Best food on an empty stomach in morning: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, காலை நேரத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளின் மீது அதிக கவனத்தை செலுத்துவது அவசியமாகும். உண்மையில், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடிய உணவுகள் நாள் முழுவதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. அது மட்டுமல்லாமல், நாள் முழுவதும் ஒரு நேர்மறையான மனநிலையை அமைக்க உதவுகிறது.
சரியான உணவுத் தேர்வுகளுடன் உங்கள் நாளைத் தொடங்குவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கையாளலாம். சத்தான காலை உணவை சாப்பிடுவது மனநிலையை மேம்படுத்துவதுடன், ஆற்றல் மட்டங்களை மேம்படுத்தலாம். மேலும், இது அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. இது அதிக உற்பத்தி மற்றும் விழிப்புடன் வைத்திருக்க உதவுகிறது. இதில் அன்றாட உணவில் காலை நேரத்தில் சாப்பிடக் கூடிய சில ஆரோக்கியமான உணவுகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உங்க குழந்தை ஹெல்த்தியா இருக்க வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டிய உணவுகள் இது தான்.!
காலை உணவுகளின் முக்கியத்துவம்
இரவில் நம் உடல் பல மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கிறோம். எனவே காலையில் நம் உடலின் ஆற்றல் மட்டங்களை நிரப்புவது அவசியமாகும். சமச்சீரான உணவுகளை உட்கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது. இது நாளின் பிற்பகுதியில் பசி மற்றும் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்க உதவுகிறது.
எனினும், அனைத்து உணவுப் பொருட்களும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு ஏற்றது அல்ல. ஏனெனில், தவறான உணவுகளுடன் நாளைத் தொடங்குவது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கலாம். இதில் நாம் உட்கொள்ள வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்களின் பட்டியலைக் காண்போம்.
முக்கிய கட்டுரைகள்
வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டிய உணவுகள் மற்றும் பானங்கள்
வாழைப்பழம்
வாழைப்பழங்களை உட்கொள்வது உடலில் விரைவான ஆற்றலை அதிகரிக்க உதவும் இயற்கை சர்க்கரைகளை வழங்குகிறது. இதில் நார்ச்சத்துக்கள், பொட்டாசியம் மற்றும் இன்னும் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. எனவே இவை இதயம், எலும்புகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மை பயக்கும். கூடுதலாக, இவை வசதியானவை மற்றும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதாகும்.
ஊறவைத்த பாதாம்
காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த பாதாம் பருப்பை முதலில் சாப்பிடுவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. கூடுதலாக, எடை மேலாண்மைக்கும் மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. எனவே இது ஜீரணிக்க எளிதானவையாகும்.
வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்
வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரைக் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். காலையில் இந்த பானம் அருந்துவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.
ஓட்ஸ்
ஓட்ஸ் சாப்பிடுவது நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கவும், நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை வழங்கவும் உதவுகிறது. ஓட்ஸில் உள்ள வைட்டமின்கள் பி, செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்ததாகும். எனவே இது சிறந்த காலை உணவாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Weight loss: தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை குடியுங்க…. ஒரே வாரத்தில் 5 கிலோ குறைக்கலாம்!
சியா விதைகள்
இது தாவர புரதத்தின் சிறந்த மூலமாகும். இதில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. அன்றாட உணவில் சியா விதைகளைச் சேர்ப்பது உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இதற்கு சியா விதைகளை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் எடுத்துக் கொள்ளலாம்.
கிரீன் டீ
இது ஒரு சிறந்த பான விருப்பமாகும். கிரீன் டீயில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. எனவே இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், உடலை நாள் முழுவதும் தயார்படுத்தவும் உதவுகிறது.
தயிர்
தயிர் புரதம் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்ததாகும். இவை குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. மேலும், இது வயிறு நிரம்பியதாக உணர உதவுகிறது. இதில் கூடுதலாக புதிய பழங்கள் அல்லது கொட்டைகளைச் சேர்ப்பதன் மூலம் அதன் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்தலாம்.
ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்வது செறிவை மேம்படுத்துகிறது. இது நாள் முழுவதும் ஆற்றல் அளவை பராமரிக்கிறது. எனினும், சில உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு வறுத்த உணவுகள், சிட்ரிக் பழங்கள், காரமான உணவுகள், கார்பனேற்றப்பட்ட பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை பொருட்கள் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எனவே காலையில் இது போன்ற உணவுகளைத் தவிர்த்து, சத்தான விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Empty Stomach Food: காலையில் வெறும் வயிற்றில் எதை சாப்பிடலாம்? ஆரோக்கியமா இருக்க இதை சாப்பிடுங்கள்!
Image Source: Freepik