Causes Of Lung Cancer: நம் உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. இந்த செல்கள் கட்டுப்பாடிடின்றி வளர்வதையே புற்றுநோய் என்கிறோம். புற்றுநோய் வகைகளில் ஏராளம். அந்த வகையில், நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய் நுரையீரல் புற்றுநோய் எனப்படுகிறது. இது உடலில் மற்ற உறுப்புகளுக்குப் பரவக்கூடியதாக அமைகிறது. இந்த நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்களைக் காணலாம்.
நுரையீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோய் பெரும்பாலானோர் பாதிக்கப்படும் மிகவும் பொதுவான புற்றுநோய் வகையாகும். இது சில தசாப்தங்களாக படிப்படியாக அதிகரித்து வரும் புற்றுநோய் வகையாகும். இந்த புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் புகையிலை புடித்தல் ஆகும். எனினும், இது தவிர வேறு சில காரணிகள் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. இந்த காரணங்களுடன், தடுப்பு மற்றும் முன்கூட்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு நுரையீரல் புற்றுநோயைக் குணப்படுத்தலாம்.
நுரையீரல் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்கள்
நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு பல்வேறு முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.
உணவு மற்றும் வாழ்க்கை முறை
மோசமான உணவு முறைகளாலும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு, உடல் உழைப்பு இல்லாமை மற்றும் உடல் பருமன் ஆகியவை காரணமாகும். குறைவான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த பழங்கள், காய்கறிகளை எடுத்துக் கொள்ளும் போது புற்றுநோய் பாதிப்பை அதிகரிப்பதாக அமைகிறது.
காற்று மாசுபாடு
பல நகரங்களில் ஆபத்தான அளவிலான காற்று மாசுபாடு ஏற்பட்டு புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது. பென்சீன், ஃபார்மால்டிஹைட், நுண் துகள்கள் போன்ற அபாயகரமான வாயுக்கள் சுவாச மண்டலத்தில் ஊடுருவி நுரையீரல் புற்றுநோயை அதிகரிக்கிறது. மேலும், திட பொருள்களிலிருந்து வரும் சமையல் புகை போன்றவையும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தி நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Breast Cancer Symptoms: கட்டியைத் தவிர மார்பக புற்றுநோயின் மற்ற அறிகுறிகள்
தொழில்சார் புற்றுநோய்
கட்டுமானம், உற்பத்தி சுரங்கள் போன்ற தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிலிக்கா, கன உலோகங்கள், ஆஸ்பெஸ்டாஸ் உள்ளிட்ட அபாயகரமான பொருள்களுக்கு வெளிப்படுத்துகின்றன.
மரபணு காரணிகள்
இது குறைவான காரணியாக இருப்பினும் நுரையீரல் புற்றுநோய் வளர்ச்சியில் மரபணு முன்கணிப்புகள் ஒரு காரணமாக அமைகிறது. நுரையீரல் புற்றுநோயின் குடும்ப வரலாற்றைக் கொண்ட நபர்கள் அதிக உணர்திறனைக் கொண்டவராக இருக்கலாம்.
புகைபிடிக்காத நபர்களுக்கு
புகைப்பிடிக்காத நபர்களும் நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்படுவர். இது பொதுவாக வீடுகள் மற்றும் பொது இடங்களில் சந்திக்கும் இரண்டாவது புகை வெளிப்பாடு நுரையீரல் புற்றுநோயினை அதிகரிக்கிறது. மேலும், புகைபிடிக்காதவர்களை புகைபிடிப்பதில் இருந்து பாதுகாக்கும் போது நுரையீரல் புற்றுநோயைக் குறைக்கலாம்.
புகைபிடித்தல்
புகையிலை, ஹூக்கா, சிகரெட், பீடி எந்த எந்த வடிவில் இருந்தாலும், புகைபிடிப்பதன் மூலமாக நுரையீரல் புற்றுநோய் பரவுவது பொதுவான மற்றும் முக்கிய காரணியாகும். இது புகைபிடிப்பவர்களை மட்டுமல்லாமல் அருகில் இருப்பவர்களையும் அதிகம் பாதிக்கக் கூடியதாகும். இந்த புற்றுநோய் காரணிகளின் சிக்கலான கலவை, நுரையீரலை சேதப்படுத்துகிறது. இந்த புகைபிடித்தலைத் தடுக்கும் முயற்சிகளாக, பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கட்டுப்பாடுகள் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Lung Cancer Symptoms: தொடர் இருமல் புற்றுநோயை ஏற்படுத்துமா? நிபுணர்கள் கூறும் விளக்கம்
Image Source: Freepik