How do you treat adenomyosis and endometriosis together: பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மாதவிடாய் அமைகிறது. இது பெரும்பாலும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுடன் வரக் கூடியதாகும். வயிறு வலி, கால் வலி, இடுப்பு வலி மற்றும் இன்னும் சில உடல்நல அபாயங்களுடன் காணப்படுவதால் பல பெண்களும் அசௌகரியத்தை சந்திக்கின்றனர். இந்த வரிசையில் எண்டோமெட்ரியோசிஸ், அடினோமயோசிஸ் போன்றவை அடங்கும். இவை இரண்டுமே கருப்பை புறணி தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியதாகும். எண்டோமெட்ரியோசிஸ் என்பது கருப்பையின் புறணிக்கு ஒத்த திசுக்கள் கருப்பைக்கு வெளியே வளரும்போது ஏற்படக்கூடியதாகும்.
இது பெரும்பாலும் கடுமையான இடுப்பு வலியை ஏற்படுத்தும். குறிப்பாக, குறிப்பாக மாதவிடாய் காலத்தில் இது நிகழ்கிறது. மறுபுறம், அடினோமயோசிஸ் என்பது கருப்பையின் புறணி தசைச் சுவரை உடைத்து, வலிமிகுந்த பிடிப்புகள் மற்றும் பிற அறிகுறிகளுக்கு வழிவகுக்கக் கூடியது. சிகிச்சையில் பொதுவாக வலியை நிர்வகிக்க மருந்து மற்றும் சில நேரங்களில் அறுவை சிகிச்சை போன்றவை அடங்கும் என நிபுணர் ராஷி சவுத்ரி கூறியுள்ளார். இதில் எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் அடினோமயோசிஸ் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் நிபுணர் பகிர்ந்துள்ள இயற்கைத் தீர்வைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Saffron Milk: கோடையில் பெண்கள் ஏன் கட்டாயம் குங்குமப்பூ பால் குடிக்கனும் தெரியுமா?
ஊட்டச்சத்து நிபுணர் ராஷி தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் வீடியோவில் ஒரு இயற்கை வலி நிவாரணி செய்முறையைப் பகிர்ந்துள்ளார். இது அதிக சுருக்கங்கள் மற்றும் வலிக்கு காரணமான கலவையை அதாவது புரோஸ்டாக்லாண்டின்களைக் குறைக்க நேரடியாக உதவுகிறது. வீடியோவில் ஊட்டச்சத்து நிபுணர் பின்வரும் பொருட்களை உள்ளடக்கிய எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் அடினோமயோசிஸுக்கு ஒரு தீர்வை பகிர்ந்துள்ளார். அது குறித்து விரிவாகக் காண்போம்.
எண்டோமெட்ரியோசிஸ், அடினோமயோசிஸ் பிரச்சனைக்கு நிவாரணம் வழங்க உதவும் இயற்கை வைத்தியம்
தேவையானவை
- கலோஞ்சி விதைகள் - 1 தேக்கரண்டி
- புதிய மஞ்சள் (துருவியது) - 1 தேக்கரண்டி
- புதினா இலைகள் - 4 முதல் 5
- தண்ணீர் - 1 கப்
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அனைத்துப் பொருள்களையும் சேர்க்க வேண்டும்.
- இந்தக் கலவையை அடர்த்தியாகவும் வலுவாகவும் மாறும் வரை கொதிக்க வைக்கலாம்.
- பிறகு இதை தினமும் உட்கொள்ளலாம்.
ஊட்டச்சத்து நிபுணர் ராஷி சௌத்ரி அவர்கள், அடிப்படை பிரச்சனைகள் மற்றும் வலிமிகுந்த மாதவிடாய் அறிகுறிகளை நிர்வகிக்க உதவும் வகையில் இந்த மருந்தை தொடர்ந்து எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்.
மேலும், அவர் கூறியதாவது, “கருப்பு சீரக விதை எண்ணெயைப் பயன்படுத்த விரும்பினால், குறைந்தது 2% THQ (தைமோகுவினோன்) உள்ளடக்கம் கொண்ட ஒன்றைப் பயன்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: சரியான நேரத்துல பீரியட்ஸ் ஆகாம கஷ்டமா இருக்கா? இந்த ஹெர்பல் டீ உங்களுக்கு உதவும்
நன்மைகள்
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற கலவையில் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இதில் உள்ள இயற்கையான பண்புகள் வலி நிவாரண நுட்பங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இதை தூள் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். மஞ்சள் தூளை திரவங்களுடன் இணைப்பதன் மூலம் அதன் நன்மைகளை அதிகரிக்கலாம்.
புதினா இலைகள்
புதினா இலைகள் அதன் அமைதிப்படுத்தும் பண்புகளுக்கு நன்கு பெயர் பெற்றதாகும். இவை செரிமானத்திற்கு ஏற்றதாகும். மேலும் இது அசௌகரியம் மற்றும் தசைப்பிடிப்பைக் குறைக்க உதவுகிறது. அன்றாட உணவில் புதினா இலைகளை புதியதாகவோ அல்லது உலர்ந்ததாகவோ, தேநீர் அல்லது உட்செலுத்துதல்களுக்கு சுவை மற்றும் நிவாரணத்தை வழங்குவதாக எடுத்துக் கொள்ளலாம்.
கருப்பு விதை எண்ணெய் (கலோஞ்சி)
இது அதன் வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும். இதில் தைமோகுவினோன் எனப்படும் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. இந்த இயற்கை பொருளானது புரோஸ்டாக்லாண்டின்களைக் குறைக்க நேரடியாக உதவுகிறது.
இந்த இயற்கை செய்முறையின் உதவியுடன் எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் அடினோமயோசிஸ் அறிகுறிகளை ஓரளவு குறைக்கலாம். எனினும், தீவிர அசௌகரியத்தில் உள்ள எவரும் சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சை மாற்றுகளுக்கு மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பது எவ்வாறு நன்மை பயக்கும்?
Image Source: Freepik