Egg Vs Chicken: முட்டை Vs சிக்கன் - சிறந்த புரோட்டீன் ஆதாரம் எது?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முட்டை, கோழிக்கறி போன்றவற்றை அன்றாட உணவில் உட்கொள்கின்றனர். ஆரோக்கியத்திற்காக தினமும் முட்டை சாப்பிடுவோரும் உண்டு, ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் சிக்கன் சாப்பிட்டாக வேண்டும் என அடம்பிடிப்போரும் உண்டு.  இரண்டும் கோழியுடன் தொடர்புடையவை மற்றும் அதிக புரதச்சத்து கொண்டவை. இவற்றில் எதைச் சாப்பிடுவது நல்லது என்று பார்ப்போம்.
  • SHARE
  • FOLLOW
Egg Vs Chicken: முட்டை Vs சிக்கன் - சிறந்த புரோட்டீன் ஆதாரம் எது?


முட்டை Vs கோழி இறைச்சி:

கோழி மற்றும் முட்டையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவை இரண்டையும் போதுமான அளவில் உட்கொள்வது இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. எடையைக் குறைக்கவும், எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை கவனமாக பராமரிக்க இது பயனுள்ளதாக இருக்கும்.

image

front-view-white-chicken-eggs-in-1731424299867.jpg

முட்டையின் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?

  • முட்டையில் வைட்டமின் ஏ, பி, ஈ மற்றும் பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், கோலின் போன்ற சத்துக்கள் முட்டையில் அதிக அளவில் உள்ளது.
  • முட்டையில் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை கண்புரை மற்றும் மாகுலர் சிதைவைத் தடுக்க உதவும்.
  • முட்டையில் உள்ள கொழுப்பு இந்த சத்துக்களை உங்கள் உடல் கிரகிக்க உதவுகிறது.
  • முட்டைகளை அளவோடு சாப்பிடுவது HDL கொழுப்பை (நல்ல கொலஸ்ட்ரால்) அதிகரிக்கவும், இருதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
  • முட்டைகளைக் காலை உணவாக அவற்றை உண்பது நீண்ட நேரம் முழுதாக உணரவும், நாளின் பிற்பகுதியில் கலோரி உட்கொள்ளலைக் குறைக்கவும் உதவும்.

 

 

.

சிக்கனில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?

  • சமைக்கப்பட்ட கோழி இறைச்சியில் வைட்டமின்கள் B6, B12 மற்றும் நியாசின், மற்றும் தாதுக்கள் மெக்னீசியம், செலினியம் மற்றும் துத்தநாகம்
  • ஆகிய சத்துக்கள் உள்ளன.
  • கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால், சிக்கன் இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு. மேலும் இது எடையிழப்பிற்கும் உதவும்.
  • தசையை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் கோழி புரதத்தின் நல்ல மூலமாகும்.
  • கோழியில் உள்ள புரதம் எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
  • மூளையில் செரோடோனின் அளவை அதிகரிக்கும் அமினோ அமிலமான டிரிப்டோபான் சிக்கனில் உள்ளது.
  • பொதுவான சுவாச நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சிக்கன் சூப் நீண்ட காலமாக வீட்டு வைத்தியமாக பயன்படுத்தப்படுகிறது.
  • கோழியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை வயதானவர்களில் அறிவாற்றல் செயல்திறனுக்கு உதவும்.

எதில் அதிக புரோட்டீன் உள்ளது?

ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, இரண்டையும் ஒப்பிடுகையில், 100 கிராம் கோழி இறைச்சியில் 30 கிராம் புரதம் உள்ளது. அதே வேகவைத்த முட்டைகளில், 12.6 கிராம் மட்டுமே உள்ளது.

கோழி மற்றும் முட்டை இரண்டும் முழுமையான புரத உணவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இருப்பினும், முட்டையை விட கோழியில் புரதத்தின் அளவு அதிகம். இவை இரண்டிலும் உடலுக்குத் தேவையான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. அவை புரதத் தொகுப்பிற்கு உதவுகின்றன.

கோழி மற்றும் முட்டை இரண்டும் தாவர புரதங்களை விட சிறந்த செரிமானமாகும். இவற்றை தினமும் கட்டாயம் உட்கொள்ள வேண்டிய சத்துக்கள் என்று சொல்லலாம். ஏனெனில் அவை தசைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் ஹார்மோன்கள் மற்றும் நரம்பியக்கடத்திகளை உருவாக்க உதவுகின்றன.

எதை சாப்பிடுவது சிறந்தது?

முட்டையை விட அதிக புரதம் இருந்தாலும், கோழி ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். 97 சதவீத முட்டையும், 94 சதவீத கோழியும் ஜீரணமாகிவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது கோழியை விட முட்டையில் உள்ள அமினோ அமிலங்களை அதிக அளவில் பயன்படுத்த முடியும். கோழிக்கறியை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு வைட்டமின் பி மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் கிடைக்கின்றன.

மேலும் முட்டையில் புரதங்கள் மட்டுமின்றி பி12 மற்றும் கோலின் போன்ற முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் முட்டையைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Image Source: Free

Read Next

Drinking Hot Water: நீங்க எப்பவுமே சுடுதண்ணீர் குடிப்பவரா? அதன் நன்மை தீமைகள் இங்கே!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version