“மார்பகத்தில் வலி இருந்தால் அது புற்றுநோயா?” என்று பல பெண்கள் பயந்து கேட்கிறார்கள். பொதுவாக, மார்பக புற்றுநோயில் உள்ள lump-கள் (கட்டி) வலியில்லாமல் இருக்கும். அவை பெரிதாக வளரும்போதுதான் வெளியில் தென்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் அவசியம் என்று ரேடியாலஜிஸ்ட் டாக்டர் முபாரக் கூறுகிறார்.
சுய பரிசோதனை செய்முறை
Step 1: Mirror Test
கண்ணாடி முன் நிற்கவும். உங்கள் மார்பகங்களை கவனமாகப் பாருங்கள். நிறம் சீராக உள்ளதா?, தோல் மேற்பரப்பு இயல்பாக உள்ளதா?, இரு மார்பகங்களும் ஒரே அளவில் உள்ளனவா? என்பதை கவனிக்கவும். சிறிய வித்தியாசம் (asymmetry) சாதாரணம்.
Step 2: Nipple Check
பொதுவாக nipple வெளியில் காட்டும். ஆனால் அது உள்ளே இழுக்கப்பட்ட (retracted) நிலையில் ருந்தால் கவனிக்க வேண்டும்.
Step 3: Palpation (Circular Motion Check)
ஒரு கையை மேலே தூக்கவும். மற்ற கையைப் பயன்படுத்தி மார்பகத்தை வட்ட வடிவில் அழுத்தி பார்த்து lump இருக்கிறதா என்று உணரவும். மூன்று விரல்கள் மட்டுமே போதும்.
Step 4: Armpit Check
மார்பக புற்றுநோய் lymph nodes மூலமாக மூட்டுக்குள் (armpit) பரவ வாய்ப்பு உண்டு. அதனால் கையை நன்றாக உயர்த்தி, armpit பகுதியில் lumps உள்ளதா என்று பார்த்து உறுதி செய்யவும்.
இந்த பதிவும் உதவலாம்: Tight-ஆ Bra போட்டா “Breast Cancer” வருமா?! மருத்துவர் கூறும் உண்மை இங்கே..
Step 5: Collarbone Check
Clavicle (collarbone) மேல் பகுதியிலும் lymph nodes தோன்ற வாய்ப்பு உண்டு. அதையும் பரிசோதிக்க மறக்க வேண்டாம்.
Step 6: Nipple Discharge Test
மிகவும் முக்கியமானது – nipple-ஐ மெதுவாக அழுத்தி பார்க்கவும். எந்தவொரு திரவம் (discharge) அல்லது இரத்தம் வந்தாலும் அது சிக்னல். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
View this post on Instagram
எப்போது செய்ய வேண்டும்?
மாதவிடாய் நேரத்தில் சுய பரிசோதனை செய்ய வேண்டாம். மாதவிடாய் முடிந்த பிறகு, ஒரு நாள் தேர்வு செய்து அதே தேதியில் ஒவ்வொரு மாதமும் பரிசோதிக்க வேண்டும். தொடர்ச்சியாக மாதந்தோறும் பரிசோதித்தால், எந்த மாற்றமும் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.
டாக்டர் முபாரக் வழங்கும் ஆலோசனைகள்
* மார்பக புற்றுநோய் lump-கள் பெரும்பாலும் வலியில்லாமல் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
* Early detection = early treatment என்பது உயிர் காப்பதில் முக்கியமானது.
* Self-examination செய்து சிறிய சந்தேகம் இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகவும்.
* Mammogram, Ultrasound போன்ற மருத்துவ பரிசோதனைகள் மருத்துவர் ஆலோசனைப்படி செய்ய வேண்டும்.
இறுதியாக..
மார்பக புற்றுநோய் பெண்களில் அதிகமாகக் காணப்படும் புற்றுநோய்களில் ஒன்று. ஆனால் ஆரம்பத்தில் கண்டறிந்தால் குணமாகும் வாய்ப்பு அதிகம்.
அதற்காக, ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் mirror + three fingers கொண்டு self-examination செய்ய வேண்டும்.
அசாதாரண மாற்றங்கள், lumps, nipple discharge, நிறம் மாறுதல் போன்றவை உடனே மருத்துவ ஆலோசனைக்கு செல்ல வேண்டிய அறிகுறிகள்.
{Disclaimer: இந்தக் கட்டுரை டாக்டர் முபாரக் (ரேடியாலஜிஸ்ட்) அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதில் உள்ள தகவல்கள் பொதுவான health awareness நோக்கத்திற்காக மட்டுமே. தனிப்பட்ட உடல்நல பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.}
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Sep 17, 2025 13:31 IST
Published By : ஐஸ்வர்யா குருமூர்த்தி