Nettilingam Benefits: சாலையோர நெட்டிலிங்கம் மரம் அழகுக்கு அல்ல.. கொட்டிக்கிடக்கும் மருத்துவ நன்மைகள்!

போலி அசோக மரம் என குறிப்பிடப்படும் நெட்டிலிங்க மரத்தின் பயன்பாடு குறித்து பலரும் அறிந்திருப்பதில்லை, இதன் மருத்துவ பயன்பாடு என்ன, இது நாட்டில் வளருவதால் என்ன பலன்கள் உண்டு என்பதை அறிந்துக் கொள்ளலாம்.
  • SHARE
  • FOLLOW
Nettilingam Benefits: சாலையோர நெட்டிலிங்கம் மரம் அழகுக்கு அல்ல.. கொட்டிக்கிடக்கும் மருத்துவ நன்மைகள்!


Nettilingam Benefits: நெட்டிலிங்க மரத்தை பலர் அசோக மரம் என குறிப்பிடுகிறார்கள். ஆனால் இது அசோக மரம் கிடையாது, அசோக மரம் என்பது வேறு. இதன்காரணமாகவே இதை போலி அசோக மரம் என குறிப்பிடப்படுவது உண்டு. இந்த மரத்தை அசோகு எனவும் கூறப்படுவது உண்டு. இதன் அறிவியல் பெயர், குடும்ப வகைகள் உள்ளிட்டவைகளை பின்னர் பார்க்கலாம். அதற்கு முன் இதன் மருத்துவ பண்புகள் உள்ளிட்ட சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.

பொதுவாக ஒரு மரத்தின் பழங்களோ, காய்களோ காய்த்தால் அதற்கு மக்களிடையே பெரும் முக்கியத்துவம் கிடைக்கும். ஆனால் குறிப்பிட்ட மரங்கள் எதற்கு வளர்ந்து நிற்கிறது என்றே பலரும் அறிவதில்லை, காரணம், அந்த மரத்தில் காய்கள், பழங்கள் போன்ற எதுவும் இருக்காது. அத்தகைய ரீதியிலான ஒரு மரம்தான் நெட்டிலிங்க மரம். இந்த மரம் சாலையோரத்தில் உயரமாக வளர்ந்திருக்கும், இதை பலரும் அழகுக்கு என நினைப்பார்கள். ஆனால் இதுபோன்ற மரங்கள் வெறும் அழுகுக்காக மட்டும் இருப்பதில்லை.

மேலும் படிக்க: Nilavembu Benefits: பல நோய்களை விரட்டும் நிலவேம்பு.. நன்மைகளும்.. தீமைகளும்..

நெட்டிலிங்க மரம் என பெயர் வைக்க காரணம்

நெட்டிலிங்க மரம் என்பது அதன் பெயருக்கு ஏற்ப அடர்த்தியான இலைகளோடு உயரமான தோற்றத்தில் நீண்டதாக இருக்கும். நெட்டி+லிங்கம் என்பது போல் நெடிய உயரத்திலும், லிங்க வடிவில் கூம்பாக இருப்பதாலும் இதன் பெயரே நெட்டிலிங்க மரம் என அழைக்கப்படுவதாக கூறுவது உண்டு.

நெட்டிலிங்க மரம் பயன்பாடு

இந்த நெட்டிலிங்க மரமானது ஒலியால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பைக் குறைக்க உதவுகிறது. அதோடு இந்த மரத்தண்டு நேராக இருக்கும் காரத்தினால் படகுத் துடுப்பு, கரி எழுதுகோல், தீக்குச்சி, நடைத் தடி (நடப்பதற்கு உதவும் தடி) உள்ளிட்டவைகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.

nettilingam-in-tamil

நெட்டிலிங்க மரம் மருத்துவ குணங்கள்

இந்த நெட்டிலிங்க மரம் தான் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளால் ஏற்படக் கூடிய பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகிறது. சொரி, படை, வயிற்று கிருமி, அரிப்பு, வியர்வை துர்நாற்றம் போன்றவைகளை குணப்படுத்தும் தன்மை இந்த மரத்தின் மூலங்களுக்கு உண்டு.

