Thu Oct 29, 2026 | 10:50 AM IST

Doctor Verified

நன்றாக பல் துலக்கியாலும் வாய் துர்நாற்றமா.? பிரச்னை வாயில் இல்லை.. குடல் மற்றும் கல்லீரலில்.!

வாய் துர்நாற்றம் சாதாரண பிரச்னை அல்ல. நாள் முழுவதும் நீடிக்கும் துர்நாற்றம், குடல் மற்றும் கல்லீரல் நச்சுப்பொருள் தேக்கம், H. pylori, கேண்டிடா போன்ற தொற்றுகளின் அறிகுறி என்கிறார் மருத்துவர் தீபா. காரணங்கள், தீர்வு, வீட்டுவழி மருத்துவம் அனைத்தும் இங்கே.
நன்றாக பல் துலக்கியாலும் வாய் துர்நாற்றமா.? பிரச்னை வாயில் இல்லை.. குடல் மற்றும் கல்லீரலில்.!நன்றாக பல் துலக்கியாலும் வாய் துர்நாற்றமா.? பிரச்னை வாயில் இல்லை.. குடல் மற்றும் கல்லீரலில்.!

நாம் எவ்வளவு நேரப் பல் துலக்கினாலும், சுவை வாய்வாசம் பயன்படுத்தினாலும், சிலருக்கு நாள் முழுவதும் வாய் துர்நாற்றம் தொடர்ந்து தொந்தரவு செய்கிறது. இது சாதாரண வாய்நீர் பிரச்னை மட்டுமல்ல; உடலினுள் நடைபெறும் மாற்றங்களின் எச்சரிக்கை சிக்னலாக இருக்கலாம் என மருத்துவர் தீபா எச்சரிக்கிறார்.

Video Link: https://youtu.be/4XzT0l2cH7E

வாய் துர்நாற்றம் எப்படி உருவாகிறது?

இரவில் தூங்கும்போது உமிழ்நீர் சுரப்பு குறைகிறது. இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வேகமாக அதிகரித்து காலையில் துர்நாற்றம் ஏற்படுகிறது. காலை பல் துலக்கினால் இது குறையும். ஆனால் நாள் முழுவதும் துர்நாற்றம் நீடித்தால் அது வாயின் பிரச்னை அல்ல… உடலின் உள்ளக கோளாறுகள் காரணம்.

வாயில் உள்ள பிரச்சனைகள்

* சொத்தைப் பற்கள்

* ஈறு அலெர்ஜி

* ஆறாத வாய்புண்கள்

* அதிக பாக்டீரியா தேக்கம்

இவை அனைத்தும் வாய்நாற்றத்தை அதிகரிக்கும்.

குடல் – கல்லீரல் பிரச்னைகள் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துமா?

மருத்துவர் தீபாவின் கூற்றுப்படி, நீடித்த வாய் துர்நாற்றம் பெரும்பாலும் கல்லீரல் நச்சுப்பொருள் தேக்கம் மற்றும் குடல் பாக்டீரியா சமநிலை குலைவு காரணமாக ஏற்படும்.

முக்கிய காரணிகள்:

* கல்லீரலில் நச்சுப்பொருள் தேக்கம்

* குடலில் நல்ல/கெட்ட பாக்டீரியா சமநிலை பாதிப்பு

* H. Pylori தொற்று

* Candida yeast infection

* செரிமான கோளாறுகள்

இந்த பதிவும் உதவலாம்: காலை எழுந்ததும் வீங்கிய முகமா? இதிலிருந்து விடுபட ஹார்மோன் சமநிலைப்படுத்தும் டிடாக்ஸ் டீ குடிங்க

கல்லீரல் பாதிக்கப்பட்டிருக்கிறதா? அறிகுறிகள் இவை!

* அடிக்கடி Allergy

* செரிமானம் கடினம், மலச்சிக்கல்

* காலையில் அதிக சோர்வு

* இரவில் அதிக பசி

* Fatty Liver பிரச்னை

* தோலில் சிவப்பு/அரிப்பு

* வயிறு மட்டும் பெரிதாக காணப்படும் (பொட்டையாக)

வாய் துர்நாற்றத்திற்கான மிக எளிய வீட்டு வைத்தியம்

விலையுயர்ந்த mouthwash தேவையில்லை; சமையலறையிலேயே தீர்வு உள்ளது!

* காலையில் வெறும் வயிற்றில் 5 துளசி இலைகள் + வெதுவெதுப்பான நீர்

* காலை பல் துலக்கவும்

* 5 துளசி இலைகளை நன்றாக மென்று தின்று விடவும்

* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் குடிக்கவும்

இதன் நன்மைகள்:

* கல்லீரலில் உள்ள நச்சுகள் நீங்கும்

* கல்லீரல் செயல்பாடு மேம்படும்

* H. pylori, Candida போன்ற பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப்படும்

* குடல் நலத்திற்கான நல்ல பாக்டீரியா அதிகரிக்கும்

* செரிமானம் சீராகும்

இறுதியாக..

வாய் துர்நாற்றம் சாதாரண பிரச்னை போலத் தோன்றினாலும், அது பெரும்பாலும் குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியம் சரியில்லையென்பதற்கான எச்சரிக்கை. துளசி + வெதுவெதுப்பான நீர் போன்ற எளிய இயற்கை முறைகள் உடலின் நச்சுகளை வெளியேற்றி, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும். உடனடி mouth freshener தீர்வு அல்ல.. உடலின் உள்ளார்ந்த பிரச்னையைச் சரி செய்தால்தான் நீண்டநாள் நிவாரணம் கிடைக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் மருத்துவர்களிடமே இருந்து பெறப்பட்ட பொது வழிகாட்டுதல்கள். உடல்நலப் பிரச்னைகள் இருந்தால், இந்த முறைகளைப் பின்பற்றுவதற்கு முன் உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

Read Next

→ தேன் தடவினால் புண் ஆறுமா.? மருத்துவர் விளக்கம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 24, 2025 12:44 IST

    Published By : Ishvarya Gurumurthy