறு குடிப்பதால் என்னாகும் தெரியுமா?
Image Source: Freepik