What happens when you take vitamin e without doctor consultation: உடல் ஆரோக்கியத்திற்கு அன்றாட வாழ்வில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியமாகும். அதன் படி, பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நம் உடலை சிறப்பாக செயல்பட வைக்கிறது. இவை உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. இந்த வரிசையில் வைட்டமின் ஈ அனைவருக்கும் தேவையான ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். இதை நம் அன்றாட உணவில் சேர்ப்பது கண்கள், சருமம் மற்றும் முடிகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்களை நாம் பல்வேறு உணவுகளின் மூலம் பெறலாம். ஆனால், பலர் தங்களது சருமம் மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் E காப்ஸ்யூல்களை உட்கொள்கின்றனர். இந்த காப்ஸ்யூல்கள், உடலில் வைட்டமின் E குறைபாட்டை பூர்த்தி செய்வதில் நன்மை பயக்கும். எனினும், வைட்டமின் E காப்ஸ்யூல்களை யார் உட்கொள்ள வேண்டும், யார் உட்கொள்ளக் கூடாது என்பது குறித்து தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். அது மட்டுமல்லாமல், மருத்துவரை அணுகாமல் வைட்டமின் E காப்ஸ்யூல்களை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதா? என்பதையும் அறிந்திருத்தல் அவசியம்.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin E for Hair: வைட்டமின் ஈ குறைபாடு முடி உதிர்வை ஏற்படுத்துமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
இதில் புனேவின் கார்டியில் அமைந்துள்ள அப்பல்லோ கிளினிக்கின் எம்.டி (மருத்துவர்) மற்றும் நீரிழிவு நிபுணர் டாக்டர் முகேஷ் புத்வானி அவர்கள், வைட்டமின் E காப்ஸ்யூல்களை யார் சாப்பிடலாம், ஏன் மருத்துவரை அணுகாமல் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது குறித்து விவரித்துள்ளார்.
வைட்டமின் E காப்ஸ்யூல்களை யார் எடுக்க வேண்டும்?
மருத்துவரின் கூற்றுப்படி, “வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை பொதுவாக, வைட்டமின் ஈ குறைபாடு உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இந்த வைட்டமின் உறிஞ்சுதலைக் குறைக்கும் உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களுக்கும் பரிந்துரைக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
உதாரணமாக,
- செரிமான அமைப்பு சரியாக வளர்ச்சியடையாத முன்கூட்டிய குழந்தைகளுக்கு வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் கொடுக்கப்படுகிறது.
- செலியாக் அல்லது கிரோன் நோய் போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகளைக் கொண்டவர்கள் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை எடுத்துக் கொள்ளலாம்.
- உடலில் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் ஆரோக்கியமான உணவைப் பின்பற்றாதவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம்.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும்?
நமது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் சரும ஆரோக்கியம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் ஈ நன்மை பயக்கும். எனினும், இதை மருத்துவர் இல்லாமல் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனையின்றி, இந்த காப்ஸ்யூலை சரியான அளவில் எடுத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு மருத்துவ ஆலோசனை இல்லாமல் இதை எடுத்துக் கொள்வது உடலில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin E deficiency: உடலில் தோன்றும் இந்த அறிகுறிகளை லேசுல விடாதீங்க.. வைட்டமின் ஈ குறைபாடாக இருக்கலாம்!
- வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்புகள்
- தலைச்சுற்றல் மற்றும் மங்கலான பார்வை
- குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனைகள்
- கடுமையான தலைவலி
- சோர்வு மற்றும் பலவீனம்
மேலும், வைட்டமின் E பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுத்துக்கொள்வதும் இரத்தம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இன்னும் பிற ஆபத்துகளை சந்திக்க நேரிடலாம். எனவே வைட்டமின் E காப்ஸ்யூல்களை மருத்துவரை அணுகாமல் உட்கொள்ளக்கூடாது.
முடிவு
உடலில் வைட்டமின் E குறைபாடு உள்ளவர்கள் அல்லது உடலில் உள்ள பிற ஊட்டச்சத்துக்களை முறையாக உறிஞ்சுவதற்கு வைட்டமின் E காப்ஸ்யூல்கள் தேவைப்படுபவர்கள் இந்த வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் உட்கொள்வது நன்மை பயக்கும். எனினும், எந்த காரணத்திற்காகவும் மருத்துவர் அனுமதியில்லாமல் உணவில் வைட்டமின் E காப்ஸ்யூல்களைச் சேர்க்கக் கூடாது. அவ்வாறே, இதனால் ஏற்படும் பக்க விளைவுகளைத் தவிர்க்க முடியும். மேலும் மருத்துவர் நோயாளியின் நிலைக்கு ஏற்ப சரியான அளவைப் பரிந்துரைப்பர்.
இந்த பதிவும் உதவலாம்: காலை எழுந்ததும் முகம் பளிச்சினு இருக்க நைட் தூங்கும் முன் வைட்டமின் ஈ காப்ஸ்யூலில் இதை சேர்த்து யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik