Doctor Verified

Breast Cancer Symptoms: கட்டியைத் தவிர மார்பக புற்றுநோயின் மற்ற அறிகுறிகள்

  • SHARE
  • FOLLOW
Breast Cancer Symptoms: கட்டியைத் தவிர மார்பக புற்றுநோயின் மற்ற அறிகுறிகள்


மார்பக புற்றுநோய்

பெண்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய புற்றுநோய் வகைகளுள் ஒன்றாக மார்பக புற்றுநோய் உள்ளது. இது பெண்ணின் மார்பகத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய்களைக் குறிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் உணவு பழக்க வழக்கங்கள் போன்ற சில காரணங்களால் 30-50 வயது பெண்களே மார்பக புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மார்பகத்தில் உள்ள செல்கள், கட்டுப்பாடில்லாமல் வளரத் தொடங்கும் போது இந்த வகை புற்றுநோய் ஏற்படுகிறது. ஆனால், அனைத்து மார்பக கட்டுகளுமே புற்றுநோயைக் குறிப்பதில்லை. மார்பக புற்றுநோய்க்கு இந்த ஒரு அறிகுறி மட்டுமல்லாமல், வேறு சில அறிகுறிகளும் உள்ளது.

மார்பக கட்டிகள் ஏற்பட காரணங்கள்

பெண்களுக்கு ஏற்படும் மார்பக கட்டிகள் பொதுவான ஒன்றாகும். இது வெவ்வேறு காரணங்களைக் கொண்டிருக்கிறது. அதில் சிலவற்றை இப்போது காண்போம்.

  • லிபோமாக்கள் என்ற கட்டி ஆனது, தோலுக்கு அடியில் உருவாகும் தீங்கற்ற கொழுப்பு கட்டிகள் ஆகும். இது பொதுவாக மென்மையான, வலியற்ற கட்டியாகும்.
  • சுரப்பி மற்றும் நார்ச்சத்து திசுக்களால் ஏற்படும் தீங்கற்ற கட்டிகள் ஃபைப்ரோடெனோமாக்கள் கட்டியாகும்.
  • மார்பக திசுக்களில் உருவாகும் திரவம் நிறைந்த பைகள் நீர்க்கட்டிகள் எனப்படுகிறது.
  • நோய்த்தொற்று காரணமாக மார்பக சீழ் அல்லது சீழ் பாக்கெட்டுகள் ஏற்படுகிறது.
  • மார்பக திசுக்களின் வீக்கத்தைக் குறிக்கும் முலை அழற்சியானது தாய்ப்பாலுடன் தொடர்புடையதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Kidney Cancer Symptoms: சிறுநீரக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!

Journal Deutsches Arzteblatt International-ல் குறிப்பிட்ட படி, மார்பக வலி அல்லது மாஸ்டல்ஜியா மற்றும் ஃபைப்ரோசிஸ்டிக் மாற்றங்கள் பொதுவான ஒன்றாகும். இந்த வகை பிரச்சனை 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சுமார் 50% பேர் பாதிக்கப்படுகின்றனர். மேலும், 25% பெண்களுக்கு ஃபைப்ரோடெனோமாக்கள் ஏற்படுகிறது. இவை தீங்கற்ற கட்டிகள் மற்றும் சிகிச்சை தேவையற்றவையாகும்.

மார்பக புற்றுநோய் மற்றும் மார்பக நீர்க்கட்டிகள் குறித்து மும்பையின் ஜஸ்லோக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறுவை சிகிச்சை புற்றுநோயியல் ஆலோசகர் மருத்துவர் கரிஷ்மா கீர்த்தி அவர்களின் கூற்றுப்படி, “மார்பக நீர்க்கட்டிகள் மற்றும் மார்பக புற்றுநோய் இரண்டும் வெவ்வேறு நிலைகள் ஆகும். இவை மார்பக கட்டியாக இருக்கலாம். அதாவது திரவத்தால் நிரப்பப்பட்ட நீர்க்கட்டி மற்றும் புற்றுநோய் இவை இரண்டிலும் இருக்கலாம். எனினும், மார்பகப் புற்றுநோயானது கடினமான, ஒழுங்கற்ற திட நிறை. மார்பக நீர்க்கட்டிகள் தீங்கற்றதாகவும், மென்மையான விளிம்புகளையும் கொண்டிருக்கும். இது திடீரென ஒரே இரவில் தோன்றி வலியை ஏற்படுத்துவதாக அமையும்” என்று கூறியுள்ளார்.

