How to prepare moringa powder at home: உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கவும், பல்வேறு நோய்களை வராமல் தடுத்திடவும் ஏராளமான உணவுப்பொருள்கள் உதவுகின்றன. அதிலும் பல இயற்கையாகவே கிடைக்கக் கூடியவையாகும். அவ்வாறு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் சிறந்த மரங்களில் ஒன்றாக முருங்கை மரம் அமைகிறது. ஏனெனில், முருங்கை இலை, முருங்கை பூ, முருங்கை பட்டை, முருங்கை பிசின், முருங்கை காம்பு, முருங்கை காய், முருங்கை விதை போன்ற ஒவ்வொன்றுமே அற்புதமான தனித்துவமான நன்மைகளை கொண்டுள்ளது. இந்த முருங்கை இலையிலிருந்து எளிமையான முறையில் முருங்கை பொடியை தயார் செய்யலாம். இதில் முருங்கை பொடி செய்யும் முறை மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.
முருங்கை இலையின் ஊட்டச்சத்துக்கள்
முருங்கை பல்வேறு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டதாகும். இதில், வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி3 மற்றும் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
முக்கிய கட்டுரைகள்
முருங்கை பொடி தயார் செய்வது எப்படி?
தேவையானவை
முருங்கை/முருங்கை இலைகள்
இந்த பதிவும் உதவலாம்: Murungai Kai Chapati: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முருங்கை காய் சப்பாத்தி செய்முறை!!
முருங்கை பவுடர் செய்முறை
- முதலில் மரத்திலிருந்து அல்லது சந்தையில் வாங்கிய புதிய முருங்கை இலைகளை எடுத்துக் கொள்ளலாம். அதன் மீது இருக்கும் தண்டுகளுடன் அதை சரியாகக் கழுவ வேண்டும். இதிலிருந்து நீர் அனைத்தும் வடிந்து போகும் படி வைத்துக் கொள்ளலாம்.
- பிறகு தண்டிலிருந்து இலைகளை அகற்ற வேண்டும். இதில் மஞ்சள் அல்லது பழுப்பு நிற இலைகள் அனைத்தையும் நிராகரிக்கலாம். அதன் பின்னர், அனைத்து இலைகளையும் மென்மையான மஸ்லின் அல்லது பருத்தி துணியால் மெதுவாக துடைக்கலாம்.
- அதன் பிறகு, இதை ஒரு சுத்தமான துணி அல்லது காகிதத்தில் நன்றாக பரப்பி, இவை உலர்ந்து மொறுமொறுப்பாக மாறும் வரை 1-2 நாட்கள் வீட்டிற்குள் உலர விட வேண்டும்.
- இதை ஒரு கிரைண்டர் ஜாடியில் உலர்ந்த முருங்கை இலைகளை சேர்த்து, நன்றாகப் பொடியாக அரைத்துக் கொள்ளலாம்.
- பின்னர், பொடியை சலித்துப் பிரித்து, அறை வெப்பநிலையில் சுத்தமான உலர்ந்த கண்ணாடி பாட்டிலில் சேமிக்க வேண்டும்.
முருங்கை இலைப் பொடியின் நன்மைகள்
செரிமானத்தை மேம்படுத்த
முருங்கை இலைகள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. இரைப்பை அழற்சி மற்றும் மலச்சிக்கல் அழற்சி போன்ற செரிமானக் கோளாறுகளைத் தணிக்க உதவுகிறது.
எலும்பு ஆரோக்கியத்திற்கு
முருங்கை இலையில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற எலும்பு ஆரோக்கியத்திற்கு பங்களிக்கக்கூடிய ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை எலும்பு ஆரோக்கியத்தைப் பராமரிப்பதுடன், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளைத் தடுக்கவும் உதவுகிறது.
கண் ஆரோக்கியத்திற்கு
முருங்கையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. இவை கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், கண் கோளாறுகளைத் தடுக்கவும் உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Moringa for diabetes: எகிறும் சுகர் லெவலை டக்குனு குறைக்க முருங்கையை இப்படி எடுத்துக்கோங்க
உடல் வீக்கத்தைக் குறைக்க
முருங்கையில் உள்ள ஆரோக்கியமிக்க பண்புகள் உடல் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் ஆஸ்துமா, அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி மற்றும் சில வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற நிலைகளில் இருந்து பாதுகாக்கிறது.
சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு
முருங்கை இலை சாற்றில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து முடிக்கு பயன்படுத்துவது முடி வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும், சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க உதவுகிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்க
உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் முருங்கை இலை உதவுகிறது. இது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், கல்லீரல் உயிரணுக்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கவும், இரத்தக் கொழுப்பைக் குறைக்கவும் வழிவகுக்கிறது.
இவ்வாறு முருங்கைப் பொடியை வீட்டிலேயே எளிமையான முறையில் தயார் செய்து பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்வதன் மூலம் பலதரப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Moringa recipes for weight loss: எகிறும் தொப்பைக் கொழுப்பை வேகவேகமாக குறைக்க உதவும் 3 சூப்பர் மொரிங்கா ரெசிபிஸ் இதோ!
Image Source: Freepik