Peerkangai Benefits: பீர்க்கங்காயை சாதாரணமா நினைச்சிடாதீங்க! இதுல எக்கச்சக்க நன்மைகள் இருக்கு!

  • SHARE
  • FOLLOW
Peerkangai Benefits: பீர்க்கங்காயை சாதாரணமா நினைச்சிடாதீங்க! இதுல எக்கச்சக்க நன்மைகள் இருக்கு!


Health Benefits Of Eating Ridge Gourd: பெரும்பாலான வீடுகளில் எத்தனையோ காய்கறிகள் இருந்தாலும், பீர்க்கங்காயை பார்ப்பது அதிசயமான ஒன்று தான். அதிலும் சிறு குழந்தைகள் பீர்க்கங்காய் என்றே எட்டி நின்று விடுவர். ஆனால், நாம் ஒதுக்கக் கூடிய உணவுப்பொருள்கள் பலவற்றில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் மறைந்து இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் பெரும்பாலான காய்கறிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

பீர்க்கங்காயின் ஊட்டச்சத்துக்கள்

பீர்க்கங்காய் ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. அதன் படி, கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, தயாமின், வைட்டமின் சி, இரும்புச்சத்து போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனுடன் கூடுதலாக, ஜிங்க், மக்னீசியம், ரிபோஃப்ளோவின் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இவ்வாறு பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பீர்க்கங்காயை உணவிலிருந்து ஒதுக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mango Chia Seeds: மேங்கோ ஜூஸ் உடன் இந்த ஒரு விதையை சேர்த்து குடிங்க. எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்!

பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் சூட்டைக் குறைக்க

பொதுவாக பீர்க்கங்காய் கோடைக்காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இது அதிக நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி என்பதால், உடலில் உள்ள அதிகப்படியான சூட்டைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் ஜிங்க், பொட்டாசியம், காப்பர், செலினியம் போன்ற மினரல்களும் நிறைந்துள்ளது. இவை உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. மேலும் இது உடலில் உள்ள அசிடிட்டியை சமநிலைப்படுத்தவும், எலக்ட்ரோலைட்டுகளை சேமிக்கவும் உதவுகிறது.

உடல் எடையைக் குறைக்க

பீர்க்கங்காய் நார்ச்சத்துக்களால் நிறைந்து காணப்படக்கூடிய காய்கறி ஆகும். இதனால் உடல் இதை உறிஞ்சுவதற்குத் தாமதம் ஆகிறது. மேலும் இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்க ஏதுவாக அமைகிறது. பொதுவாக நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், உடல் எடையை குறைப்பதில் பெரிதும் பங்களிக்கிறது. அதிலும் பீர்க்கங்காய் நார்ச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்களால் நிறைந்துள்ளதால் இவை உடல் எடையைக் குறைக்க சிறந்த தேர்வாக அமைகிறது.

வீக்கத்தைக் குறைக்க

பீர்க்கங்காயின் இலைகள் உடலில் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இந்த இலைகளில் உள்ள பண்புகள் வீக்கத்திற்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இதற்கு பீர்க்க இலைகளை வீக்கம் உள்ள இடத்தில் அரைத்து தடவினால் பலன் தருகிறது. இது உடலுக்குள் இருக்கும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது இருமலைப் போக்கி, சுவாச மண்டலத்தில் உள்ள வீக்கங்களைச் சரி செய்யலாம்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த

பீர்க்கங்காயில் வைட்டமின் ஏ, சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. இந்த பண்புகள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கவும், ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை போக்கி, சரும திசுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்கிறது.

அன்றாட உணவில் பீர்க்கங்காயைச் சேர்த்துக் கொள்வது, சரும செல்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது முகப்பருக்கள், தொற்றுக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றைத் தடுத்து, பளபளப்பான மற்றும் மிருதுவான சருமத்தைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: CWC Irfan’s Recipes: இர்ஃபானின் சுண்டல் மசாலா வடை ரெசிபி! இத ஒரு முறை ருசிச்சா திரும்ப திரும்ப கேப்பீங்க

கண் பார்வை மேம்பாட்டிற்கு

பீர்க்கங்காயில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ சத்துக்கள் கண் பார்வையை அதிகரிக்கச் செய்கிறது. மேலும், கண் பார்வைத் திறனை நன்றாக வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, கண்களில் ஏற்படும் மங்கலான பார்வை மற்றும் வேறு சில குறைபாடுகள் போன்ற அனைத்தையும் குணப்படுத்துகிறது.

நீரிழிவு நோயைக் குறைக்க

பீர்க்கங்காயில் கலோரிகள் குறைந்த அளவில் நிறைந்துள்ளது. மேலும் இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. எனவே இவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இதன் ஹைப்போகிளைசெமின் பண்புகள், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

கல்லீரல் இயக்கத்தை பாதுகாக்க

இரத்த சுத்திகரிப்பில் பீர்க்கங்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் படி, இரத்தத்தில் உள்ள கழிவுகளையும், மது அருந்துவதால் ஏற்படும் அசுத்தங்கள் மற்றும் செரிக்காத உணவுகள் போன்றவற்றையும் வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியம் மற்றும் பித்தப்பை நன்றாக இயங்க உதவுகிறது. கல்லீரலில் இருந்து சுரக்கும் ஒரு வகையான திரவமான பித்தம், கொழுப்பை உடைக்க உதவுகிறது. இதன் மூலம் கல்லீரலில் ஏற்படும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட மற்ற தொற்றுக்களை ஏற்படாமல் தடுக்கலாம்.

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

உடல் உறுப்புகளான கண், வயிறு, கல்லீரல், சிறுநீரகத் தொற்றுக்கள் என அனைத்தும் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் குறைவாக இருப்பதே ஆகும். இதற்கு பீர்க்கங்காய் சிறந்த தேர்வாக அமைகிறது. பீர்க்கங்காயில் உள்ள வைட்டமின் சி, இரும்பு, ஜிங்க், மக்னீசியம், ரிபோஃப்ளாவின், தியாமின் போன்ற சத்துக்கள் வீக்கத்தைக் குறைத்து உடலுக்குத் தேவையான நோயெதிர்ப்புச் சக்தியை வழங்குகிறது.

பீர்க்கங்காய் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு இது போன்ற பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Soaked Raisins Benefits: ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிடுவது ஆண்களுக்கு எவ்வளவு நல்லது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Chettinadu Chicken Masala Recipe: குக் வித் கோமாளி செஃப் தாமு ஸ்டைல் செட்டிநாடு சிக்கன் மசாலா ரெசிபி…

Disclaimer