Liver Healthy Foods: மனித உடலுக்கு ஒவ்வொரு உறுப்புகளும் மிக முக்கியம். பல்வேறு உடல் உறுப்புகள் ஒருங்கிணைந்ததே ஒரு மனித உடல். இதில் எந்த ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டாலும் அது மொத்த உடல் பாகத்தையும் உடல் செயல்பாட்டையும் பாதிக்கும். இதில் ஒன்றுதான் கல்லீரல். கல்லீரல் பாதிக்கப்படும் போது மஞ்சள் காமாலை, அஜீரணக் கோளாறு, சோர்வு, தலைச்சுற்றல் போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்கும். கல்லீரல் பணிகளை தெரிந்துக் கொண்டு அதை ஆரோக்கியமாக வைத்திருக்கக் கூடிய வழிமுறைகளை விரிவாக பார்க்கலாம்.
கல்லீரல் செயல்பாடுகள்
கல்லீரல் நாம் சாப்பிடும் உணவை செரிமானமாக்கி உணவில் இருக்கும் சக்தியை சேகரித்து சேமித்து வைக்கிறது. ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. நாம் ஓய்வாக இருக்கும் போதும் கல்லீரல் தன்னுடைய சுத்திகரிப்பு பணியைச் செய்து உடலில் இருக்கும் கழிவுகளை பிரித்து சிறுநீரகத்துக்கு அனுப்பி வெளியேற்றுகிறது.
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க என்ன சாப்பிடலாம்?

மனித உடல் உறுப்புகள் அனைத்துமே முக்கியமானவை. செரிமானத்துக்கு தேவையான பித்த நீரைச் சுரக்கும் பணியை செய்கிறது கல்லீரல். உடலில் இருக்கும் முக்கிய உறுப்புகளான இதயம், சிறுநீரகம், கண்கள் போன்ற உறுப்புகளை மாற்றி விடலாம்.
பித்தப்பை, கர்ப்பப்பை போன்ற உறுப்புகளை நீக்கிய பிறகும் வாழலாம். ஆனால் கல்லீரல் பாதிப்படைந்தால் அதாவது 70சதவீதம் வரை பாதிப்படைந்தாலும் உரிய உணவுக் கட்டுப்பாடும் சிகிச்சையும் மேற்கொள்ளும் போது கல்லீரல் சுயமாகவே மீண்டுவரும்.
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க சில விஷயங்களை பின்பற்ற வேண்டியது அவசியம். கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அத்தகைய உணவு வகைகளை பார்க்கலாம்.
டீ குடிக்கலாம்
டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம். பிளாக் டீ மற்றும் கிரீன் டீ கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது கொழுப்பு அளவை மேம்படுத்துகிறது, தேநீர் வழக்கமான நுகர்வு கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக கிரீன் டீ கல்லீரலுக்கு உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது மற்றும் கல்லீரல் கொழுப்பைக் குறைக்கிறது.
பழ வகைகளை சாப்பிடலாம்
பழங்கள் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. பழங்களால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பழங்களை குறைவாக உட்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை உட்கொண்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். வைட்டமின் சி கல்லீரலில் கொழுப்பு சேர்வதை தடுக்க உதவுகிறது. எனவே வைட்டமின் சி உள்ள பொருட்களை தொடர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி உள்ளது. அதேபோல், திராட்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், கல்லீரலையும் பாதுகாக்கிறது. இவற்றுடன் நெல்லி, ப்ளுபெர்ரி போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். இவை கல்லீரல் பிரச்சனைகளையும் தடுக்கிறது.
ஓட்ஸ் நன்மைகள்
ஓட்ஸ் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பலர் காலை உணவாக ஓட்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். ஓட்ஸில் உண்மையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
ஆரோக்கியமான கல்லீரலுக்கு ஓட்ஸ் மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல், நார்ச்சத்து நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளையும் உட்கொள்ளலாம். கல்லீரலுக்கும் மிகவும் நல்லது. எனவே இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
காபி ஆரோக்கிய நன்மைகள்
மிதமான அளவில் காபி குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். தினமும் ஒரு கப் காபி குடிப்பதால் மன அழுத்தத்தை குறைக்கலாம் மற்றும் பல வகையான உடல்நல பிரச்சனைகளுக்கு காபி மூலம் தீர்வு காணலாம்.
கல்லீரல் பிரச்சனைகளை தீர்க்க காபி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கல்லீரல் பாதிப்பைத் தடுக்க காபி நமக்கு உதவுகிறது, எனவே கல்லீரல் புற்றுநோயைத் தவிர்க்க, காபியை சரியான முறையில் தயாரித்து உட்கொள்ள வேண்டும்.
காய்கறிகள் சாப்பிடலாம்
காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். காய்கறிகள் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. காய்கறிகள் சாப்பிடுவதால் கல்லீரல் ஆரோக்கியமும் மேம்படும்.
குறிப்பாக ப்ரோக்கோலி, காலிஃபிளவர், கீரை போன்ற உணவுகளை சாப்பிட்டால் கல்லீரல் பிரச்சனைகள் வராது. இந்த காய்கறிகள் நல்ல கல்லீரல் செயல்பாட்டை உறுதி செய்கிறது. எனவே இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.இதன் மூலம் கல்லீரல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். கல்லீரல் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
நட்ஸ்
பல பிரச்சனைகளுக்கு நட்ஸ் சிறந்த தேர்வாக இருக்கிறது. நட்ஸ் ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் ஆக எடுத்துக் கொள்கிறார்கள். கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் ஈ நட்ஸ்-ல் நிறைந்துள்ளது. இதை சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
கல்லீரல் தன்மையையும் அதன் தேவையையும் ஏறத்தாழ அறிந்திருப்போம். இந்த பதிவு கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க பெருமளவு உதவும் என்றாலும் ஏதேனும் தீவிரத்தை உணரும் போது உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
இதையும் படிங்க: கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க 6 குளிர்கால பானங்கள்
image source: freepik