$
Liver Cancer Symptoms In Men: கல்லீரல் புற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய்களின் அறிகுறிகள் சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், நோயாளி இறக்கக்கூடும். ஆண்களுக்கு கல்லீரல் புற்றுநோய் வந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்படும் என்பதை இங்கே காண்போம்.
விரைவான எடை இழப்பு
கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டால், நோயாளி எந்த முயற்சியும் இல்லாமல் விரைவாக எடை இழக்கத் தொடங்குகிறார். பொதுவால எடை இழப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம். இருப்பினும் அது கல்லீரல் புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம். எடை குறைவதை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவரை அணுகி உங்களை நீங்களே பரிசோதித்துக்கொள்ளுங்கள்.

பசியின்மை
பசியின்மை ஒரு பொதுவான பிரச்சனை என்றாலும், இது கல்லீரல் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். இதனால், ஒரு நபருக்கு கல்லீரல் புற்றுநோய் இருக்கும்போது, அவர் பலவீனமாக உணர்கிறார்.
இதையும் படிங்க: உயர் இரத்த அழுத்தம் விறைப்புச் செயலிழப்புக்கு வழிவகுக்குமா?
மேல் வயிற்று வலி
கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டால், நோயாளிக்கு வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்படத் தொடங்குகிறது. சில நேரங்களில் நோயாளிகள் இந்த நிலையை ஒரு சாதாரண நோய் பிரச்சனையாக கருதிகிறார்கள்.
குமட்டல் மற்றும் வாந்தி

வயிற்றின் மேல் பகுதியில் உள்ள வலியுடன், நோயாளிக்கு வாந்தி மற்றும் குமட்டல் கூட இருக்கலாம். இதனுடன், வயிற்றில் ஒரு சிறிய வீக்கத்தையும் உணரலாம். அதுமட்டுமின்றி, ஒருவர் மிகவும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணரலாம்.
தோல் நிறத்தில் மாற்றம்
கல்லீரல் பாதிக்கப்பட்டால், மஞ்சள் காமாலை போன்ற கொடிய நோய் ஏற்படும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். மஞ்சள் வெளிர் மஞ்சள் நிறத்தில் தோன்றும். இதேபோல், கல்லீரல் புற்றுநோயின் போது, தோலின் மஞ்சள் நிறத்தையும் காணலாம்.
Image Source: Freepik