Expert

Habits for Healthy Lungs: நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த 5 பழக்கங்களை பின்பற்றுங்கள்!

  • SHARE
  • FOLLOW
Habits for Healthy Lungs: நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த 5 பழக்கங்களை பின்பற்றுங்கள்!


ஆனால், நாம் செய்யும் சில தவறான பழக்கவழக்கங்களால் நுரையீரலின் செயல்பாடு குறையக்கூடும். இதனால், நாம் விரைவில் நோய்வாய்ப்படுவதுடன் சுவாச பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் சில அன்றாட பழக்கவழக்கங்கள் பற்றி, லக்னோவில் உள்ள கேர் இன்ஸ்டிடியூட் ஆப் லைஃப் சயின்சஸ் டாக்டர் சீமா யாதவ் நமக்கு விரிவாக கூறியுள்ளார். அவற்றை இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : World Lung Cancer Day 2023 : நுரையீரல் புற்றுநோயில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

நுரையீரல் திறனை அதிகரிக்கும் பழக்கங்கள்:

  1. காற்று மாசுபடுபாட்டை தவிர்க்கவும், வெளியே சென்றால் முகமூடி அணியவும்.
  2. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது நோய்கள் மற்றும் காய்ச்சலைத் தடுக்க உதவுகிறது.
  3. நுரையீரல் திறனை அதிகரிக்க, ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகளின் உதவியை நாடலாம்.
  4. நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உடல் எடையை சரியாகபராமரிக்கவும்.
  5. தக்காளி, முட்டைக்கோஸ், பூசணி, பீட்ரூட் போன்ற காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளவும்.

இந்த பதிவும் உதவலாம் : World Lung Cancer Day 2023: உலக நுரையீரல் புற்றுநோய் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? இதன் முக்கியத்துவம் என்ன?

நுரையீரல் செயல்பாட்டை பாதிக்கும் பழக்கம்:

  • புகைபிடிப்பதை விட்டுவிட்டு உங்கள் சுகாதாரத்தில் கவனம் செலுத்துங்கள்.
  • வறுத்த அல்லது பொரித்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டாம்.
  • மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் செயல்பாடு பாதிக்கும்.
  • நீர் உட்கொள்ளலைக் குறைப்பதால் நுரையீரல் ஆரோக்கியமும் மோசமடையலாம்.
  • வெள்ளை ப்ரெட், உருளைக்கிழங்கு சிப்ஸ், பால் பொருட்கள் மற்றும் சாக்லேட் போன்றவற்றை உட்கொள்ள வேண்டாம்.

இந்த பதிவும் உதவலாம் : Lung Cancer Causes: நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் சில முக்கிய காரணங்கள் இங்கே

காற்று சுத்திகரிப்பான் பயன்படுத்தவும் (Air Purifiers)

வீட்டில் காற்று சுத்திகரிப்பு கருவியை நிறுவுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. காற்று சுத்திகரிப்பானின் பயன்பாடு, ஒவ்வாமை, மாசுபடுத்திகள் போன்றவை வீட்டை விட்டு வெளியேறுகின்றன, ஏனெனில் இது காற்றை வடிகட்டுகிறது. வீட்டில் காற்றை சுத்திகரிக்க ஸ்பைடர் செடிகள், கற்றாழை, மணி பிளாண்ட் போன்றவற்றை நடலாம், இவை மாசு எதிர்ப்பு தாவரங்கள். இதன் மூலம் உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

தினசரி காலை எழுந்த உடன் வாந்தி, குமட்டல் போன்ற உணர்வு வருகிறதா? காரணம் இதுதான்!

Disclaimer