முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பலம். இதை பிடிக்காதவர்களை பார்ப்பது அரிது. இயல்பாக, நாம் அனைவரும் மாம்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் விதையை கீழே தூக்கி எரிந்து விடுவோம். இல்லையெனில் வீட்டின் முற்றத்தில் மண்ணில் புதைத்து வைப்போம். ஆனால், மாம்பழத்தை விட மாங்கொட்டையில் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?..
ஆமாம், ஆயுர்வேதத்தில் பல்வேறு மருந்துகளுக்கு மா விதை பயன்படுத்தப்படுகிறது. மாம்பழ விதை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை உடலில் ஏற்படும் வீக்கங்களை சரி செய்கிறது. மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. அந்தவகையில், மாங்கொட்டையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பொடுகை நீக்கும் :
மாங்கொட்டை பொடுகை நீக்கும் தன்மை கொண்டது. மாம்பழ விதை வெண்ணையை தலைக்கு தேய்த்து வர பொடுகு தொல்லை நீங்கும். ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் ஸ்பூன் கடுகு எண்ணெய், 5 ஸ்பூன் மாங்கொட்டை எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து சூரிய ஒளியில் 2 நாட்களுக்கு வைக்கவும். பின்னர் அதை எடுத்து பயன்படுத்தி வந்தால், முடி உதிர்தல் மற்றும் இளநரை பிரச்சினை நீங்கும்.
இந்த பதிவும் உதவலாம்: தேங்காய் எண்ணெயால் உடலில் ஏற்படும் நன்மைகள்?
வெண்மையான பற்கள் :

மாங்கொட்டையை பல்பொடியாக பயன்படுத்தினால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி பிரகாசமாகும். மாம்பழ விதையை நன்கு வெயிலில் காயவைத்து அரைத்து, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பல் துலக்கி வந்தால், ஈறுகள் வலுவடைவதுடன் பற்கள் வெண்மையாக மாறும்.
வயிற்றுப்போக்கை சரி செய்யும் :
ஆயுர்வேதத்தின்படி, மாங்கொட்டையில் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உள்ளது. மாம்பழ விதையை பொடியாக்கி ஒரு நாளைக்கு 1-2 கிராம் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
உடல் பருமனை கட்டுப்படுத்தும் :
ஆய்வுகளின்படி, மாம்பழ விதை சாறு உடல் எடையை குறைக்கவும், உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது. அத்துடன் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்தத்தை சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: முடி உதிர்வதை தடுக்கும் இயற்கையான மூலிகை எண்ணெயை இனி வீட்டிலேயே செய்யலாம்!!!
கொலஸ்ட்ராலை குறைக்கும் :
மாம்பழ விதை பொடியை உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும். அத்துடன் இது சி-ரியாக்டிவ் புரத அளவையும் குறைக்க உதவுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதய நோய் அபாயத்தை குறைக்கும் :

நிபுணர்களின் கூற்றுப்படி, மாம்பழ விதை பொடியை அளவாக உட்கொண்டு வந்தால் இருதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் அபாயத்தை குறைக்கும் என கூறப்படுகிறது.
அடர்த்தியான தலைமுடி :
மாம்பழ விதை எண்ணெயில் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளதால் முடி சமந்தமான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு தரும்.
ஆரோக்கியமான சருமம் :
மாம்பழ விதை எண்ணெய் மற்றும் வெண்ணெய் சருமத்திற்கு நல்லது. இது ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் என்பதால், அழகுசாதன கிரீம்களில் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள மூலக்கூறுகள் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது. சரும வறட்சியை போக்க மாங்கொட்டை வெண்ணையை இரவில் தடவி வர சரும வறட்சி மற்றும் முகச்சுருக்கம் நீங்கும்.
சிறந்த லிப் பாம் :
மாங்கொட்டை வறண்ட உதடுகளை சரி செய்ய சிறந்த மூலம். நிபுணர்களின் கூற்றுப்படி, மாம்பழ விதை வெண்ணெய் ஒரு இயற்கையான லிப் பாம். இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. அத்துடன் உதட்டில் உள்ள கருமையை அகற்றவும் உதவுகிறது.
நீரிழிவு நோய்க்கு சிறந்தது :

மாங்கொட்டை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது குடல் மற்றும் கல்லீரலின் நொதிகளை மாற்றி குளுக்கோஸின் உறிஞ்சுதலைக் குறைத்து நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
முகப்பருவை நீக்கும் :
மாங்கொட்டை முகப்பருவுக்கு ஒரு சிறந்த நிவாரணி. மாம்பழ விதை போடி மற்றும் தக்காளி சேர்த்து முகத்தில் பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவு பெறுவதுடன், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை சரி செய்யும்.