Doctor Verified

டக்குடக்குனு Weight Loss ஆகும் நடிகர் நடிகைகள்..! இதற்கு பின்னால் இருக்கும் உண்மையை விளக்குகிறார் மருத்துவர்..

நடிகர்கள் திடீரென எடை குறைப்பதற்கான ரகசியம் Mounjaro injection! Radiologist டாக்டர் முபாரக் விளக்கும் உண்மை, பக்கவிளைவுகள், விலை மற்றும் எச்சரிக்கைகள் பற்றி முழுமையான தகவல்.
  • SHARE
  • FOLLOW
டக்குடக்குனு Weight Loss ஆகும் நடிகர் நடிகைகள்..! இதற்கு பின்னால் இருக்கும் உண்மையை விளக்குகிறார் மருத்துவர்..


சமீப காலமாக, பல நடிகர், நடிகைகள் திடீரென எடை குறைத்திருப்பது ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கரண் ஜோஹார் முதல், எலன் மஸ்க் வரை பல பிரபலங்கள் விரைவான எடை இழப்பை அடைந்துள்ளனர். இதற்குப் பின்னால் என்ன காரணம் என ஆராய்ந்தபோது, Mounjaro (மவுன்ஜாரோ) என்ற மருந்து முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து கதிரியக்க நிபுணர் டாக்டர் முபாரக் விளக்கமளித்துள்ளார்.

Maunjaro – நீரிழிவு மருந்து.. ஆனால் தற்போது Weight Loss க்கும்..!

Mounjaro என்ற மருந்து, முதலில் Type 2 Diabetes சிகிச்சைக்காக உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது பல பிரபலங்கள் இதை எடை குறைக்க பயன்படுத்துகின்றனர்.

* இந்த மருந்து உடலில் இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது.

* இதனால் பசி குறைகிறது.

* இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

* இயல்பாகவே எடை குறைவு ஏற்படுகிறது.

எவ்வளவு நாள் எடுத்துக்கொள்ள வேண்டும்?

மக்கள் பலர் “மூன்று மாதம் ஊசி போட்டால் போதும்” என்று நம்புகிறார்கள். ஆனால் டாக்டர் முபாரக் கூறுவதாவது, ஒருமுறை தொடங்கினால், நீண்ட காலம் அல்லது வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. மருந்தை நிறுத்தினால் மீண்டும் எடை கூடும் அபாயம் உள்ளது. அதேபோல், நீரிழிவு நோயாளிகளில் சிகிச்சையை நிறுத்தினால், சர்க்கரை அளவு மீண்டும் அதிகரிக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: தட்டையான வயிறு வேணுமா.? மருத்துவர் பரிந்துரைக்கும் இந்த உணவுகளை சாப்பிடுங்க..

விலை எவ்வளவு?

Mounjaro injection மிக உயர்ந்த விலையில் கிடைக்கிறது.

ஒரு வார செலவு – சுமார் ரூ. 4,000

ஒரு மாத செலவு – சுமார் ரூ. 16,000

இதனால், சாதாரண மக்கள் தொடர்ந்து பயன்படுத்துவது பொருளாதார சுமையாக இருக்கும்.

பக்கவிளைவுகள்

* வாந்தி

* மலச்சிக்கல்

* குடல் இயக்க சிரமம்

மிக ஆபத்தான விஷயம் என்னவெனில், Thyroid Cancer வரலாறு உள்ளவர்கள் இந்த மருந்தை எடுக்கக் கூடாது. ஏனெனில், விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் Thyroid Cancer ஏற்படும் என தெரியவந்துள்ளது.

View this post on Instagram

A post shared by Dr Mubarak (@drmubarakofficial)

Shortcut இல்லை – Lifestyle தான் Solution

ஆரோக்கியத்திற்கு Shortcut கிடையாது. அதிக எடை கொண்ட நோயாளிகள் மட்டுமே மருத்துவர் பரிந்துரையுடன் இதைப் பயன்படுத்தலாம். சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி இருந்தால், இயல்பாகவே எடை குறையும்.

இறுதியாக..

நடிகர்கள் விரைவாக எடை குறைப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், அதற்குப் பின்னால் இருக்கும் Mounjaro மருந்தின் உண்மை மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று. இது சிலருக்கு நன்மை தரலாம், ஆனால் அதே நேரத்தில் பெரும் அபாயங்களையும் ஏற்படுத்தும். எனவே, மருத்துவ ஆலோசனையில்லாமல் இந்த மருந்தை எடுக்க வேண்டாம் என்பது தான் முக்கிய செய்தி.

Disclaimer: இந்த கட்டுரை தகவல் பரிமாற்றம் மட்டுமே. எந்த மருந்தையும் பயன்படுத்தும் முன், கட்டாயம் தகுந்த மருத்துவர் ஆலோசனை பெறவும்.

Read Next

உணவு நேரம் எடை மேலாண்மையை பாதிக்குமா? மருத்துவர் விளக்கம்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 22, 2025 21:13 IST

    Published By : Ishvarya Gurumurthy