Side Effects Of Too Much Vitamin D: உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களிள் ஒன்றாக விளங்குவது வைட்டமின் டி ஆகும். இதை இயற்கையாக சூரிய ஒளியில் இருந்து பெற முடியும். எனினும், பலரும் வைட்டமின் டி பற்றாக்குறை காரணமாக, பல்வேறு மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக அமைகிறது.
வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் உடலின் மிக முக்கிய செயல்பாடுகளுக்குத் தேவையான இன்றியமையாத ஒன்றாகும். உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் உள்ளார்ந்த நோயெதிர்ப்பு அமைப்பு போன்றவற்றின் சரியான செயல்பாட்டிற்கு வைட்டமின் டி தேவையாகும். இது தவிர, எலும்பு மண்டலத்தை பராமரிக்கவும், தசைகளின் வளர்ச்சியைப் பராமரிப்பதற்கும் வைட்டமின் டி அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Water Borne Diseases: உஷார்.! கொட்டும் மழையில் பரவும் நோய்க்கான அறிகுறிகள் இது தான்!
வைட்டமின் டி சப்ளிமென்ட்ஸ்கள்
இவை மிகவும் பொதுவானதாக மாறிவிட்டன. வைட்டமின் டி பற்றாக்குறையால், சிலர் மருந்துகள், மாத்திரைகளின் மூலம் வைட்டமின் டி சத்துக்களைப் பெற விரும்புவர். ஆனால் அவர்கள் வைட்டமின் டி நச்சுத்தன்மைக்கு உள்ளாவார்கள். கிரானுலோமாட்டஸ் கோளாறுகள், பிறவி கோளாறுகள், ஒழுங்கப்படுத்தப்படாத வைட்டமின் டி வளர்சிதை மாற்றம் போன்ற நிலைமைகள் இருக்கும் போது, வைட்டமின் நச்சுத்தன்மைக்கு உடல் எளிதில் பாதிக்கப்படுகிறது.
வைட்டமின் டி-ன் உயர்ந்த அளவு
உடலில் வைட்டமின் டி-ன் உகந்த அளவு 30-60 ng/mL அளவாகக் கருதப்படுகிறது. இதில் வைட்டமின் டி அளவு 100ng/mL-ஐ விட அதிகமாக இருக்கும் போது நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் அதிகளவு கூடுதல் வைட்டமின்களை உண்ட பிறகு நச்சுத்தன்மைக்கான வாய்ப்புகள் பூஜ்ஜியமாக இருக்கலாம். இவை மருந்துப் பிழைகளின் விளைவாக அல்லது பொருத்தமற்ற சப்ளிமென்ட் டோசிங் விளைவாக நிகழலாம்.
வைட்டமின் டியை நாள் ஒன்றிற்கு 10,000 IU-க்குக் கீழே எடுத்துக் கொள்வது நச்சுத்தன்மைக்கான வாய்ப்பைக் குறைக்கும். எனினும், சப்ளிமென்ட்ஸ் உட்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகி உறுதி செய்வது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Pneumonia In Winter: குளிர்காலத்தில் இந்த அறிகுறி எல்லாம் இருக்கா? அப்ப இது நிம்மோனியா தான்.
அதிகளவு வைட்டமின் டி-யால் ஏற்படும் பாதிப்புகள்
அளவுக்கு அதிகமான அளவில் வைட்டமின் டி சத்துக்களை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
சிறுநீரக பாதிப்பு
அதிகளவு வைட்டமின் டி உட்கொள்வதால் ஏற்படும் வைட்டமின் டி நச்சுத்தன்மை, சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். ஏனெனில் அதிகளவு வைட்டமின் டி உட்கொள்வது கால்சியத்தை அளவை அதிகரிக்கலாம். இதனால், சிறுநீரக இரத்த நாளங்களின் சுருக்கம் ஏற்பட்டு சிறுநீரக செயல்பாடு குறையலாம்.
இரைப்பை குடல் பிரச்சனை
அதிகளவு வைட்டமின் டி எடுத்துக் கொள்வது இரைப்பை குடல் அறிகுறியாக இருக்கலாம். இதனால் குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, பசியின்மை உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படலாம். இவை அனைத்தும் ஹைபர்கால்சீமியாவின் விளைவுகள் ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: Arthritis Symptoms And Foods: ஆர்த்ரிடிஸ் அறிகுறிகளும், ஆர்த்ரிடிஸ் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளும் இங்கே
இரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிப்பு
உடலில் வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. ஆனால், அதிகளவு வைட்டமின் டி பயன்பாடு, உடலில் தானாகவே கால்சியம் அளவை உயர்த்தலாம். உடலில் உள்ள இயல்பான கால்சியத்தின் அளவு 8.5 முதல் 10.8 mg/dL வரை இருக்கலாம். இதன் அளவு அதிகமாகும் போது, குமட்டல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற செரிமான கோளாறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மேலும், தலைச்சுற்றல், அதிக சிறுநீர் கழித்தல், உயர் இரத்த அழுத்தம், நீரிழிப்பு போன்ற அறிகுறிகளும் காணப்படலாம். இந்த ஹைப்பர்கால்சீமியா உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம். எனவே, உடனடியாக கவனிப்பது நல்லது.
மனம் மாற்றமடைதல்
ஹைப்பர் கால்சீமியா ஆனது, அதிகளவு வைட்டமின் டி உட்கொள்வதன் நேரடி விளைவாகும். இதனால், மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற மனநோய் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த அறிகுறிகளைக் கண்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
எனவே முடிந்தவரை, வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் டி பற்றாக்குறையைப் போக்க மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் சூரிய ஒளி அல்லது உணவின் மூலம் பெற முயற்சிக்கலாம். போதுமான அளவில் வைட்டமின் டி எடுத்துக் கொள்வதன் மூலம் வைட்டமின் டி நச்சுக்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Winter Migraines Treatment: குளிர்கால ஒற்றைத் தலைவலி நீங்க இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க.
Image Source: Freepik