Doctor Verified

தசை வளர்ச்சியை அதிகரிக்கும் சிறந்த புரதம் நிறைந்த அசைவ உணவுகள்.. மருத்துவர் பரிந்துரை..

டாக்டர் பால் பரிந்துரைக்கும் 5 அசைவ புரத உணவுகள் — கோழி மார்பகம், முட்டையின் வெள்ளைக்கரு, இறால், வெள்ளை மீன், மெலிந்த மாட்டிறைச்சி. தசை வளர்ச்சிக்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் ஏன் நார்ச்சத்து அவசியம்? முழு விவரங்கள் இங்கே.
  • SHARE
  • FOLLOW
தசை வளர்ச்சியை அதிகரிக்கும் சிறந்த புரதம் நிறைந்த அசைவ உணவுகள்.. மருத்துவர் பரிந்துரை..

சமூக வலைத்தளங்களில் ஆரோக்கியம் குறித்து தெளிவான விளக்கங்களை வழங்கி வரும் கலிபோர்னியாவைச் சேர்ந்த குடல்நோய் நிபுணர் டாக்டர் பால் மாணிக்கம் (Dr Pal) மீண்டும் புதிய பட்டியலுடன் வந்துள்ளார். தனது சமீபத்திய Instagram பதிவில், தசை வளர்ச்சியை விரைவாகப் பெற உதவும் மிகச்சிறந்த 5 அசைவப் புரத உணவுகளை அவர் அறிவித்துள்ளார்.


முக்கியமான குறிப்புகள்:-


ஆனால் எப்போதும் போல இந்த முறையும், “புரதம் எவ்வளவு நல்லது என்பதை விட, அதை உடல் எவ்வளவு எளிதாக சீரணித்து உறிஞ்சி கொள்கிறது என்பதே முக்கியம்” என்ற அடிப்படை செய்தியைக் கடைசியில் வலியுறுத்துகிறார்.

புரதம் நிறைந்த அசைவ உணவுகள்

1. கோழி மார்பு

அசைவத்தைப் பயன்படுத்தி தசை வளர்க்க நினைப்பவர்களுக்கு முதன்மையான உணவாக கோழி மார்பு (Chicken Breast) இருக்கிறது என டாக்டர் பால் கூறுகிறார். 100 கிராமுக்கு 30 கிராம் புரதம், சுமார் 160 கலோரி மட்டுமே. கால்கள், தோள் போன்ற பகுதிகளில் கலோரி அதிகமாக இருப்பதால், மார்புப்பகுதியே மிகச் சுத்தமான lean protein என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

2. முட்டை வெள்ளை

ஒரு முட்டை வெள்ளையில் சுமார் 3.5 கிராம் புரதம் மற்றும் வெறும் 17 கலோரி. ஐந்து முட்டை வெள்ளைகள் சேர்த்து சாப்பிட்டால் 18 கிராம் புரதம் கிடைக்கும் என்றும், இது தசை வளர்க்கும் பயிற்சியில் ஈடுபடும் அனைவருக்கும் மிகச் சிறந்த தேர்வாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: சியா சீட்ஸ் முதல்.. ப்ரோக்கோலி வரை.. குடல் ஆரோக்கியத்திற்கான நார்ச்சத்து உணவுகள் இங்கே.!  மருத்துவர் பரிந்துரை..

3. இறால்

100 கிராமுக்கு 24 கிராம் புரதம், வெறும் 100 கலோரி. உடல் விரைவாக சீரணிக்கக்கூடிய lean protein என்பதால், உடற்பயிற்சி செய்யும் நபர்களுக்கு இறால் (Shrimp / Prawn) மிகவும் பயனுள்ளதாகும். Selenium போன்ற தாதுக்கள் இயற்கையாக இதில் நிறைந்துள்ளன.

4. வெள்ளை மீன்

Tilapia, Cod, Pomfret, Mackerel போன்ற வெள்ளை மீன்கள் 100 கிராமுக்கு 20 கிராம் புரதம் மற்றும் சுமார் 100 கலோரி வழங்குகின்றன. Omega-3 நிறைந்ததால் இதயம் மற்றும் குடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது. ஆனால் canned fish-ஐ குறைவாக உட்கொள்ள வேண்டும் என்று அவர் எச்சரிக்கிறார்.

5. மெலிந்த மாட்டிறைச்சி

முடிவில் ஐந்தாவது இடத்தில் lean beef. 100 கிராமுக்கு 26 கிராம் புரதம், 180 கலோரி. இரும்புச்சத்து, Vitamin B12 போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் இருந்தாலும், மிகப் பருமனாக இருக்கும் பகுதிகளைத் தவிர்த்து lean cuts-ஐ மட்டும் தேர்வு செய்யுமாறு டாக்டர் பால் நினைவூட்டுகிறார்.

View this post on Instagram

A post shared by Dr. Pal Manickam (@dr.pal.manickam)

இறுதியாக..

டாக்டர் பால் பரிந்துரைக்கும் இந்த Top 5 non-veg protein sources — கோழி மார்பு, முட்டை வெள்ளை, இறால், வெள்ளை மீன், lean beef — ஆகியவை தசை வளர்ச்சிக்கான சிறந்த lean protein உணவுகள். ஆனால் அவற்றின் செயல்திறனை உண்மையில் உயர்த்துவது நார்ச்சத்துடன் சேர்த்து சாப்பிடும் நடைமுறையே என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான ஆரோக்கியத் தகவல்களை வழங்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது. தனிப்பட்ட உடல்நிலை, ஒவ்வாமை, மருத்துவ பிரச்சனைகள் போன்ற காரணங்களால் உணவு மாற்றங்களில் ஈடுபடுவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது அவசியம்.

Read Next

சியா சீட்ஸ் முதல்.. ப்ரோக்கோலி வரை.. குடல் ஆரோக்கியத்திற்கான நார்ச்சத்து உணவுகள் இங்கே.! மருத்துவர் பரிந்துரை..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 18, 2025 20:56 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்