$
சரியான உணவுமுறை இல்லாவிட்டால், மாரடைப்பு, இதய நோய், சர்க்கரை நோய் போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரச்சனைகள் அதிகரிக்கலாம். எனவே காலை உணவை எப்படி, எப்போது சாப்பிட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.
காலை உணவோடு நாள் தொடங்குவது, நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. காலை உணவு அவசியம். ஆனால் பரபரப்பான வாழ்க்கையில், பலர் கடிகாரத்திற்கு சமமாக ஓடுகின்றனர். நேரமின்மையால் பலர் காலை உணவைத் தவிர்த்து விடுகிறார்கள்.

இதையும் படிங்க: Fitness: காலையில் உடற்பயிற்சி உயிருக்கே உலை வைக்கும்… ஷாக்கிங் ரிப்போர்ட்!
காலை உணவை சரியான நேரத்திற்கு எடுத்துக் கொண்டாலும், தவறு செய்தால் அது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். காலை உணவு உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். அதைத் தவிர்த்தால், உடல் எடை அதிகரிப்பு, மாரடைப்பு, இதய நோய், சர்க்கரை நோய் போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரச்சனைகள் அதிகரிக்கலாம். எனவே காலை உணவை எப்படி, எப்போது சாப்பிட வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்.
ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்து படி, “காலை உணவு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கக்கூடாது. ஒரு வழக்கமான காலை உணவில் ஒரு கிண்ணம் அல்லது 5-8 டீஸ்பூன் முழு தானியங்கள், 10-15 கிராம் லீன் புரதம் மற்றும் ஒரு கிளாஸ் சாறு ஆகியவை இருக்க வேண்டும்” என பரிந்துரைக்கின்றனர்.
கார்போஹைட்ரேட், புரதம் இல்லாத காலை உணவு:
ஊட்டச்சத்து மிக்க உணவுகளை விரும்புவோர் கூட, தங்களது காலை உணவில் கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதில்லை. இது அவர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கக்கூடியது. சரியான காலை உணவு உடலில் கொழுப்புகளை அதிகரிக்காமல் ஆற்றலைத் தக்கவைக்க உதவுகிறது. இரத்த சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும்.
குறைவாக சாப்பிடுவது:
ஒரு பழம் அல்லது சிறிய அளவிலான காலை உணவை சாப்பிடுவது உங்களுக்கு பசியை உண்டாக்கும் மற்றும் உங்கள் மன கவனத்தை பாதிக்கும்.
பகலில் போதுமான கலோரிகளை உண்ணாததால், நாளின் பிற்பகுதியில் ஆரோக்கியமற்ற ஆதின்பண்டங்களை நீங்கள் சாப்பிடலாம். இதனால் எடை அதிகரிக்கக்கூடும்.

அதேசமயம் வயிற்றை முழுவதுமாக நிரப்பும் வகையிலான ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்வது, உங்கள் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது மற்றும் நாள் முழுவதும் கலோரிகளை எரிக்க உதவுகிறது.
தாமதமாக காலை உணவை உட்கொள்வது:
இரவில் தாமதமாக சாப்பிடுவது அல்லது புதிய உணவை முயற்சிப்பது, காலை உணவை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொள்வதில் தடையை ஏற்படுத்துகிறது. அதேபோல் காலை உணவை தாமதமாக எடுத்துக்கொள்வதும் உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்காது. காலையில் எழுந்தவுடன் ஒரு மணி நேரத்திற்குள் காலை உணவை சாப்பிட வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

ஒருவேளை காலை உணவை சாப்பிடாமல் விட்டாலோ அல்லது தாமதமாக சாப்பிட்டாலோ உங்கள் வளர்சிதை மாற்றத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், உயர் இரத்த கொழுப்பு, இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற உடல்நலப் பிரச்சினைகளை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
அதேசமயம் சமச்சீரான காலை உணவு இந்த அபாயங்களைக் குறைத்து, நாள் முழுவதும் உங்களுக்கு எனர்ஜியாக விளங்குகிறது.
அவசர அவசரமாக சாப்பிடுவது:
காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி, வேலை என பலவகையான விஷயங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால், அவசர அவசரமாக எதையாவது சாப்பிட்டுவிட்டு ஓடும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு.

சில ஆய்வுகளின்படி, இது உடல் பருமனை அதிகரிக்கிறது, ஏனெனில் இது அதிகப்படியான உணவுக்கு வழிவகுக்கும்.
மேலும், ஆயுர்வேதத்தின்படி, நீங்கள் உட்கார்ந்து உணவை உண்ணும் போது, அதை சரியாக மென்று சாப்பிடுவது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது. எனவே வேகத்தைக் குறைத்து, ஒவ்வொரு காலை உணவையும் ருசித்து ரசித்து சாப்பிடுங்கள்.
Image Source: Freepik