Expert

Cashew Nuts: அளவுக்கு அதிகமா முந்திரி சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படுமா? உண்மை என்ன?

  • SHARE
  • FOLLOW
Cashew Nuts: அளவுக்கு அதிகமா முந்திரி சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படுமா? உண்மை என்ன?


What happens if you eat too much cashews: குளிர்காலத்தில் உலர் பழங்கள் அதிகமாக சாப்பிடுவது வழக்கம். குளிர்காலத்தில் முந்திரி, பாதாம், வால்நட் போன்றவற்றை அதிக அளவில் சாப்பிட்டால், உடல் சூடாகவும், உடல்நலக் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும் என்றும் பலர் நினைக்கிறார்கள். நீங்களும் அப்படி நினைத்து அதிக அளவில் உலர் பழங்களை சாப்பிடுபவராக இருந்தால் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ஏனென்றால், உலர் பழங்களை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா, முந்திரி பருப்பை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Ragi Soup Recipe: ஊட்டச்சத்து குறைபாடு முதல் உடல் எடை குறைப்பு வரை எல்லா பிரச்சினைக்கும் இந்த ஒரு சூப் போதும்!

முந்திரி சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படுமா?

குளிர்காலத்தில் உலர் பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். முந்திரி பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இது குளிர்காலத்தில் நமது ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இருப்பினும், நாம் அவற்றை ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். முத்திரை ஊட்டச்சத்துக்களின் ராஜா என அழைக்கப்படுகிறது. இதை சாப்பிடுவதால் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

ஆனால், முந்திரியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போதோ அல்லது தவறான வழியில் உட்கொள்ளும்போதோ வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும். முந்திரி பருப்பை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படாது, ஆனால் அதிக அளவில் உட்கொள்ளும் போது, ​​அதில் உள்ள கொழுப்புகள் அஜீரண பிரச்சினையை ஏற்படுத்தும். இதனால், மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று மருத்துவர் கூறினார்.

இந்த பதிவும் உதவலாம் : வைட்டமின் B12 குறைபாட்டை நீக்க இந்த 5 பழங்களை குழந்தைகளுக்கு கொடுங்க!

மலச்சிக்கல் முந்திரி பருப்பின் தன்மையில் இல்லை, ஆனால் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இந்த பிரச்சனையை சந்திக்க நேரிடும். முந்திரியில் பைடிக் அமிலம் உள்ளது, இது செரிமானத்தை பாதிக்கும், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனுடன், முந்திரி பருப்பை அதிகமாக உட்கொள்வதால், வாய்வு மற்றும் உடலில் அதிக வெப்பம் ஏற்படும்.

முந்திரியை எப்போது, ​​எப்படி சாப்பிட வேண்டும்?

ஆயுர்வேதத்தில், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முந்திரியின் தன்மை சூடாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு இளைஞர் ஒரு நாளைக்கு 5 முதல் 6 முந்திரிகளுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது என்றும் கூறப்படுகிறது. முந்திரி பருப்பை உண்பதற்கான சரியான வழி, இரவு முழுவதும் அதை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் சாப்பிடுவது தான்.

இப்படி செய்வதன் மூலம், அதில் உள்ள பைடிக் அமிலத்தின் அளவு குறைந்து, வயிறு தொடர்பான பிரச்சனைகள் தவிர்க்கப்படும். முந்திரி பருப்பில் இருந்து முழுமையான ஊட்டச்சத்து பெற, நீங்கள் அவற்றை பச்சையாக மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம் : தப்பித்தவறி கூட இந்த எண்ணெயில் சமையல் செய்யாதீங்க… உயிருக்கே ஆபத்தாகலாம்!

முந்திரி பருப்பை எண்ணெயில் பொரித்தோ அல்லது வறுத்தோ உட்கொள்பவர்களுக்கு அதன் முழுப் பலன் கிடைப்பதில்லை. எண்ணெயில் வறுத்தாலும் அல்லது பொறித்தாலும், முந்திரியில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் அழிந்துவிடும், இந்நிலையில் உங்களுக்கு அதன் பலன் கிடைக்காது.

உப்பு அல்லது வறுத்த முந்திரி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், அதில் அதிகப்படியான உப்பு உள்ளது, இது இரத்த அழுத்தத்தை மோசமாக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : ஜாக்கிரதை… சாப்பிட்ட பிறகு சோடா குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

முந்திரியில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ஏற்கனவே வயிறு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் முந்திரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இது தவிர பைல்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முந்திரியை குறைவாக உட்கொள்ள வேண்டும்.

Pic Courtesy: Freepik

Read Next

குளிர்காலத்தில் கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைக்க நீங்க செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் இது தான்.!

Disclaimer

குறிச்சொற்கள்