
இந்தியாவில் காற்று மாசுபாடு ஒரு பருவ கால பிரச்னை என்ற நிலையை தாண்டி, ஆண்டு முழுவதும் மக்கள் நலனை அச்சுறுத்தும் அபாயமாக உயர்ந்துவிட்டது. குறிப்பாக டெல்லி, நொய்டா, குருகிராம், கொல்கத்தா போன்ற நகரங்களில் Air Quality Index (AQI) தினமும் “Hazardous Level”–ஐ தாண்டி செல்கிறது.
முக்கியமான குறிப்புகள்:-
இந்த நச்சு மாசு காற்று, புகைப்பிடிக்காதவர்களின் நுரையீரல்களுக்குக் கூட மிகப்பெரும் சேதத்தை ஏற்படுத்தி, lung cancer வர வாய்ப்பு மிக அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். Onlymyhealth ஊடகம், யாதார்த் சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனை நொய்டாவில் பணியாற்றும் புல்மனாலஜி & கிரிட்டிக்கல் கேர் இயக்குநர் டாக்டர் விபுல் மிஸ்ராவிடம் இதுகுறித்து பேட்டி எடுத்துள்ளது.

காற்று மாசுபாடு – நுரையீரல் புற்றுநோய்க்கு பெரிய காரணம்
பொதுவாக நுரையீரல் புற்றுநோய் என்றால் புகைப்பிடித்தல் தான் முக்கிய காரணம் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் உலகளவில் காற்று மாசுபாடும் நுரையீரல் புற்றுநோய்க்கு உறுதியான காரணம் என American Lung Association கூறுகிறது.
டாக்டர் மிஸ்ரா கூறுகையில், "நீண்ட காலம் நச்சு மாசு காற்றை சுவாசிப்பது நுரையீரலில் நீடித்த அழற்சி, DNA நாசம் ஆகியவற்றை ஏற்படுத்தி, புகை பிடிக்காதவர்களுக்குக் கூட புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.”
நுரையீரலுக்குள் செல்லும் மாசு துகள்கள்..
“PM2.5, Nitrogen Dioxide, Benzene, Lead, Arsenic போன்ற நச்சு துகள்கள் மூக்கின் வடிகட்டிகளை தாண்டி நுரையீரலின் ஆழமான பகுதிகளான alveoli-க்கும், இரத்தத்திற்கும் சென்று கடுமையான அழற்சி, oxidative stress, genetic mutation ஏற்படுத்துகின்றன” என்று டாக்டர் மிஸ்ரா விளக்குகிறார்.
யார் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?
* குழந்தைகள்
* முதியவர்கள்
* Asthma / COPD நோயாளிகள்
* தொழிலாளர்கள் / வெளியில் வேலை செய்பவர்கள்
* கர்ப்பிணி பெண்கள்
* தொழிற்சாலை, நெரிசலான சாலைகளுக்கு அருகில் வசிப்பவர்கள்
நச்சு காற்றிலிருந்து எப்படி தற்காப்பு?
* வீட்டில் air purifier பயன்படுத்துவது
* AQI அதிகமான நேரத்தில் ஜன்னல்கள், கதவுகள் மூடிவைப்பது
* புறத்தூய்மை மேம்படுத்தும் houseplants வளர்ப்பது
* AQI பரிசோதித்து வெளியே செல்லும் நேரத்தை தீர்மானித்தல்
* வீட்டில் proper ventilation செய்து, chemical fumes தவிர்த்தல்
* குறைந்த எண்ணெய், மசாலா கொண்ட ஆரோக்கிய உணவு
மேலும், “நுரையீரல் தொடர்பான ஆரம்ப அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது. தவறாமல் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்” என டாக்டர் மிஸ்ரா அறிவுறுத்துகிறார்.

இறுதியாக..
புகை பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணம் அதிகரித்துவரும் காற்று மாசுபாடு என்பதை நிபுணர்கள் உறுதிப்படுத்துகின்றனர். “புகை பிடிக்காதால் நுரையீரல் பாதுகாப்பாக இருக்கும்” என்ற பழைய நம்பிக்கை தற்போது தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நச்சு துகள்களிலிருந்து தற்காப்பு, ஆரோக்கிய வாழ்க்கை முறை, மற்றும் மாசுபாடு குறைந்த சூழல் மட்டுமே இந்த அபாயத்தைத் தடுக்க வழி.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை மருத்துவ நிபுணர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இதில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு சிகிச்சையையும் தொடங்கும்முன், உங்கள் மருத்துவரை அணுகவும்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Dec 02, 2025 09:07 IST
Published By : Ishvarya Gurumurthy