National toothache day 2025: தினமும் பல் துலக்குவது ஏன் ரொம்ப முக்கியம் தெரியுமா? நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்

Why is it important to brush your teeth everyday: பற்களின் ஆரோக்கியத்தில் பல் துலக்குவது முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் தினமும் பல் துலக்குவதன் மூலமே பற்கள் வலுவாகவும், பாதுகாப்புடனும் காணப்படும். இதில் பற்களின் ஆரோக்கியத்திற்கு தினமும் ஏன் பல் துலக்க வேண்டும் என்பதற்கான சில முக்கிய காரணிகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
National toothache day 2025: தினமும் பல் துலக்குவது ஏன் ரொம்ப முக்கியம் தெரியுமா? நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்

National toothache day 2025 reasons to brush your teeth twice a day: நல்ல வாய் சுகாதாரம் பல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியமாகும். ஆனால், மோசமான உணவுமுறை மற்றும் பற்களைச் சரியாக பராமரிக்காமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்களால் வாய் வழி ஆரோக்கியம் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம். இதன் காரணமாக, அன்றாட வாழ்வில் பல்வேறு வாய்வழி அசௌகரியங்களைச் சந்திக்கலாம். இது லேசான அசௌகரியம் முதல் கடுமையானது வரை இருக்கும். மேலும் இதன் அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடலாம். எனவே பல்வலிக்கான சாத்தியமான காரணங்களைக் கண்டறிந்து அதை திறம்பட நிர்வகிப்பது அவசியமாகும்.

பற்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் மிகவும் முக்கியமாக ஒன்றாக அமைவது பல் துலக்குதல் ஆகும். இது பற்களை சேதப்படுத்தும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக, அன்றாட வாழ்க்கையில் பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் ஒரு பகுதியாக மாறிவிட்டதால் பல் துலக்குவது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை நிறைந்திருக்கும். இது பற்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றன. இதில் பல் துலக்குவது ஏன் முக்கியமானது என்பதற்கான சில காரணங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Stop Tooth Pain: பத்து நிமிடத்தில் பல் வலியை குறைப்பது எப்படி?

வாய்வழி ஆரோக்கியம்

ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்கு, தொடர்ந்து பல் துலக்குவது உட்பட, நல்ல வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பது அவசியமாகும். பல் துலக்குதலின் மூலம் பல் சிதைவு மற்றும் ஈறு நோயைத் தடுப்பதில் இருந்து புதிய சுவாசத்தை ஊக்குவித்தல் மற்றும் முறையான ஆரோக்கியத்தை ஆதரித்தல் வரை போன்ற பல நன்மைகளைத் தருகிறது. மேலும் இது பற்களில் உருவாகக்கூடிய பாக்டீரியாக்களின் ஒட்டும் படலமான பிளேக்கை அகற்ற உதவுகிறது.

பிளேக் படிதல் பல் பற்சிப்பியை அரிக்கும் அமிலங்களை உருவாக்குவதன் மூலம் துவாரங்களை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் பல் துலக்குதல் சிறிய துளைகளான குழிகள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கலாம். இது தவிர, ஈறுகளில் வீக்கம் மற்றும் இரத்தப்போக்கு போன்றவற்றால் ஈறு நோயின் அறிகுறிகள் தொடங்குகிறது. வழக்கமான துலக்குதல் பிளேக்கை அகற்றுவதுடன், ஈறு அழற்சியின் அபாயத்தைக் குறைக்கலாம்.

தினமும் பல் துலக்குவதால் ஏற்படும் நன்மைகள்

தினந்தோறும் பல் துலக்குவது வாய்வழி ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிக்கிறது என்பதற்கான காரணங்களைக் காணலாம்.

பற்களில் கறைகளை நீக்க

தினமும் பல் துலக்குவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைவது அதில் உள்ள கறைகளை அகற்றுவதாகும். பல் கறைகள் மிகவும் அசௌகரியத்தைத் தரும். மேலும், இது ஒரு நபரின் வசதியாக சிரிக்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் பற்களைத் துலக்குவதன் மூலம் இந்தக் கறைகளிலிருந்து விடுபடலாம். நன்கு மற்றும் தொடர்ச்சியாக பல் துலக்குவது, கறைகள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. பற்பசையில் நிறைந்திருக்கும் சிறிது சிராய்ப்பு பொருட்கள், துலக்கும் இயக்கத்தின் உதவியுடன் கறைகளை அகற்ற உதவுகிறது.

பற்சொத்தையைத் தவிர்க்க

தினமும் பல் துலக்குவதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பற்சிதைவு மற்றும் ஈறுநோயைத் தடுக்கலாம். ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் வாயில் உள்ள உணவு சிதைவடையத் தொடங்குகிறது. இது வாய் மற்றும் பற்களில் காணப்படும் பாக்டீரியா மற்றும் தகடு உருவாக வழிவகுக்கிறது. இந்தத் தகடுகள் அகற்றப்படாவிட்டால், பற்கள் அரிக்கத் தொடங்கலாம். இது ஈறுகளின் கீழும் பற்களுக்கு இடையிலும் சிக்கிக்கொண்டால் அது ஈறு நோயை ஏற்படுத்துகிறது. இது மோசமடையும் போது எலும்பு இழப்பு மற்றும் பற்கள் இழப்பை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: National Toothache Day 2024: பல் வலி ஏற்பட டாப் 5 காரணங்கள் இதோ!

உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க

வாயில் உருவாகும் பாக்டீரியாக்கள் வாய்வழி பிரச்சினைகளை மட்டுமல்லாமல், கடுமையான உடல்நலப் பிரச்சனைகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதில் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வயிற்றுக்குள் சென்று, கொலஸ்ட்ரால் படிவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த பாக்டீரியாக்களின் காரணமாக பக்கவாதம் அல்லது மாரடைப்பு போன்றவை ஏற்படலாம். அதிலுள்ள பாக்டீரியாக்கள் கர்ப்பிணிப் பெண்ணின் பிறக்காத குழந்தையைக் கூட பாதிக்கும் அபாயம் உண்டாகலாம். பாக்டீரியாக்கள் குவிவது டிமென்ஷியா உருவாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

பணத்தை மிச்சப்படுத்தலாம்

தொடர்ந்து பல் துலக்குவதன் மூலம் பல் மருத்துவரைச் சந்திப்பதற்கான நேரத்தைக் குறைக்க உதவுகிறது. ஏனெனில், ஈறு நோய் மற்றும் பல் சிதைவு போன்ற அபாயம் மருத்துவரை சந்திப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதுடன், நீண்ட காலத்திற்கு செலவை ஏற்படுத்தலாம். இந்த அபாயங்களைக் குறைப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு பணத்தை மிச்சப்படுத்தலாம். அதே சமயம், வெறுமனே பல் துலக்குவது மட்டுமல்லாமல், அதை சரியாக துலக்க வேண்டும். மேலும், சரியான பல் துலக்குதல் மற்றும் பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். அதன்படி, குறைந்தது இரண்டு நிமிடங்களாவது பல் துலக்க வேண்டும். வழக்கமான பல் துலக்குதல் மற்றும் பல் ஃப்ளாசிங் போன்றவை ஒரு நபரின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: National Toothache Day 2024: பல்வலியில் இத்தனை வகை இருக்கா? எப்படி சமாளிப்பது?

Image Source: Freepik

Read Next

Alcohol Addiction: தவறியும் மதுபானம் குடித்ததற்கு பின் இதை படிக்க வேண்டாம்., புலிவாலை பிடித்த கதையாகி விடும்!

Disclaimer