Doctor Verified

தேன் தடவினால் புண் ஆறுமா.? மருத்துவர் விளக்கம்..

தேன் உண்மையில் புண்களை ஆற்றும் இயற்கை ஆன்டிபயாட்டிக்கா? மருத்துவ நிபுணர் டாக்டர் சாந்தோஷ் ஜேக்கப் வழங்கும் விளக்கம், தேனின் கிருமிநாசினி பண்புகள், எப்போது பயன்படுத்தலாம், எப்போது தவிர்க்க வேண்டும், மருத்துவ தர தேன் ஏன் அவசியம் – அனைத்தும் இங்கே.
  • SHARE
  • FOLLOW
தேன் தடவினால் புண் ஆறுமா.? மருத்துவர் விளக்கம்..

புண்கள் மற்றும் எரிபுண்களுக்கு வீட்டிலேயே பயன்படுத்தப்படும் வழக்கமான நாட்டு மருந்துகளில் முதன்மையானது தேன். ஆனால், தேன் உண்மையிலேயே புண்களை ஆற்றும் இயற்கை ஆன்டிபயாட்டிக்கா? இதற்கான அறிவியல் விளக்கங்களை Muscle Centric Orthopedic & Sports Surgeon டாக்டர் சாந்தோஷ் ஜேக்கப் பகிர்ந்துள்ளார்.


முக்கியமான குறிப்புகள்:-


தேனின் கிருமிநாசினி சக்தி – எப்படி வேலை செய்கிறது?

தேன் ஆயிரம் ஆண்டுகளாக புண் ஆற்ற பயன்படுத்தப்பட்டாலும், அதன் செயல்பாட்டிற்கு உறுதியான காரணங்களும் உள்ளன.

* தேன் புண் திரவத்துடன் (wound fluid) கலந்தவுடன், மெதுவாக Hydrogen Peroxide வெளியிடப்படுகிறது. இது பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி கொண்டது.

* தேன் pH அளவு 3.2–4.5. இந்த அமில சூழல் பாக்டீரியா வளர்வதை தடுக்கிறது.

* மருத்துவ தரத் தேனில் (medical grade honey) MGO அதிகமாக இருக்கும். இது தேனை ஒரு வலுவான இயற்கை ஆன்டிபயாட்டிக் ஆக்குகிறது.

முக்கிய எச்சரிக்கை — ரா ஹனி (Raw Honey) ஏன் அபாயம்?

டாக்டர் சாந்தோஷ் ஜேக்கப் கூறுவதில் மிக முக்கியமான பகுதி:

* Raw Honey–யில் Clostridium என்ற பாக்டீரியா முளை (spores) இருக்க வாய்ப்பு அதிகம்

* இது “Wound Botulism” எனப்படும் ஆபத்தான தொற்றை ஏற்படுத்தும்

* அதனால் புண்களுக்கு தேன் பயன்படுத்த வேண்டுமெனில்
Medical Grade Honey (UMF 10+ அல்லது அதற்கு மேல்) பயன்படுத்த வேண்டும்

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கும் 5 சிறந்த மூலிகை டீக்கள் – மருத்துவர் பரிந்துரை

புண்களில் தேன் பயன்படுத்தும் சரியான முறை

மருத்துவ தரத் தேனைப் பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் முறையை சரியாக பின்பற்றுவது முக்கியம்.

* புண்னை சுத்தமாக கழுவவும். தண்ணீர் அல்லது உப்பு நீரால் புண்னை சுத்தம் செய்யவும்.

* மெதுவாக தேனை தடவவும். மெல்லிய படலமாக தேனை பூசவேண்டும்.

* ஸ்டெரைல் டிரஸ்சிங் போடவும். புண்னை கிருமி நாசினி துணியால் மூடவும்.

* தினமும் டிரஸ்சிங் மாற்றவும். அல்லது நனைந்துவிட்டால் உடனே மாற்றவும்.

* தொற்று அறிகுறிகளை கவனிக்கவும். சிவப்பு, வீக்கம், புண் நீர்/புழு வெளியே வருதல் - இவை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

View this post on Instagram

A post shared by Dr Santhosh Jacob MBBS.,DNB,MCh Ortho, DABRM (USA) (@drsanthoshjacobacademy)

ஆய்வு என்ன சொல்கிறது? – Cochrane Review ஆதாரம்

உலகளவில் மதிப்புமிக்க ஆய்வு தொகுப்பான Cochrane Review படி, சிறிய எரிபுண்கள், மேலோட்டு தோல் காயங்களுக்கு தேன் உதவிகரமானது. ஆனால் ஆழமான புண்கள், தசை/நரம்பு பாதிக்கும் காயங்களுக்கு இது பொருந்தாது. அதனால் “வீட்டு மருந்து” என்ற காரணத்தால் ஆழமான காயங்களில் தேனைப் பயன்படுத்தக் கூடாது.

இறுதியாக..

தேன் புண்களை ஆற்ற உதவும் இயற்கையான கிருமிநாசினி என்றாலும், Raw Honey-ஐ நேரடியாகப் பயன்படுத்துவது அபாயம். Medical Grade Honey மட்டுமே பாதுகாப்பானது மற்றும் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டது. சிறு காயங்கள், எரிபுண்கள், மேலோட்டு தோல் புண்களுக்கு தேன் பயன்படலாம். ஆனால் ஆழமான புண்கள், அதிக இரத்தப்போக்கு, நீரிழிவு நோயாளிகளின் புண்கள் – இவற்றில் மருத்துவரின் சிகிச்சை மட்டுமே சரியானது.

Disclaimer: இந்த கட்டுரை மருத்துவ ஆலோசனை அல்ல. புண்கள், எரிபுண்கள் அல்லது எந்தவிதமான தோல் பாதிப்பாக இருந்தாலும், தேன் பயன்படுத்துவதற்கு முன் அல்லது பயன்படுத்திய பின்னர் பிரச்சனை தோன்றினால் ஒரு தகுதி பெற்ற மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.

Read Next

சிறுநீரக நோயாளிகள் தினை சாப்பிடலாமா?

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Nov 23, 2025 15:46 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்