காலை எழுந்ததும் முகம் பளிச்சினு இருக்க நைட் தூங்கும் முன் வைட்டமின் ஈ காப்ஸ்யூலில் இதை சேர்த்து யூஸ் பண்ணுங்க

What should be mixed in vitamin E capsules and applied: சருமத்தைப் பொலிவாக வைப்பதற்கு வைட்டமின் ஈ காப்ஸ்யூல் மிகுந்த நன்மை பயக்கும். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவது சருமத்தில் உள்ள கறைகளைக் குறைக்கவும், நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இதில் சருமத்திற்கு வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை எப்படி பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
காலை எழுந்ததும் முகம் பளிச்சினு இருக்க நைட் தூங்கும் முன் வைட்டமின் ஈ காப்ஸ்யூலில் இதை சேர்த்து யூஸ் பண்ணுங்க

What should be mixed in vitamin E capsules and applied before sleeping: சருமத்தைப் பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்திருக்க யார் தான் விரும்ப மாட்டார்கள். அவ்வாறு சருமத்தைப் பொலிவாக வைப்பதில் வைட்டமின் ஈ ஒரு சிறந்த தேர்வாகும். இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இவை செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல், மூளை, இரத்த அணுக்கள், கண்கள் மற்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் வைட்டமின் ஈ முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஈ ஆனது அதன் ஈரப்பதமூட்டும், ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு நன்கு பெயர் பெற்றதாகும்.

இந்த வைட்டமின் ஈ காப்ஸ்யூலை முகத்தில் தடவுவதன் மூலம் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதற்கும், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும், சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் இதை வெவ்வேறு வழிகளில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, இரவில் தூங்குவதற்கு முன் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை சருமத்தில் தடவுவது மிகவும் நன்மை பயக்கும். எனினும், இதை வேறு சில பொருள்களுடன் சருமத்தில் கலந்து பயன்படுத்தலாம். இதில் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களைப் பயன்படுத்துவதற்கான வழிகள் குறித்து பியூட்டிஃபுல் மேக்ஓவரின் அழகு நிபுணர் பூஜா கோயல் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இதில் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: ஆரஞ்சு பழத்தோலை தூக்கி வீசாதீங்க... இந்த 4 சரும பிரச்சனைகளை ஓட, ஓட விரட்டப் பயன்படுத்துங்க...!

தூங்குவதற்கு முன்னதாக வைட்டமின் E உடன் எதை சேர்த்து தடவ வேண்டும்?

இரவு தூங்கும் முன்னதாக வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை முகத்தில் தடவுவது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள ஆரோக்கியமான பண்புகள் சருமம் தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. சருமத்தை இன்னும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க விரும்புபவர்கள் வைட்டமின் ஈ காப்ஸ்யூலுடன் வேறு சில பொருள்களைச் சேர்க்கலாம்.

வைட்டமின் ஈ உடன் கற்றாழை ஜெல்லை சேர்ப்பது

சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க வைட்டமின் ஈ காப்ஸ்யூலுடன் கற்றாழை ஜெல்லை சேர்க்கலாம். இதற்கு 1 ஸ்பூன் அளவிலான கற்றாழை ஜெல்லை ஒரு வைட்டமின் ஈ காப்ஸ்யூலில் கலந்து, தினமும் இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்னதாக முகத்தில் தடவ வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் தடவுவது, சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கிறது. இவை எரிச்சலைக் குறைக்கவும், பருக்களைக் குறைத்து, சருமத்தை பளபளப்பாகவும் வைக்கிறது.

தேனுடன் வைட்டமின் ஈ காப்ஸ்யூலைச் சேர்ப்பது

இரவில் தூங்குவதற்கு முன் வைட்டமின் ஈ காப்ஸ்யூலுடன் தேன் கலந்து முகத்தில் தடவுவது மிகவும் நன்மை பயக்கும். இது சருமத்தில் உள்ள புள்ளிகளை ஒளிரச் செய்து, சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும், முகப்பருக்கான வாய்ப்புகளைக் குறைக்கவும் உதவுகிறது. இந்தக் கலவையை படுக்கைக்குச் செல்லும் முன்பு முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து, பின்னர் முகத்தை சாதாரண நீரில் கழுவிவிட்டு தூங்கலாம்.

வைட்டமின் ஈ உடன் கிளிசரின் பயன்பாடு

வைட்டமின் ஈ காப்ஸ்யூல் உடன் கிளிசரின் சேர்த்து தடவுவது சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைக்க உதவுவதுடன், சரும வறட்சியையும் குறைக்கிறது. இதற்கு 1 வைட்டமின் ஈ காப்ஸ்யூலை சில துளிகள் கிளிசரின் உடன் கலந்து, படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு சருமத்தில் சமமாகப் பயன்படுத்த வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: நீங்க குடிக்கும் இந்த பானங்கள் உங்களை வயதாவது போல காட்டும்.. இதைக் குடிப்பதை உடனே நிறுத்துங்க

வைட்டமின் ஈ உடன் ரோஸ் வாட்டர் பயன்பாடு

சருமத்தை ஒளிரச் செய்யவும், நிறத்தை மேம்படுத்தவும், சிவப்பைக் குறைக்கவும், வைட்டமின் ஈ காப்ஸ்யூலில் ரோஸ் வாட்டரைச் சேர்த்து பயன்படுத்தலாம். இதற்கு 1 வைட்டமின் ஈ காப்ஸ்யூலில் சில துளிகள் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இதை இரவு முழுவதும் சருமத்தில் விட்டு கழுவிக் கொள்ளலாம்.

வைட்டமின் ஈ உடன் பாதாம் எண்ணெய் சேர்ப்பது

ஒரு வைட்டமின் ஈ காப்ஸ்யூலை 3 முதல் 4 சொட்டு பாதாம் எண்ணெயுடன் கலந்து, முகத்திலும் கண்களுக்குக் கீழ் பகுதியிலும் தடவலாம். பின், விரல்களால் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இந்தக் கலவையை சருமத்திற்குத் தொடர்ந்து தடவுவது சருமத்தை ஆழமாக ஈரப்பதமாக்கும், சரும நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும் மற்றும் கருவளையங்களைக் குறைக்க உதவுகிறது.

முடிவு

வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களில் நிறைந்துள்ள பண்புகள், சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும், இதனுடன் பிற சரும பராமரிப்புப் பொருள்களைச் சேர்த்து கலப்பது தோல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எனினும், சருமத்தில் எந்தவொரு புதிய மூலப்பொருளையும் பயன்படுத்துவதற்கு முன், ஒரு பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியமாகும். இதனால், ஏற்படும் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: ஸ்கின் ரொம்ப பளபளப்பா இருக்கணுமா? வைட்டமின் ஈ-யை இப்படி யூஸ் பண்ணி பாருங்க

Image Source: Freepik

Read Next

முகமெல்லாம் சிறிய பருக்களா இருக்கா? உடனே நீக்க இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்

Disclaimer