Doctor Verified

பெருங்காயத்தில் இவ்வளவு மகிமை இருக்கா.? மருத்துவர் விளக்கம்..

பெருங்காயத்தின் உண்மையான மருத்துவ குணங்கள் என்ன? செரிமானத்திற்கு மட்டுமல்ல, வைரஸ் தொற்றுகளையும் கட்டுப்படுத்தும் சக்தி எப்படி உள்ளது? மருத்துவர் சிவராமன் கூறும் வரலாறு, மருத்துவ நன்மைகள், கலப்பட எச்சரிக்கை பற்றிய முழுமையான தகவல்.
  • SHARE
  • FOLLOW
பெருங்காயத்தில் இவ்வளவு மகிமை இருக்கா.? மருத்துவர் விளக்கம்..

நம் சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பெருங்காயம் (Hing/Asafoetida) செரிமானத்திற்கு உதவும் ஒரு சாதாரண மசாலா என்று பலர் நினைக்கிறார்கள். மோரில் சிறிதளவு சேர்த்து குடிப்பதால் வாயுத் தொல்லை குறையும் என்பது நமக்குத் தெரிந்த பரவலான நம்பிக்கை. ஆனால், பெருங்காயத்தின் மருத்துவ திறன் இதை விட பல மடங்கு அதிகமானதாக இருப்பதை மருத்துவர் சிவராமன் புதிய தகவல்களுடன் விளக்குகிறார்.


முக்கியமான குறிப்புகள்:-


Video Link: https://youtu.be/5_23MDCF33E

வைரஸ் தொற்றுகளையும் அடக்கும் சக்தி – ஆய்வில் கண்டுபிடிப்பு

கோவிட்-19 பரவிய காலத்தில், வைரஸ்களை தடுக்கும் இயற்கை மருந்துகள் பற்றிய ஆராய்ச்சிகள் உலகளாவிய முறையில் நடைபெற்றன. அதேபோல், பழைய கால ஆய்வுகளில் பெருங்காயம் வைரஸ் பரவலைத் தடுக்கக்கூடிய சக்தி கொண்டது என்று கண்டுபிடிக்கப்பட்டதாக மருத்துவர் சிவராமன் குறிப்பிடுகிறார்.

ஸ்பானிஷ் ஃப்ளூ காலத்தைச் சேர்ந்த வரலாற்று ரகசியம்

1918-1920 களில் உலகை உலுக்கிய ஸ்பானிஷ் ஃப்ளூ பரவிய போது, ஆங்கிலேயர்கள் பெருங்காயத்தை கயிற்றில் தொங்கவிட்டு அதை கழுத்தில் அணிந்து சுற்றித் திரிந்ததாக மருத்துவர் தகவல் தருகிறார். அப்போது இது ஒரு வகை தடுப்பு மருத்துவ முறையாக பயன்படுத்தப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. அந்த காலத்தில் அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் ப்ரூக்லின் பகுதியில் பெருங்காய தொழிற்சாலை இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

அதன் கடும் வாசனையால், அந்நியர்கள் பெருங்காயத்தை “பிசாசின் மலம்” என்று கூட நகைச்சுவையாக்கி பெயர் வைத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் பின்னர், பல்கலைக்கழக ஆய்வுகள் பெருங்காயம் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளதைக் கண்டறிந்ததால், அதற்கு “கடவுளின் மாமருந்து” என்ற பெயர் கிடைத்தது.

இந்த பதிவும் உதவலாம்: நன்றாக பல் துலக்கியாலும் வாய் துர்நாற்றமா.? பிரச்னை வாயில் இல்லை.. குடல் மற்றும் கல்லீரலில்.!

உண்மையான பெருங்காயத்தின் மருத்துவ தன்மை

மருத்துவர் சிவராமன் கூறுவதுபடி, இயற்கையான, கலப்படமில்லாத பெருங்காயத்தில் மிகுந்த காரத்தன்மை, வலுவான வாசனை இருக்கும். அதுவே அதில் உள்ள மருத்துவ குணங்களின் அடையாளம் என்று அவர் விளக்குகிறார்.

கலப்பட எச்சரிக்கை – இன்று விற்கப்படும் “கூட்டுப் பெருங்காயம்”

இன்றைய சந்தையில் கிடைக்கும் பெருங்காயங்களில் பலவற்றில் மைதா, மாவு, சர்க்கரைப் பொருட்கள் கலக்கப்படுவதாக அவர் எச்சரிக்கிறார். இத்தகைய கலப்படம் மருத்துவ குணங்களை பெருமளவில் குறைக்கும் என்பதால், சுத்தமான, உண்மையான பெருங்காயம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.

இறுதியாக..

அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் பெருங்காயம், உண்மையில் உடல் நலனுக்குத் தேவையான பல மருத்துவக் குணங்கள் கொண்டது. செரிமானத்தை சீராக்குவது மட்டுமின்றி, பழைய ஆய்வுகள் காட்டும் வைரஸ் தடுப்பு திறன் வரை இதன் மகிமை செல்கிறது. இந்நிலையில், கலப்படமற்ற உண்மையான பெருங்காயத்தை தெரிவு செய்வது மட்டுமே நம் ஆரோக்கியத்திற்கு நீண்டநாள் பயன் தரும்.

Disclaimer: இந்தக் கட்டுரை மருத்துவ நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட பொது தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களைப் பின்பற்றுவதற்கு முன், உங்கள் மருத்துவரை அல்லது உடல்நல நிபுணரை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Read Next

தயிருடன் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 அதிசய நன்மைகள் — நிபுணர் விளக்கம்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 24, 2025 21:04 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்