Symptoms of Lung Cancer: நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துவதில் தொடர் இருமலும் ஒரு காரணமாகும். வயதைப் பொருட்படுத்தாமல் எவரையும் பாதிக்கும் ஒரு தீவிர நோயாகவே புற்றுநோய் உள்ளது. இந்த நோயைக் குணப்படுத்துவதற்கான பயனுள்ள சிகிச்சை முறைகளை முன்கூட்டியே அறிவது அவசியம் ஆகும். மேலும் இந்த நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகளைத் தெரிந்து கொள்வதும் அவசியம். தொடர் இருமல், எடை இழப்பு, சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்டவை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இதில், சில புறக்கணிக்கப்படாத புற்றுநோயின் அறிகுறிகள் குறித்து ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையின் மூத்த மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் மற்றும் ஹீமாடோ – ஆன்காலஜிஸ்ட் மருத்துவர் நிகில் எஸ் காத்யால்பாட்டீல் பட்டியலிட்டுள்ளார். அவற்றைப் பற்றி காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Kidney Cancer Symptoms: சிறுநீரக புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் 1.38 மில்லியன் மக்கள் இறக்கின்ற்னார். புற்றுநோய் தொடர்பான இறப்புக்கு நுரையீரல் புற்றுநோயும் காரணமாகும் என புற்றுநோய்க்கான தென் ஆசிய இதழ் தெரிவித்துள்ளது. எனவே, நுரையீரல் புற்றுநோயின் சில அறிகுறிகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.
மூச்சுத்திணறல்
வழக்கமான நடவடிக்கைகளின் போது ஏற்படும் மூச்சுத்திணறல் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட சில அடிப்படை விளைவுகளைக் குறிக்கிறது. எந்தவொரு நடவடிக்கையும் இல்லாமல் மூச்சுத்திணறல் ஏற்படுமாயின் மருத்துவ உதவியை நாடுவது நல்லது.
நெஞ்சு வலி
மார்பு வலி பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். ஆனால், தொடர்ந்து மார்பு அசௌகரியத்தை அடையும் போது புறக்கணிக்கக்கூடாது. நுரையீரல் புற்றுநோய், மார்பில் ஆழமாக உணரக்கூடிய மார்பு வலியை உண்டாக்கும். மேலும் ஆழ்ந்த சுவாசம் மற்றும் இருமல் போன்றவை நெஞ்சு வலியை அதிகப்படுத்தும். இது போன்ற அறிகுறிகளை உணரும் போது மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Bone Cancer Symptoms: எலும்பு புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறிகள்
தொடர் இருமல்
மருத்துவரின் கூற்றுப்படி, வாரக்கணக்கிற்கு மேலாக நீடிக்கும் இருமல் குறிப்பிடத்தக்க அறிகுறியாகும். மேலும் இருமல் ஏற்படும் போது இரத்தம் வருதல் அல்லது மூச்சுத்திணறல் ஏற்படுமதல், இருமலின் சத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுதல், மோசமான இருமல் போன்றவை ஏற்படும் போது சுகாதார நுபுணரை அணுகுவது மிக முக்கியம் ஆகும்.
சுவாச நோய்த்தொற்றுகள்
மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியா போன்றவற்றால் ஏற்படும் சுவாச நோய்த்தொற்றுகள், நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும். வெளிப்படையான காரணம் ஏதுமின்றி, மீண்டும் மீண்டும் சுவாச நோய்த்தொற்றுகளைச் சந்தித்தால், உடனடியாக மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்.
சோர்வு
போதுமான அளவிலான ஓய்வுக்குப் பிறகும், அடிக்கடி தீவிர சோர்வு ஏற்படுவது நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் பிரச்சனையைக் குறிக்கும் என மருத்துவர் காத்யால்பாட்டீல் கூறியுள்ளார். எனவே, இந்த வகை அறிகுறி இருக்கும் போது மருத்துவரை அணுகுவது நல்லது.
எடை இழப்பு
உணவு முறை அல்லது உடற்பயிற்சியில் ஏற்படும் மாற்றங்கள் உடல் எடையைக் குறைக்கலாம். ஆனால், விவரிக்க முடியாத எடை இழப்பு நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும். தற்செயலாக உடல் எடை இழப்பிற்கும், நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் உடல் எடை இழப்பிற்கும் வித்தியாசம் உண்டு. நுரையீரல் புற்றுநோய்க்கு உடல் எடை இழப்பும் காரணமாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Mouth Cancer: வாய் புற்றுநோய்க்கான காரணங்களும் தடுப்புகளும்
Image Source: Freepik