Doctor Verified

Cancer Prevention: உடற்பயிற்சி மூலம் புற்றுநோயை தடுக்க முடியுமா? நிபுணர்களின் விளக்கம்

  • SHARE
  • FOLLOW
Cancer Prevention: உடற்பயிற்சி மூலம் புற்றுநோயை தடுக்க முடியுமா? நிபுணர்களின் விளக்கம்


தற்போது உடற்பயிற்சி மூலம் புற்றுநோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று கூறப்படுகிறது. இது உடல் திறனை மேம்படுத்தவும், புத்துணர்ச்சி அளிக்கவும் உதவுவதாக குறிப்பிடப்படுகிறது. இதனால் உடற்பயிற்சி,  புற்றுநோயை எதிர்கொள்ளும் ஒரு சிறந்த சிகிச்சையாக பார்க்கப்படுகிறது.  

புற்றுநோயை தடுப்பதிலும், சிகிச்சை அளிப்பதிலும், உடற்பயிற்சியின் பங்குகள் மற்றும் முக்கியத்துவங்கள் குறித்த புரிதலை, CSO மற்றும் PredOmix இணை நிறுவனர் மருத்துவர் கவுரி ராவ் எங்களிடம் பகிர்ந்துள்ளார். 

மரபணு, வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்படலாம் என்று கூறிய மருத்துவர் ராவ் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைப்பதற்கும், நோயறிதலுக்குப் பிறகு அதன் விளைவுகளை குறைக்கவும் ஒருவர் எந்தெந்த நடவடிக்கை எடுக்கலாம் என்பதையும் விளக்கினார். 

உடற்பயிற்சியின் நன்மைகள்: 

உடற்பயிற்சி செய்தால், உடலில் ஏற்படும் வீக்கம் குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் உடல் எடையை சீராக இருக்கவும், மனம் மற்றும் உடலின் செயல்திறனை மேம்படுத்தவும் உதவுவதாக மருத்துவர் ராவ் கூறினார். மார்பகம், பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் போன்ற புற்றுநோய்களின் அபாயத்தை, உடற்பயிற்சி செய்வதன் மூலம் குறைக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளதாகவும்,  உடற்பயிற்சி செய்வதன் மூலம், புற்றுநோயை எதிர்கொள்ள முடியும் என்றும், புற்றுநோய்க்காக அளிக்கப்படும் கீமோதெரபி, ரேடியேஷன் போன்ற சிகிச்சைகளின் பக்கவிளைவுகளை குறைத்து, உடல் செயல்பாடுகளை மேம்படுத்த முடியும் என்றும் மருத்துவர் ராவ் கூறினார். 

உடற்பயிற்சி எவ்வாறு உதவுகிறது?

உடற்பயிற்சி மூலம் புற்றுநோயை தடுக்க முடியும் என்று அதற்கான சில வழிகளை பட்டியலிட்ட மருத்துவர் ராவ், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையில் உடற்பயிற்சியை இணைப்பதற்கான சில நடைமுறைகளை வழங்கினார். 

உடல் வீக்கம் குறையும்: 

வீக்கம் எனபது தொற்றினால் ஏற்படும் எதிர்வினையாகும். நாளடைவில் அலெற்சி மற்றும் புற்றுநோயின் வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும். உடற்பயிற்சி செய்யும் போது, நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்படுவதன் மூலம், சைட்டோகைன் போன்ற அலெற்சியின் உற்பத்தி குறையும். இதனால், உடலில் வீக்கமும் குறையும். 

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

உடற்பயிற்சி செய்வதன் மூலம், புற்றுநோயை தடுக்க உதவும், நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க முடியும். தினசரி உடற்பயிற்சி செய்வதால் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, புற்றுநோய் செல்கள் உடலில் பரவுவதற்கு முன்பு அதனை அகற்றிவிடும். 

எடை கட்டுப்பாடு: 

மார்பகம், பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் போன்ற புற்றுநோய்கள், உடல் பருமனால் கணிசமாக அதிகரிக்கும். இதனால் உடற்பயிற்சி செய்து கலோரிகலை எரித்து, எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இது புற்றுநோய் உருவாகும் வாய்ப்பை குறைக்கிறது. 

குடல் ஆரோக்கியம்: 

புற்றுநோய்க்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக மருத்துவர் ராவ் கூறினார். எனவே, உடற்பயிற்சி செய்து, குடல் ஆரோக்கியதை மேம்படுத்த வேண்டும். உடற்பயிற்சி செய்தால், குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் வளர்ச்சியடையும் என்றும், அவை வீக்கத்தை குறைப்பதன் மூலம், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றும் மருத்துவர் கூறினார். மேலும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் செரிமான அமைப்பு சார்ந்த புற்றுநோய் அபாயத்தை குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். 

இதையும் படிங்க: புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க வேண்டுமானால், இதைக் கண்டிப்பாக செய்யுங்கள்

புற்றுநோய் சிகிச்சையில் உடற்பயிற்சியின் பங்கு 

புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் உடற்பயிற்சி குறித்து மருத்துவர் ராவ் கூறியதை இங்கே காணலாம். 

பக்க விளைவுகள் குறையும்: 

புற்றுநோய்க்காக அளிக்கப்படும் கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் சிகிச்சைகள், குமட்டல், உடல் சோர்வு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இதனை உடற்பயிற்சி செய்வதன் மூகம் கட்டுபடுத்த முடியும். அதாவது, ஒட்டுமொத்த உடற்தகுதியை அதிகரிக்கும்போது, உடலில் ஏற்படும் அலெற்சி குறையும். இதற்கு உடற்பயிற்சி பாதகமான வழியை காட்டும். 

மன ஆரோக்கியம் மேம்படும்: 

புற்றுநோய் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மனச்சோர்வு மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகரமான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். இதனை எதிர்த்து போராட உடற்பயிற்சி ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்கும். இது நோயாளிகளின் மனநிலையை உயர்த்தவும், கவலை மற்றும் மனச்சோர்வை குறைக்கவும் உதவுகிறது. 

செயல்பாடு மேம்படும்: 

புற்றுநோய் சிகிச்சை, உடலின் செயல் திறனை குறைத்துவிடும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் இதனை மேம்படுத்த முடியும். இது வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்தும். 

உடற்பயிற்சியின் உயிர் காக்கும் நன்மைகள்

புற்றுநோயை தடுப்பதற்கும், சிகிச்சையின் தாக்கத்தை குறைப்பதற்கும் தினசரி உடற்பயிற்சி செய்வது முக்கியமான ஒன்று. இது புற்றுநோய் உருவாக்கும் வாய்ப்பை குறைக்கவும், புற்றுநோய் கண்டறியப்பட்டவர்களின் உடல் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகிறது. புற்றுநோயின் நிலை மற்றும் தனிப்பட்ட சுகாதார நிலையைப் பொறுத்து உடற்பயிற்சியின் வகை மாறுபடும். இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்த, அன்றாட வாழ்க்கை முறையில் உடற்பயிற்சியை இணைப்பது மிக அவசியமான ஒன்றாகும். இதனை பின்பற்றுவதன் மூலம் புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம்.  

புற்றுநோய் நோயாளிகள், உடற்பயிற்சி திட்டத்தைத் தொடங்குவதற்கு முன், அது பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் இது அவர்களது உடலுக்கு பொருந்துமா என்பதை மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். 

Image Source: Freepik

Read Next

Breast Cancer Symptoms: கட்டியைத் தவிர மார்பக புற்றுநோயின் மற்ற அறிகுறிகள்

Disclaimer

குறிச்சொற்கள்