Sat Sep 12, 2026 | 12:58 AM IST

Mango Seeds: மாங்கொட்டையில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!

What are mango seeds good for: முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பலம். இதை பிடிக்காதவர்களை பார்ப்பது அரிது. இயல்பாக, நாம் அனைவரும் மாம்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் விதையை கீழே தூக்கி எரிந்து விடுவோம். இல்லையெனில் வீட்டின் முற்றத்தில் மண்ணில் புதைத்து வைப்போம். ஆனால், மாம்பழத்தை விட மாங்கொட்டையில் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?..

ஆமாம், ஆயுர்வேதத்தில் பல்வேறு மருந்துகளுக்கு மா விதை பயன்படுத்தப்படுகிறது. மாம்பழ விதை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை உடலில் ஏற்படும் வீக்கங்களை சரி செய்கிறது. மேலும், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. அந்தவகையில், மாங்கொட்டையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Mullangi Benefits: கோடையில் முள்ளங்கி சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா?

பொடுகை நீக்கும்:

மாங்கொட்டை பொடுகை நீக்கும் தன்மை கொண்டது. மாம்பழ விதை வெண்ணையை தலைக்கு தேய்த்து வர பொடுகு தொல்லை நீங்கும். ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் ஸ்பூன் கடுகு எண்ணெய், 5 ஸ்பூன் மாங்கொட்டை எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து சூரிய ஒளியில் 2 நாட்களுக்கு வைக்கவும். பின்னர் அதை எடுத்து பயன்படுத்தி வந்தால், முடி உதிர்தல் மற்றும் இளநரை பிரச்சினை நீங்கும்.

வெண்மையான பற்கள்:

மாங்கொட்டையை பல்பொடியாக பயன்படுத்தினால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி பிரகாசமாகும். மாம்பழ விதையை நன்கு வெயிலில் காயவைத்து அரைத்து, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பல் துலக்கி வந்தால், ஈறுகள் வலுவடைவதுடன் பற்கள் வெண்மையாக மாறும்.

வயிற்றுப்போக்கை சரி செய்யும்:

ஆயுர்வேதத்தின்படி, மாங்கொட்டையில் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உள்ளது. மாம்பழ விதையை பொடியாக்கி ஒரு நாளைக்கு 1-2 கிராம் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.

இந்த பதிவும் உதவலாம் : Sabja Water Benefits: தினமும் வெறும் வயிற்றில் சப்ஜா நீர் குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?

உடல் பருமனை கட்டுப்படுத்தும்:

ஆய்வுகளின்படி, மாம்பழ விதை சாறு உடல் எடையை குறைக்கவும், உடலுக்கு தேவையான ஆற்றலையும் வழங்குகிறது. அத்துடன் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்தத்தை சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

கொலஸ்ட்ராலை குறைக்கும்:

மாம்பழ விதை பொடியை உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும். அத்துடன் இது சி-ரியாக்டிவ் புரத அளவையும் குறைக்க உதவுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதய நோய் அபாயத்தை குறைக்கும்:

நிபுணர்களின் கூற்றுப்படி, மாம்பழ விதை பொடியை அளவாக உட்கொண்டு வந்தால் இருதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் அபாயத்தை குறைக்கும் என கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Citrus Fruits After Meal: உணவுக்குப் பிறகு சிட்ரஸ் பழங்களை சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?

அடர்த்தியான தலைமுடி:

மாம்பழ விதை எண்ணெயில் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளதால் முடி சமந்தமான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு தரும்.

ஆரோக்கியமான சருமம்:

மாம்பழ விதை எண்ணெய் மற்றும் வெண்ணெய் சருமத்திற்கு நல்லது. இது ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் என்பதால், அழகுசாதன கிரீம்களில் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள மூலக்கூறுகள் சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது. சரும வறட்சியை போக்க மாங்கொட்டை வெண்ணையை இரவில் தடவி வர சரும வறட்சி மற்றும் முகச்சுருக்கம் நீங்கும்.

சிறந்த லிப் பாம்:

மாங்கொட்டை வறண்ட உதடுகளை சரி செய்ய சிறந்த மூலம். நிபுணர்களின் கூற்றுப்படி, மாம்பழ விதை வெண்ணெய் ஒரு இயற்கையான லிப் பாம். இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. அத்துடன் உதட்டில் உள்ள கருமையை அகற்றவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : சூடான அல்லது குளிர்ந்த நீரைக் குடிக்க சரியான நேரம் எது? ஆயுர்வேதம் கூறுவது இங்கே!

நீரிழிவு நோய்க்கு சிறந்தது:

மாங்கொட்டை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது குடல் மற்றும் கல்லீரலின் நொதிகளை மாற்றி குளுக்கோஸின் உறிஞ்சுதலைக் குறைத்து நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

முகப்பருவை நீக்கும்:

மாங்கொட்டை முகப்பருவுக்கு ஒரு சிறந்த நிவாரணி. மாம்பழ விதை போடி மற்றும் தக்காளி சேர்த்து முகத்தில் பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவு பெறுவதுடன், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை சரி செய்யும்.

Pic Courtesy: Freepik

Read Next

சூடான அல்லது குளிர்ந்த நீரைக் குடிக்க சரியான நேரம் எது? ஆயுர்வேதம் கூறுவது இங்கே!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content