Doctor Verified

Pulmonary Hypertension Effects: நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தால் இத்தனை பாதிப்பு ஏற்படுமா?

  • SHARE
  • FOLLOW
Pulmonary Hypertension Effects: நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தால் இத்தனை பாதிப்பு ஏற்படுமா?


Pulmonary Hypertension Effect On Lungs: நுரையீரல் உயர் இரத்த அழுத்த நோயானது நுரையீரலில் ஏற்படும் நோயாகும். இந்த நோயைக் கண்டறிதல், காரணங்கள் மற்றும் நுரையீரல் அதன் தாக்கம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆஸ்டர் ஆர்வி மருத்துவமனை இன்டர்வென்ஷனல் நுரையீரல் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவரும், முன்னணி ஆலோசகருமான பவன் யாதவ் அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் என்ற நோயானது நுரையீரல் தமனிகளில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் ஒரு நிலையாகும். இந்த நோயால், நுரையீரலுக்கு இரத்தத்தை செலுத்த, இதயம் கடினமாக உழைக்க வேண்டும். இதனால், இதயம் மற்றும் நுரையீரல் இரண்டுமே காலப்போக்கில் சேதமடையலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Asthma During Monsoon: மழைக்காலத்தில் ஆஸ்துமாவை தடுக்கும் முறைகள்…

நோய் கண்டறிதல்

நுரையீரல் உயர் இரத்த அழுத்த நோய் ஒருவருக்கு இருப்பதை பொதுவாக உடல் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே அல்லது எக்கோ கார்டியோகிராபி போன்ற இமேஜிங் ஆய்வுகள் மற்றும் நுரையீரல் செயல்பாடு சோதனைகள் போன்றவற்றின் மூலம் கண்டறியலாம். மேலும், இதன் அடிப்படை காரணங்கள் அல்லது பிற தொடர்புடைய நிலைமைகளைச் சரிபார்க்க இரத்த பரிசோதனைகள் போன்றவை உட்பட தொடர்ச்சியான சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தின் மேலாண்மை

இந்த நோயின் அடிப்படைக் காரணம் மற்றூம் தீவிரத்தைப் பொறுத்தே, சிகிச்சை விருப்பங்கள் அமையும். நுரையீரலில் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஆக்ஸிஜன் சிகிச்சை, மருந்துகள், உடற்பயிற்சி, மற்றும் உடல் எடை இழப்பு போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் அறுவை சிகிச்சை போன்றவை அடங்கும்.

நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தின் கடுமையான சந்தர்ப்பங்களில், அதிலும் குறிப்பாக சிகிச்சைகள் வெற்றிகரமாக இல்லாத நேரங்களில் நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை கருதப்படலாம். இது கடுமையான அறுகுறிகளை ஏற்படுத்தும் போது அல்லது இதயம் மற்றும் நுரையீரலுக்கு மாற்ற முடியாத சேதம் ஏற்பட்டதற்கான சான்றுகள் இருப்பின், மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையானது, நோயாளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வைத்தே பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Healthy Lungs: உங்கள் நுரையீரல் சரியாக இயங்குகிறது என்பதை அறிய எளிய வழிகள்!

நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்

இந்த நோய்க்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இவை ஐந்து முக்கிய குழுக்களாக வகைப்படுத்தப்படுகிறது.

இடது இதய நோய்

வால்வு நோய், இதய செயலிழப்பு அல்லது பிறவி இதய குறைபாடுகள் போன்றவை இதயத்தின் இடது பக்கத்தை பாதிக்கும் நிலைகளாகும். இந்நிலைகள் நுரையீரல் நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி, நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கலாம்.

நாள்பட்ட த்ரோபோம்போலிக் நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் (CTEPH)

இது ஒரு வகை நுரையீரல் உயர் இரத்த அழுத்தமாகும். இவை நுரையீரலில் இரத்தக்கட்டிகளால் ஏற்படுவதாகும். இந்த வகை நோயானது நுரையீரல் தக்கையடைப்பு அல்லது நுரையீரல் இரத்த உறைவு சிக்கலாக இருக்கலாம் அல்லது தன்னிச்சையாக ஏற்படலாம்.

நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தம் (PAH)

இது நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தின் வகைகளில் ஒன்றாகும். இதில், நுரையீரலில் உள்ள இரத்த நாளங்கள் குறுகலாக அல்லது தடுக்கப்படுகிறது. இவை நுரையீரல் தமனிகளில் இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும். PAH இடியோபாடிக் அல்லது இணைப்பு திசு நோய்கள், நாள்பட்ட கல்லீரல் நோய் அல்லது பிறவி இதய குறைபாடுகள் போன்ற நிலைமைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Habits for Healthy Lungs: நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த 5 பழக்கங்களை பின்பற்றுங்கள்!

நுரையீரல் நோய் மற்றும் ஹைபோக்ஸியா

நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (COPD), தூக்கத்தில் மூச்சுத்திணறல், மற்றும் இடைநிலை நுரையீரல் நோய் போன்ற நுரையீரல் நோய்கள், இரத்தத்தில் குறைந்த அளவு ஆக்ஸிஜனை ஏற்படுத்துகிறது. இது ஹைபோக்ஸியா எனப்படுகிறது. இதுவே நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

மற்ற காரணங்கள்

தலசீமியா அல்லது அரிவாள் செல் நோய் போன்ற இரத்தக் கோளாறுகள், எச்.ஐ.வி தொற்று, சில மருந்துகள் அல்லது நச்சுக்களின் வெளிப்பாடு போன்ற இரத்தக் கோளாறுகள் போன்றவை நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய பிற நிலைமைகள் ஆகும்.

பல நேரங்களில், நுரையீரல் உயர் இரத்த அழுத்தத்திற்கான அடிப்படைக் காரணம் உடனடியாகத் தெரியாமல் போகலாம். எனவே, அடிப்படைக் காரணத்தைத் தீர்மானிக்க, முழுமையான மருத்துவ மதிப்பீடு தேவைப்படும்.

இந்த பதிவும் உதவலாம்: Habits for Healthy Lungs: நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த 5 பழக்கங்களை பின்பற்றுங்கள்!

Image Source: Freepik

Read Next

Winter Health Tips: குளிர்காலத்தில் இந்த 5 தவறுகளை மட்டும் செய்யாதீங்க!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version