How to reduce period cramps pain at home: பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாதவிடாய் வலி அமைகிறது. இதில் வயிற்று வலி, கால்வலி, இடுப்பு வலி மற்றும் உடலில் ஆங்காங்கே பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம். இந்நிலையில், இது போன்ற பிரச்சனைகளைக் குறைப்பதற்கு பலரும் வெளியில் கிடைக்கும் மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். இது தற்காலிகமாக நிவாரணத்தைத் தந்தாலும், சரியான தீர்வாக இருக்காது.
ஆனால், மருந்துகளை அதிகமாக சாப்பிடுவது உடலுக்கு தீங்கானது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மாதவிடாய் வலியிலிருந்து விடுபடுவதற்கு ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரிந்துரைத்த ஹெர்பல் ரெசிபி தயாரிப்பு முறையைக் காணலாம்.
நிபுணரின் கருத்து
ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ராவின் கூற்றுப்படி, “மாதவிடாய் வலி சாதாரணமானது அல்ல - இது பொதுவானது” எனது தனது பதிப்பைத் தொடங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து மாதவிடாய் வலி நிவாரணத்திற்கான ரெசிபி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதற்கு அவர், இஞ்சி, பெருஞ்சீரகம், ஓமம், இலவங்கப்பட்டை மற்றும் முலேத்தி போன்றவற்றைக் கொண்ட இந்த 5 நிமிட மூலிகை தேநீர் குடிக்கலாம் எனவும், இது மாத்திரைகள் இல்லாமல் பிடிப்புகளைத் தணிக்க உதவுகிறது எனவும் குறிப்பிடுகிறார்.
இதில் நிபுணர் பத்ரா, பகிர்ந்த மூலிகையில் சேர்க்கப்படக்கூடிய பொருள்கள் எவ்வாறு Period Cramps பிரச்சனைக்கு உதவுகிறது என்பது குறித்த விவரங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Menstrual Cramps: மாதவிடாய் வலியை போக்க இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!!
மாதவிடாய் வலி குறைய மூலிகை தேநீர்
இஞ்சி
பொதுவாக, மாதவிடாய் பிடிப்புக்கு இஞ்சி டீ சிறந்த தேர்வாகும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது கருப்பை சுருக்கங்களுக்கு பங்களிக்கும் புரோஸ்டாக்லாண்டின் அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் மாதவிடாய் வலியைப் போக்க உதவுகிறது.
பெருஞ்சீரகம்
மாதவிடாய் பிடிப்புகளுக்கு பெருஞ்சீரகம் ஒரு சிறந்த தீர்வாகும். பெருஞ்சீரகம், புரோஸ்டாக்லாண்டின் அளவைக் குறைப்பதன் மூலம் மாதவிடாய் வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. இது கருப்பையின் சுருக்கங்களை ஊக்குவிக்கும் ஒரு ஹார்மோன் ஆகும். இது வீக்கம் மற்றும் தசைப் பிடிப்புகளைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் மாதவிடாய் ஓட்டத்தைச் சீராக்குகிறது.
ஓமம்
ஓமம் அல்லது அஜ்வைன் என்பது அழற்சி எதிர்ப்பு மற்றும் தசை தளர்த்தும் பண்புகளைக் கொண்டதாகும். இதன் மூலம் மாதவிடாய் வலிக்கு உதவுகிறது. அஜ்வைன் உட்கொள்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கருப்பை சுருக்கங்களைக் குறைத்து, தசைப்பிடிப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை உட்கொள்வது மாதவிடாய் வலியை நிர்வகிக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வலி நிவாரண பண்புகள், கருப்பையில் ஏற்படும் சுருக்கங்களைக் குறைத்து, பிடிப்புகளிலிருந்து நிவாரணம் அளிக்கும். இதை மாதவிடாய் காலத்திற்கு முன்னும் பின்னும் தேநீராக அருந்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Period Cramps: மாதவிடாய் வலியை குறைக்க எளிய வீட்டு வைத்தியம் இங்கே…
முலேத்தி
முலேத்தியில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் மாதவிடாய் பிடிப்புகளின் தீவிரத்தைக் குறைக்கிறது. முலேத்தி ஒரு இயற்கையான தசை சுருக்க நீக்கியாக செயல்பட்டு, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்புகளை தளர்த்த உதவுகிறது. இது தவிர, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கையும், இரத்த ஓட்டத்தில் ஏற்படும் சீர்குலைவுகளையும் சீராக்க உதவுகிறது.
நிபுணர் வீடியோவில் குறிப்பிட்டவாறு, இந்த மூலிகைகளைக் கொண்டு பானத்தைத் தயார் செய்வது மாதவிடாய் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
View this post on Instagram
கூடுதல் குறிப்புகள்
இந்த பானத்தைத் தினமும் அருந்துவதைத் தவிர, ஊறவைத்த பாதாம் அல்லது வாழைப்பழங்கள் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை மாதவிடாயின் போது ஏற்படும் வலியைத் தவிர்க்க உதவுகிறது.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாய் வலியால் ரொம்ப அவதியா? கவலையே வேணாம்! இந்த ஒரு பொருளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க
Image Source: Freepik