Benefits Of Eating Raw Mango: கோடைக்காலம் என்று வரும்போது, நம் அனைவருக்குமே கண்முன்னே வாயில் நீர் ஊறும் மாங்காய் இருக்கும். மாங்காயில் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
இந்த மாங்காயை வைத்து சிலர் பச்சடி செய்து சாப்பிடுவார்கள். மேலும் சிலர் இதில் உப்பு மற்றும் மிளகாய் தூள் போட்டு சாப்பிடுவார்கள். தினமும் மாங்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இது குறித்து இங்கே காண்போம்.

மாங்காயின் நன்மைகள் (Raw Mango Benefits)
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
மாங்காயில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மாங்காயில் உள்ள வைட்டமின் சி சளி, இருமல் போன்ற உடல்நலப் பிரச்னைகளைக் குறைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
இரத்த சோகையை குறைக்கிறது
மாங்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை பிரச்னை குறையும். இது உடலில் இரத்தம் உறைவதைத் தடுக்கிறது மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு நடுத்தர அளவிலான மாங்காயை தினமும் உட்கொள்வது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தினர்.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
மாங்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. தினமும் சாப்பிட்டு வந்தால் செரிமானம் மேம்படும். மேலும், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்னைகள் நீங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
இதையும் படிங்க: Mango seed benefits : மாங்கொட்டையில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!
தோல் ஆரோக்கியமாக இருக்கும்
மாங்காயில் வைட்டமின் ஏ மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை சுருக்கங்கள் மற்றும் பருக்கள் இல்லாமல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது
மாங்காயில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால் தான் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி மாங்காய் சாப்பிடலாம்.
எடை கட்டுப்பாடு
மாங்காயில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. அதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இவற்றை சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம். மாங்காய் சாப்பிடுவதால் வயிறு நிரம்பிய உணர்வை உண்டாக்கி, அதிகமாக சாப்பிடுவதை தடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இரத்த அழுத்தம் குறையும்
மாங்காயில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
கண்களுக்கு நல்லது
மாங்காயில் உள்ள கரோட்டினாய்டுகள் பார்வையை மேம்படுத்துகின்றன. கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பின் குறிப்பு
பச்சை மாம்பழங்களை சாப்பிடுவதால் பல நன்மைகள் இருந்தாலும், அதிக அளவில் சாப்பிடும்போது இரைப்பை பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி பச்சை மாம்பழங்களை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.