Pneumonia Prevention In Winter: குளிர்காலம் என்றாலே பலரும் பல வகையான பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். எனவே நிபுணர்களும், மருத்துவர்களும் குளிர்காலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பரிந்துரைக்கின்றனர். குளிர்காலத்தில் சளி, இருமல், மற்றும் காய்ச்சல் போன்றவை பொதுவான பிரச்சனைகளாகும். இந்த நோய்களுடன் நிம்மோனியாவும் அடங்கும். குழந்தைகள், வயதானவர்கள் போன்றோர் நிம்மோனியாவால் பாதிக்கப்படுகின்றனர்.
இது தவிர, நீரிழிவு அல்லது ஏதேனும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குளிர்காலத்தில் பல்வேறு ஆபத்துகளைச் சந்திக்கின்றனர். எனவே, குளிர்காலத்தில் மிகுந்த கவனிப்புடன் இருப்பது அவசியமாகும். ஆனால், குளிர்காலத்தில் நிம்மோனியா வருவதற்கான அதிக ஆபத்து ஏன் என்பது குறித்தும், குளிர்காலத்தில் நிம்மோனியாவிற்கான அறிகுறிகள் குறித்தும் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Flu Fever Prevention: பரவி வரும் ஃப்ளூ காய்ச்சல். இதிலிருந்து தப்பிப்பது எப்படி?
குளிர்கலத்தில் நிம்மோனியா அதிக ஆபத்து ஏன்?
நிம்மோனியாவின் ஆபத்து, குளிர்காலத்தில் அதிகமாக இருக்கும். குளிர்காலத்தில் நிம்மோனியா நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். காய்ச்சல் மற்றும் வைரஸ்கள் இந்த நேரத்தில் எளிதாக இருக்கும் மற்றும் துகள்கள் எள்தில் உடலுக்குள் சென்றடையலாம். இது சுவாசத்தின் வழியாக மட்டுமல்லாமல், சில பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் சருமத்தின் வழியாகவும் உடலில் நுழையலாம். மேலும், உடலின் நோயெதிர்ப்புச் சக்தி பலவீனமாக இருப்பதும், இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.
உடல் ஆரோக்கியத்தை நிம்மோனியா பாதிக்கும் முறை
ஒருவரிடமிருந்து, மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடிய தொற்றாக நிம்மோனியா உள்ளது. இது நுரையீரலைப் பாதிக்கிறது. மேலும் இதில் நுரையீரல் செயல்படத் தவறி, வீக்கமடையலாம். இதனைத் தொடர்ந்து சுவாசிப்பதில் சிக்கல் உண்டாகலாம். ஏனெனில் இவை இரத்த ஓட்டத்திற்கு ஆக்ஸிஜன் வழங்குவதைத் தடுக்க உதவுகிறது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். நிம்மோனியா பரவுவதற்கான சில முக்கிய காரணங்களைக் காணலாம்.
- பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ளுதல்
- தொற்றுநோய்க்கு மத்தியில் இருப்பது
- திறந்த வாய் மற்றும் மூக்கு காரணமாக, பாக்டீரியாக்கள் காற்று வழியாக உடலுக்கு நுழைதல்
இந்த பதிவும் உதவலாம்: Pulmonary Hypertension Effects: நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தால் இத்தனை பாதிப்பு ஏற்படுமா?
குளிர்காலத்தில் நிம்மோனியாவின் அறிகுறிகள்
- தலைவலி
- காய்ச்சலுடன் குளிர் ஏற்படுவது
- தோலில் அசாதாரண நிறத் தோற்றம்
- இருமல் மற்றும் சளி
- வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி
- தசைகள் மற்றும் உடல்வலி

குளிர்காலத்தில் நிம்மோனியா வராமல் பாதுகாக்கும் முறை
- முகத்தை மாஸ்க் அல்லது துணியால் மூடி வைக்க வேண்டும்
- சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்
- புகைபிடிப்பதைத் தவிர்க்கவும்
- போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்
- யாரிடமும் நெருக்கமாக பேசுவதைத் தவிர்த்தல்
- காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி, உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
- குளிர்காலத்தில் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
- உணவில் காய்கறிகள், பழங்கள், மற்றும் சத்தான உணவுகளைச் சேர்க்க வேண்டும்.
மேலே கூறப்பட்ட வகையில், குளிர்காலத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், நிம்மோனியா பாதிப்பிலிருந்து எளிதில் தவிர்க்கலாம். மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Pneumonia: நிமோனியாவை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?
Image Source: Freepik