Doctor Verified

ஆட்டின் வயிறு, குடல் சாப்பிடலாமா? – உடல் எடை குறைய உதவுமா? நிபுணர் விளக்கம்!

ஆட்டின் வயிறும் குடலும் எடை குறைப்புக்கு உதவுமா? கலோரி அளவு, சத்துக்கள், அபாயங்கள் குறித்து டாக்டர் சாந்தோஷ் ஜேக்கப் பகிர்ந்த முக்கிய தகவல்கள் இங்கே.
  • SHARE
  • FOLLOW
ஆட்டின் வயிறு, குடல் சாப்பிடலாமா? – உடல் எடை குறைய உதவுமா? நிபுணர் விளக்கம்!


எடை குறைக்க விரும்புவோர் பல்வேறு உணவுப் பழக்கங்களைப் பின்பற்றி வருகிறார்கள். குறிப்பாக, ஆட்டிறைச்சியுடன் ஒப்பிடும்போது, ஆட்டின் வயிறும் (Tripe) குடலும் (Intestine) குறைவான கலோரியைக் கொண்டதாக இருப்பதால், எடை குறைப்பு முயற்சிகளில் இடம் பெறக் கூடுமா என்ற கேள்வி எழுகிறது. இதுகுறித்து ORTHOPEDIC & SPORTS SURGEON, டாக்டர் சாந்தோஷ் ஜேக்கப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த தகவல்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

Video: >

ஆட்டின் வயிறு (Tripe)

* 100 கிராம் = சுமார் 90 கலோரி

* புரதம் – 10 முதல் 12 கிராம்

* கொழுப்பு – 3 முதல் 4 கிராம்

சாதாரண ஆட்டிறைச்சியை விட குறைவான கலோரியுடன், சத்தான விருப்பமாக கருதப்படுகிறது.

artical  - 2025-08-28T114651.747

ஆட்டின் குடல் (Intestine)

* 100 கிராம் = சுமார் 110–120 கலோரி

* புரதம் – 10 முதல் 12 கிராம்

* கொழுப்பு – 6 முதல் 8 கிராம்

வயிறுடன் ஒப்பிடும்போது சற்று அதிக கலோரி கொண்டாலும், ஆட்டிறைச்சியைவிட குறைவு.

சத்துக்கள்

* வைட்டமின் B, சிங்க், செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்தவை.

* கொலாஜன் & எலாஸ்டின் இருப்பதால், தனித்துவமான மென்மையான (chewy) உணர்வு கிடைக்கிறது.

கவனிக்க வேண்டியவை

* முறையாக சுத்தம் செய்யாமல் சாப்பிட்டால் தொற்று அபாயம் உள்ளது.

* கொலஸ்ட்ரால் அளவு அதிகம் – அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது.

* உயர் இரத்த அழுத்தம், இதய நோய், அதிக கொலஸ்ட்ரால் கொண்டவர்கள் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: அடி தூள்.. ஆட்டு இரத்தத்தில் இப்படி ஒரு விஷயம் இருக்கா.? இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. 

மருத்துவர் கூறியதாவது,

* வாரத்தில் ஒருமுறை மட்டுமே எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது.

* ஆட்டிறைச்சியைவிட குறைவான கலோரியுடன், போதுமான புரதத்தை வழங்கும்.

* எடை குறைப்பில் உதவக்கூடிய ஒரு சத்தான விருப்பம் எனலாம்.

இறுதியாக..

ஆட்டின் வயிறும் குடலும் எடை குறைப்புக்கான சத்தான விருப்பமாக இருக்கலாம். ஆனால், அளவோடு, முறையாக சமைத்து சாப்பிடுவது மட்டுமே உடல்நலத்திற்கு பாதுகாப்பானது.

Disclaimer: இந்த தகவல் மருத்துவர்களின் பொதுப் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டது. இது மருத்துவ ஆலோசனை அல்ல. உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சினைகள் இருந்தால், உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்வதற்கு முன் மருத்துவரை அணுகவும்.

Read Next

இத சாப்பிடுங்க.. parkinson, alzheimer, போன்ற மூளை நோய்கள் வராது.. ஆயுர்வேத நிபுணர் பரிந்துரை.!

Disclaimer

குறிச்சொற்கள்