மேலும், மார்பக வலிக்கான பொதுவான காரணங்கள் குறித்து நாக்பூர், HCG NCHRI, புற்றுநோய் பராமரிப்பு மையம், மருத்துவ புற்றுநோயியல் நிபுணர், டாக்டர் சாந்தனு எஸ் பென்ட்ஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அதன் படி, மார்பக வலியானது ஃபைப்ரோசிஸ்டிக் மார்பக மாற்றங்கள், தசைக்கூட்டு பிரச்சனைகள், மருந்துகள், மார்பக அறுவை சிகிச்சை, நோய்த்தொற்று, மார்பக கட்டி, மற்றும் மன அழுத்தம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் எனக் கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: தோல் புற்றுநோய்: கவனிக்க வேண்டிய 7 அறிகுறிகள்

மார்பக புற்றுநோயின் மற்ற அறிகுறிகள்

மார்பக புற்றுநோயின் பொதுவான மற்றும் காணக்கூடிய அறிகுறிகளில் ஒன்றாக மார்பகக் கட்டி ஏற்படும். இருப்பினும், இதன் மற்ற அறிகுறிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

  • தோல் அமைப்பில் மாறுபாடு
  • முலைக்காம்பு தோற்றத்தில் மாறுபாடு
  • முலைக்காம்பு வெளியேற்றம்
  • தொடர்ச்சியான மார்பு வலி
  • மார்பக அளவில் ஏற்படும் விவரிக்க முடியாத மாற்றம்
  • எலும்பு வலி
  • சோர்வடைதல்

இவை அனைத்தும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளாகும்.

எப்போது மேமோகிராம் எடுக்க வேண்டும்?

மார்பக புற்றுநோயைக் கண்டறிய உதவும் சிறப்பு இமேஜிங் மருத்துவ செயல்முறையே மேமோகிராம் எனப்படுகிறது. இது மார்பக திசுக்களின் எக்ஸ்ரே படங்களை எடுத்து, நீர்க்கட்டிகள், கட்டிகள் அல்லது திசுக்களில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை கண்டறிய உதவுகிறது.

மருத்துவர் சாந்தனு கூறுகையில், “மார்பக புற்றுநோயின் சராசரி ஆபத்து உள்ள பெண்கள், வழக்கமான மேமோகிராம்களை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.”

  • அதாவது, சில நிறுவனங்கள் ஆபத்து காரணிகள் இருப்பின், 40 வயது முதல் 44 வரை மேமோகிராம்களை பரிசீலிக்க பரிந்துரைக்கின்றன.
  • 45 வயது முதல் 54 வயது வரை
  • 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஒன்று முதல் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மேமோகிராம்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

எல்லா மார்பக கட்டிகள் புற்றுநோயாக இருப்பதில்லை. எனினும், புதிய அல்லது அசாதாரணமான கட்டியைக் காண்பவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது, கட்டிகளை முன்கூட்டியே கண்டறிய உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மார்பக புற்றுநோய் பற்றிய கட்டுக் கதைகளை இனி நம்ப வேண்டாம் - உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்

Image Source: Freepik

Read Next

Bone Cancer: எலும்பு புற்றுநோய் அறிகுறிகள், ஆபத்து காரணிகள் மற்றும் சிகிச்சை

Disclaimer

குறிச்சொற்கள்