$
Egg vs Paneer: முட்டை மற்றும் பனீர் தான் நம்மில் பெரும்பாலோர் உட்கொள்ளும் புரதத்தில் இரண்டு முக்கிய ஆதாரங்கள். இவை இரண்டிலும் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி12 போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால் இவை இரண்டிலும் எது சிறந்தது? என்ற கேள்வி மக்களிடையே நிலவி வருகிறது. இதற்கான விளக்கத்தை இங்கே காண்போம்.
முட்டையின் ஊட்டச்சத்து உள்ளடக்கம்..
உயர்தர புரதத்தை வழங்கும் உணவுப் பொருட்களில் முட்டையும் ஒன்று. இவை எல்லா இடங்களிலும் கிடைக்கும். இது விலை உயர்ந்ததல்ல. புரதம் மட்டுமல்ல, முட்டையில் மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, ஈ, கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன.

இதன் மஞ்சள் கருவில் அதிக கலோரிகள் இருப்பதால் பலரும் அதை தவிர்த்துவிட்டு வெள்ளை கருவை மட்டுமே சாப்பிடுவார்கள். உண்மையில், மஞ்சள் கருவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒரு நாளைக்கு ஒரு முழு முட்டை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
அதன் சத்துக்களைப் பார்த்தால்.. 40 கிராம் முட்டையில்.. புரதம் 5.5 கிராம், கொழுப்பு 4.2 கிராம், கால்சியம் - 24.6 மி.கி, இரும்புச் சத்து - 0.8 மி.கி, மக்னீசியம் - 5.3 மி.கி, பாஸ்பரஸ் - 86.7 மி.கி, பொட்டாசியம் - 60.3 மி.கி, துத்தநாகம் - 0.6 மி.கி, கொலஸ்ட்ரால் - 162 மி.கி, செலினியம் - 13.4 மைக்ரோகிராம் உள்ளது.
பனீரின் ஊட்டச்சத்து உள்ளடகம்..
பனீர் மிகவும் பிரபலமான இந்திய பால் பொருட்களில் ஒன்றாகும். இது பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. முட்டையைப் போலவே பனீரிலும் பல ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளன. அந்த சத்துகளில் புரதமும் ஒன்று.

பனீரில் வைட்டமின் டி, செலினியம் மற்றும் ரிபோஃப்ளேவின் உள்ளது. நாற்பது கிராம் பனீரில் புரதம் - 7.54 கிராம், கொழுப்பு - 5.88 கிராம், கார்போஹைட்ரேட் - 4.96 கிராம், ஃபோலேட்ஸ் - 37.32 மைக்ரோ கிராம், கால்சியம் - 190.4 மி.கி, பாஸ்பரஸ் 132 மி.கி, பொட்டாசியம் - 50 மி.கி. உள்ளது.
முட்டையா? பனீரா?
முட்டை, பனீர் இரண்டும் ஏறக்குறைய ஒரே ஊட்டச்சத்து மதிப்பு கொண்டவை. நிபுணர்களின் கூற்றுப்படி, இங்கே புரதத்திற்கு நல்லது என்று எதுவும் இல்லை. எதை எடுத்துக்கொள்வது என்பது அவரவர் உணவு விருப்பம், தனிப்பட்ட சுவை மற்றும் உடல் வகையைப் பொறுத்தது.
சைவ உணவு உண்பவர்கள் பனீர் சாப்பிட்டால், அசைவம் சாப்பிடுபவர்கள் இரண்டையும் சாப்பிடலாம். எனவே என்ன சாப்பிடுவது என்பது உங்கள் விருப்பம் என்கிறார்கள் நிபுணர்கள்.
Image Source: Freepik