$
How To Manage Cholesterol Level In Winter: கோடைக்காலத்துடன் ஒப்பிடுகையில் குளிர்காலத்தில் சாதாரணமாகவே உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்துக் காணப்படும். எனினும் இதன் துல்லியமான செயல்முறை தெளிவாக இல்லை. இருப்பினும், குளிர்காலத்தில் உயர் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க சில பயனுள்ள மற்றும் எளிதான வழிகள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.
குளிர்காலத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் குறிப்புகள்
குளிர்காலத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க அன்றாட வாழ்க்கையில் சில வழக்கமான நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
சில உணவுகளைத் தவிர்ப்பது
எந்த காலத்திலும் உடல் எடையை பராமரிப்பது அல்லது ஆரோக்கியமான உடல் எடையை அடைவதற்கும் சரியான முயற்சிகளைக் கையாள்வது அவசியம். இதில் குறிப்பாக உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க சில உணவு முறைகளைக் கையாள வேண்டும். அதன் படி, சிவப்பிறைச்சி மற்றும் முழு கொழுப்புள்ள பால் பொருள்களில் நிறைந்துள்ள நிறைவுற்ற கொழுப்புகளைத் தவிர்ப்பதன் மூலம் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Winter Migraines Treatment: குளிர்கால ஒற்றைத் தலைவலி நீங்க இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க.
இனிப்பு உட்கொள்வதைத் தவிர்ப்பது
ஹல்வா, குலாப் ஜாமுன் மற்றும் இன்னும் பிற ஆரோக்கியமற்ற இனிப்பு வகைகள் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். உடல் பருமன், இதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே இனிப்பு உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க முடியும். மேலும், இதில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற ஊட்டச்சத்துகள் இல்லை. ஆரோக்கியமான மாற்றாக பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறலாம்.

உப்பு உட்கொள்ளலைக் குறைப்பது
உணவில் அதிக உப்பை உட்கொள்வது உடலில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். இதன் காரணமாக, பல்வேறு இதயக் கோளாறுகள் ஏற்படுகின்றன. இதற்கு உப்பில் அதிகளவு சோடியம் இருப்பதே காரணமாகும். எனவே, சோடியம் உட்கொள்ளலைத் தவிர்ப்பதன் மூலம் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக துரித உணவுகள் உட்கொள்ளலைக் குறைப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
நல்ல உணவைத் தேர்ந்தெடுத்தல்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை பாதிக்காது. எனினும், இவை இரத்த அழுத்தத்தைக் குறைத்து கூடுதலான இதய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. எனவே சால்மன், பாதாம் மற்றும் தாவர எண்ணெய் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதனுடன், பழங்கள், காய்கறிகள், ஓட்ஸ், பீன்ஸ், ஒல்லியான இறைச்சிகள் மற்றும் இன்னும் பிற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Joint Pain Causes: குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகமா இருக்கா? அதுக்கு இது தான் காரணமாம்.
அதிக நார்ச்சத்துள்ள உணவுகள்
குளிர்காலத்தில் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளலாம். இந்த நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது, உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் இரத்த ஓட்டத்தில் நுழைவதைத் தடுக்க உதவுகிறது. இவை பசியைக் குறைத்து செரிமானத்தை மேம்படுத்தி வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. மேலும் இது அதிகப்படியான உணவு உட்கொள்ளலைத் தவிர்க்க உதவுகிறது.
சுறுசுறுப்பாக இருப்பது
உடற்பயிற்சி, யோகா போன்ற உடல் செயல்பாடுகளைச் செய்வது உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இவை உடல் எடையை இழக்க உதவுவதுடன், பல்வேறு வகையான பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் தருவதாக அமைகிறது. எனவே ஒவ்வொரு வாரமும் குறைந்தது 2.5 மணி நேரம் மிதமான உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இது கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் இது உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

குளிர்காலத்தில் மேலே கூறப்பட்ட பயனுள்ள உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் உடலில் உள்ள கொலஸ்ட்ரல் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin d Side Effects: வைட்டமின் டி முக்கியம் தான்.! ஆனா அதிகமாக உட்கொண்டால் இந்த பிரச்சனை வரும்.
Image Source: Freepik