Drinks that can make you appear older before your age: ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது உடலுக்கு ஊட்டமளிப்பதுடன், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாக அமைகிறது. எனினும், அன்றாட உணவில் நாம் சேர்க்கும் சில உணவுகள், பானங்கள் போன்றவை உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதுடன், சரும ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். அதே சமயம், ஆரோக்கியமற்ற பொருட்களை உட்கொள்வது நல்வாழ்வை சேதப்படுத்தலாம். இதன் விளைவுகள் உடனடியாகத் தெரியாவிட்டாலும் கூட, நாளடைவில் இது பிரச்சனையை ஏற்படுத்தலாம். இவை அனைத்துமே ஆற்றல், மூளை செயல்பாடு, மனநிலை மற்றும் சரும ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.
சில ஆரோக்கியமான உணவு மற்றும் பானத் தேர்வுகள் சருமத்தை இளமையாக மற்றும் துடிப்பாகத் தோன்ற வைக்கிறது. அதே சமயம், சில ஆரோக்கியமான உணவுகள், பானங்கள் போன்றவை சரும ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன், வயதான தோற்றத்திற்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக இன்று பலரும் இளம் வயதியலேயே முதுமை தோற்றத்தை அடைகின்றனர். இதில் நாம் தவிர்க்க வேண்டிய முதுமை தோற்றத்தை அளிக்கக் கூடிய பானங்கள் குறித்து, ஹார்வர்டில் பயிற்சி பெற்ற எம்.டி.யும் ஊட்டச்சத்து நிபுணருமான டாக்டர் டெர்ரி ஷிண்டானி அவர்கள் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றிக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: எவ்ளோ வயசானாலும் இளமையா இருக்கணுமா? இந்த ஐந்து ட்ரிங்ஸ் குடிங்க
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தவிர்க்க வேண்டிய பானங்கள்
மருத்துவர் பகிர்ந்துள்ள, சருமத்தை மந்தமாகவும் வயதானதாகவும் காட்டக்கூடிய பானங்கள் குறித்து காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
ஆற்றல் பானங்கள்
ஆற்றல் பானங்களில் பெரும்பாலும் சர்க்கரை அல்லது சர்க்கரை மாற்றுகள் மற்றும் காஃபின்கள் நிறைந்துள்ளது. இவை இரண்டுமே உடல் மற்றும் சருமத்தில் நீரிழப்பை ஏற்படுத்துகிறது. இந்த செயற்கை மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள பானங்களுக்குப் பதிலாக, கிரீன் டீ, தேங்காய் தண்ணீர், கரும்புச் சாறு, எலுமிச்சைப் பழம், கொம்புச்சா அல்லது சட்டு சர்பத் போன்ற நீரேற்றம் தரும் இயற்கை விருப்பங்களைத் தேர்வு செய்யலாம்.
குளிர்பானங்கள்
குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரை காணப்படுகிறது. மருத்துவரின் கூற்றுப்படி,”அதிக சர்க்கரை உள்ளடக்கம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இது சரும கொலாஜனின் குறுக்கு கசிவை ஏற்படுத்தி சுருக்கங்களை ஏற்படுத்துகிறது” என்று விளக்குகிறார். மேலும், சருமத்தை உறுதியாகவும் மீள்தன்மையுடனும் வைத்திருக்கக்கூடிய முக்கிய புரதங்கள் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்றவை ஆகும். ஆனால், குளிர்பானங்களில் உள்ள சர்க்கரைகள் ஆனது கொலாஜன் மற்றும் எலாஸ்டினை விறைப்பாக்கி உலர்த்துகிறது. இது பலவீனப்படுத்தி, முன்கூட்டிய வயதானதை துரிதப்படுத்துகிறது.
மது அருந்துவது
ஆல்கஹால் அருந்துவது உடலை நீரிழப்புக்கு உள்ளாக்கலாம். இது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர் கூறுகிறார். ஏனெனில், நீரிழப்பானது சருமத்தின் வெளிப்புற அடுக்கில் ஈரப்பதத்தை இழக்கச் செய்து சருமம் உரிதல், சுருக்கங்கள் மற்றும் வயதானதற்கான ஆரம்ப அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. மேலும், ஆல்கஹால் அருந்துவது மூளை மற்றும் பிற உறுப்புகளில் வயதானதை துரிதப்படுத்துகிறது.
ஃப்ராப்புசினோ (Frappuccino)
இந்த பிரபலமான காபி அடிப்படையிலான பானம் ஆனது காஃபின், அதிக சர்க்கரை மற்றும் பால் போன்றவற்றை ஒருங்கிணைக்கிறது. இவை மூன்றுமே சரும ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம். இந்தக் கலவையானது காலப்போக்கில் சரும நிலையை மோசமாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மறந்தும் நீங்க சாப்பிடக்கூடாத உணவுச்சேர்க்கைகள் இதோ.. ஆயுர்வேதம் சொல்லும் இரகசியம்
பால் சார்ந்த பானங்கள்
பால் உணவும் ஆச்சரியப்படும் விதமாக சருமத்திற்கு நன்மை தருவதில்லை. எந்த வடிவத்திலும் பால் முகப்பரு அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியில் கூறப்படுவதாக மருத்துவர் குறிப்பிடுகிறார். எனினும், இது உடலுக்குப் பொருந்தினால் பால் பொருட்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று அர்த்தமல்ல. தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைக்கு ஊட்டச்சத்து நிபுணர் அல்லது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
டயட் சோடாக்கள் மற்றும் செயற்கையாக இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள்
டயட் சோடாக்கள் மற்றும் செயற்கையாக இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் போன்றவை வீக்கத்தை ஊக்குவிக்கிறது. இது சருமத்தை சேதப்படுத்துவதுடன், வயதாவதை துரிதப்படுத்தலாம் என டாக்டர் ஷிண்டானி எச்சரிக்கிறார். அவரின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டு கியூரியஸில் வெளியிடப்பட்ட மருத்துவ மதிப்பாய்வு ஒன்றில் தோல் பிரச்சினைகள், வாய்வழி புண்கள் உட்பட கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு பல இனிப்புப் பொருட்கள் தொடர்புபடுத்துவதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: சீக்கிரம் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்க... இந்த காலை உணவுகள சாப்பிடுங்க!
Image Source: Freepik