புற்றுநோய் காரணமாக பிரபல கன்னட நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல மூத்த கன்னட நடிகர் உமேஷ் புற்றுநோயை எதிர்த்துப் போராடி தனது 80 வயதில் காலமானார். அவரது இறுதி நாட்கள் படுக்கையில் இருந்தபோதும் குறிப்பிடத்தக்க நம்பிக்கையால் குறிக்கப்பட்டன. இது குறித்த விவரங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
புற்றுநோய் காரணமாக பிரபல கன்னட நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

கன்னட திரையுலகில் நகைச்சுவை உணர்வு மிக்க நேரத்திற்காகவும், நாடகம் மற்றும் சினிமாவுக்கான பங்களிப்புகளுக்காகவும் அறியப்பட்டவர் மூத்த கன்னட நடிகர் எம்.எஸ். உமேஷ் ஆவார். இவர் தனது 80 ஆவது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். இவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


முக்கியமான குறிப்புகள்:-


திரைத்துறையில் உமேஷ் அவர்களின் பங்கு

உமேஷ் சினிமா மற்றும் நாடகத் துறையில் தீவிரமாக இருந்தார், 6 தசாப்தங்களாக நடித்த பெருமைக்குரியவர் இவர். ஏப்ரல் 22, 1945 அன்று மைசூரில் பிறந்த உமேஷ், மிக இளம் வயதிலேயே தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். 1948 ஆம் ஆண்டிலேயே நாடகம் மற்றும் சினிமாவில் தீவிரமாக இருந்த அவர், குப்பி வீரண்ணா நாடக நிறுவனத்தில் குழந்தை நடிகராக முதலில் அங்கீகாரம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இவரது திறமையை அங்கீகாரமாக வைத்து, இவருக்கு திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இவரின் திறமைக்காக இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதையும், நாடகத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக கர்நாடக நாடக அகாடமி விருதையும் பெற்று அங்கீகரிக்கப்பட்டது.

திடீரென உடல்நலக் குறைவு

இந்த ஆண்டு அக்டோபரில், உமேஷ் தனது வீட்டில் குளியலறையில் வழுக்கி விழுந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் கால் மற்றும் தோள்பட்டை காயம் என்று தோன்றிய விஷயம் விரைவில் அதிர்ச்சியைத் தரக்கூடிய செய்தியாக மாறியது. இந்த சிகிச்சையில் அவருக்கு ஸ்கேன் செய்ததில், அவர் மேம்பட்ட கல்லீரல் புற்றுநோயுடன் போராடி வருவதாகவும், இதனால் திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை உடனடியாக ரத்து செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது.

image

what-are-the-main-causes-of-cancer-main-1759945290288.jpg

புற்றுநோய் பாதிப்பு

உமேஸ் அவர்கள் நான்காவது நிலை கல்லீரல் புற்றுநோயுடன் போராடி வந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி, அவர் உடல் ரீதியாக வலுவாகத் தெரிந்தாலும், புற்றுநோய் கண்டறியப்பட்ட நேரத்தில் மற்ற உறுப்புகளுக்கும் பரவியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையிலேயே அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார்.

உமேஷ் தனது இறுதி நாட்களில் கூட, அனைவரும் விரும்பும் மனிதராகவே இருந்துள்ளார். சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், அவர் படுக்கையில் இருந்தபோது நகைச்சுவையாகவும் பாடுவதாகவும் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ ஆனது பார்வையாளர்களைக் கூட அவரது நம்பிக்கையுடன் உணர்ச்சிவசப்படுத்தியது.

கடைசி நேரத்திலும், அனைவரையும் மகிழச்செய்த இவரது இழப்பு திரையுலகம் முழுவதும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திரையுலகினரும், ரசிகர்களும் இவரது இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: Cancer Symptoms: இந்த அறிகுறிகளை லேசுல விடாதீங்க… இது உயிருக்கே ஆபத்தாகலாம்!

Image Source: Freepik

Read Next

World pancreatic cancer day: கணைய புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் இந்த உணவுகளை நீங்க கட்டாயம் தவிர்க்கணும்..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Dec 01, 2025 12:33 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

குறிச்சொற்கள்