Health Benefits Of Buttermilk In Summer: வெயில் நாளுக்கு நாள் சுட்டெரிக்கிறது. இந்நிலையில், வேலை நிமித்தமாக வெளியூர் சென்ற பலர், கோடை வெயிலில் இருந்து விடுபட, குளிர்பானம் அருந்துகின்றனர். இவற்றைக் குடிப்பதால் உடனடி நிவாரணம் கிடைத்தாலும், பிற்காலத்தில் அவை பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
வெயிலில் செல்லும் போதோ, வீட்டில் இருக்கும்போதோ குளிர் பானங்களுக்குப் பதிலாக மோர் அருந்துவது நல்லது என சுகாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சுட்டெரிக்கும் வெயிலில் இருப்பவர்களுக்கு மோர் கொடுப்பது நிவாரணம் தரும். கோடை காலத்தில் மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.

செரிமானத்தை மேம்படுத்துகிறது
மோரில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, வயிற்றுக்கு நன்மை செய்யும் லாக்டோபாகிலஸ் போன்ற பாக்டீரியாக்கள் இதில் நிறைந்துள்ளன. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த இது மிகவும் உதவியாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மோர் உட்கொள்வதன் மூலம் வயிற்று உப்புசம், அஜீரணம், வாயுத் தொல்லை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்னைகள் குறையும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: Curd Vs Buttermilk: தயிர் Vs மோர் - இதில் எது உடலுக்கு நல்லது?
நீரேற்றமாக வைக்கிறது
கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். ஏனெனில் சூரிய வெப்பம் அதிகமாக வியர்வையை உண்டாக்கி நீரிழப்புக்கு வழிவகுக்கும். எனவே, இது போன்ற பிரச்னையை தடுக்க மோர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.
எலும்புகளை வலுவாக்கும்
மோர் குடிப்பதால் கிடைக்கும் மற்றொரு ஆரோக்கிய நன்மை என்னவென்றால், அது எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்குகிறது. இதில் உள்ள கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். தொடர்ந்து மோர் உட்கொள்வது உங்கள் தினசரி கால்சியம் தேவையை பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்லாமல், புத்துணர்ச்சியுடன் இருக்கவும் உதவும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்
கோடையில் குளிர்ந்த மோர் குடிப்பதால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும். உடல் வெப்பநிலையை மிக நன்றாகக் கட்டுப்படுத்த உதவுகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், மோரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுவதாக கூறப்படுகிறது.
Image Source: Freepik