குறிப்பாக கோடையில் ஏற்படக் கூடிய உடல் வெப்பத்தை குறைக்கவும் இந்த மரத்தின் மூலங்கள் உதவியாக இருக்கிறது. மேலும் பல்வேறு அரிதான வியாதிகளை குணப்படுத்தும் ஆய்விலும் இந்த மரத்தின் மூலங்கள்தான் உட்படுத்தப்பட்டு வருகிறது.

நெட்டிலிங்க இலைகள் நன்மைகள்

நெட்டிலிங்க மரத்தின் இலைகள் 10 எடுத்துக் கொண்டு, இதை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 1/4 லிட்டராக சுண்ட காய்ச்சி இதன் தண்ணீரலை 50 மில்லி என்ற வீதம் குடித்து வந்தால் வயிற்று பூச்சிகளை அடியோடு அகற்றலாம். உடல் வெப்பத்தை குறைப்பதற்கும் நன்மை பயக்கும். இந்த தண்ணீரை அளவாக குடிக்க வேண்டியது மிக முக்கியம். மேலும் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இந்த தண்ணீரை 15மில்லி அளவு தினசரி குடித்து வந்தால் சர்க்கரை பாதிப்புக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

நெட்டிலிங்க மர பட்டைகள் நன்மைகள்

அதேபோல் நெட்டிலிங்க மர பட்டைகளை தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும். கொளகொளவென வரும் வரை காய்ச்சிக் கொள்ளவும். பின் இதை படை, அரிப்பு உள்ள இடங்களில் நன்றாக தேய்த்து வந்தால், இதுபோன்ற பிரச்சனைகள் அடியோடு நீங்கக் கூடும்.

நெட்டிலிங்க மரம் பாதிப்புகள்

இந்த மரங்கள் படர்ந்து விரிந்து வளர்ந்து நிழல்கள் தராது. இருப்பினும் இது 6 அடி இடைவெளி விட்டு வளர்க்கலாம். இது நெடு உயரமாக வளர்ந்து நீண்ட தூர நிழல்கள் தரக்கூடியது. பிற மரங்களுக்கு அடியில் அமர்ந்து நிழல் பெறுவது போல் இந்த மரத்தில் பெற முடியாது. நன்கு வடிகால் உள்ள பகுதிகளில் இந்த மரம் சிறப்பாக வளரும் என கூறப்படுகிறது. பிற இடங்களில் வளருவதற்கு சற்று போராடக்கூடும். தென்னை மரம், பனை மரம் போல் இந்த மரத்தில் இளநீர், நுங்கு போன்றவை காய்க்காது. இதனால் இந்த மரத்தை நீண்ட காலம் பராமரித்தாலும் இதன்மூலம் அனுபவிப்பது என்பது குறைவுதான்.

மேலும் படிக்க: அல்சர் முதல் சரும ஆரோக்கியம் வரை.. ஆடாதோடையின் மருத்துவ நன்மைகளும் அதன் பக்க விளைவுகளும் இங்கே

பூஞ்சை கிருமிகளை அடியோடு அழிக்க உதவும் நெட்டிலிங்க மரம்

அதேபோல் நெட்டிலிங்க மரத்தின் இலைகளை அரைத்து சொறி, படை, அலர்ஜி, அரிப்பு உள்ளி இடங்களில் தடவி வந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் அடியோடு நீங்கும். இந்த இலையை அரைத்து தடவி 1 மணி நேரத்திற்கு பின்பு கழுவ வேண்டும்.

இந்த மரத்தின் மூலங்களானது பூஞ்சை தொற்று, உடலின் வெளிப்புற கிருமி பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.

இந்த மரத்தில் இருந்து எடுக்கக் கூடிய அனைத்து கசாயம் போன்ற வகைகளை அளவாகத் தான் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதை பயன்படுத்துவதற்கு முன் வேறு ஏதும் உடல் ரீதியாக பிரச்சனை இருந்தால் ஆயுர்வேத சித்த மருத்துவரை அணுகிய பின்பே இதை பயன்படுத்தவும்.

image source: social media

Read Next

தர்பூசணி, வாழைப்பழம் இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாமா? - ஆயுர்வேதம் சொல்வது என்ன?

Disclaimer

குறிச்சொற்கள்