Child Pneumonia Prevention: குழந்தைக்கு நிம்மோனியா இருப்பதற்கான அறிகுறிகள் இது தான்.! எளிதில் சரியாக இத செய்யுங்க.

  • SHARE
  • FOLLOW
Child Pneumonia Prevention: குழந்தைக்கு நிம்மோனியா இருப்பதற்கான அறிகுறிகள் இது தான்.! எளிதில் சரியாக இத செய்யுங்க.


How To Prevent Pneumonia In Babies At Home: குளிர்காலத்தில் குழந்தைகள் அடிக்கடி காய்ச்சல் மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த மாறிவரும் பருவத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சல் மற்றும் நிமோனியா போன்றவை தொற்று நோயால் ஏற்படுவதாகும். இதை வீட்டு வைத்தியத்தின் மூலம் குணப்படுத்துவது இயலாது. ஆனால், இது போன்ற நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு நிம்மோனியா ஏற்படுவதற்கான முக்கிய காரணம் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களே ஆகும். குழந்தைகளை நிம்மோனியாவிலிருந்து பாதுகாப்பாக வைக்க சில வீட்டு வைத்தியங்கள் உதவுகின்றன. அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.

நிம்மோனியா ஏற்படுவதற்கான காரணம்

நிம்மோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் தொற்றுக்களே ஆகும். இது காற்றுப் பாதைகளைத் தடுக்கிறது. இந்த நோயில் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளில் திரவம் நிரம்பி வீக்கத்தை உண்டாக்குகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இருமல், சளி, தொண்டைவலி, மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள். இதில் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கே இந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

குழந்தைகளுக்கு நிம்மோனியா அறிகுறிகள்

பொதுவாக நிம்மோனியாவின் அறிகுறிகள் காய்ச்சலைப் போன்றே இருக்கும். இதன் அறிகுறிகள் சிலவற்றைக் காண்போம்.

  • இருமல்
  • சளி
  • சுவாசிப்பதில் சிரமம்
  • காய்ச்சல்
  • குளிர் நடுக்கம்
  • இருமலின் போது மார்பு மற்றும் தொண்டை வலி ஏற்படுவது

குழந்தைகளை நிம்மோனியாவில் இருந்து பாதுகாக்க வீட்டு வைத்தியங்கள்

பெரும்பாலும் குழந்தைகள் வானிலை மாற்றம் நிகழும் போதே நிம்மோனியாவால் பாதிக்கப்படுகின்றனர். உண்மையில், இது கவனக்குறைவு காரணமாக, நிம்மோனியா மற்றும் பிற தொற்று நோய்களுக்கு ஏற்படுவதாகும். இதற்கு சில வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளை இந்த நோய்களில் இருந்து காப்பாற்ற முடியும்.

கிராம்பு நீர்

10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைக்கு கிராம்பு தண்ணீரைக் கொடுக்கலாம். கிராம்பு நீர் தயாரிக்க, முதலில் தண்ணீரில் 2 முதல் 3 கிராம்பு மற்றும் கருமிளகு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின், சிறிது வெதுவெதுப்பாக்கி அரை கப் அளவு குழந்தைக்கு கொடுக்கலாம். இதுதவிர, கிராம்பு எண்ணெயைக் கொண்டு குழந்தைகளின் மார்பில் மசாஜ் செய்வதன் மூலம் நிம்மோனியா நோயிலிருந்து பாதுகாக்க முடியும்.

பூண்டு

இருமலை நீக்க பூண்டு பெரிது உதவுகிறது. சில பூண்டு பற்களை பேஸ்ட்டாக செய்து, இந்த கலவையை இரவு தூங்கும் முன் குழந்தையின் மார்பில் தடவலாம். இவை குழந்தையின் மார்புக்கு வெப்பத்தை அளித்து, சளியை வெளியேற வைக்கிறது.

மஞ்சள்

பல்வேறு ஆரோக்கிய மற்றும் மருத்துவ பண்புகள் நிறைந்த மஞ்சள் குளிர்காலத்தில் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இவை குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வைரஸ் தொற்றுக்களிலிருந்து பாதுகாக்க உதவுகீறது. வானிலை மாற்றம் ஏற்படும் போது குழந்தைக்கு மஞ்சள் பால் கொடுக்கலாம். மேலும் மஞ்சளை தண்ணீரில் சேர்த்து சூடாக்கி அதை குழந்தையின் மார்பில் மசாஜ் செய்யும் போது தடவலாம். இது தொற்று நோய்களிலிருந்து குழந்தைக்கு நிவாரணம் தர உதவுகிறது.

துளசி கஷாயம்

மஞ்சளைப் போலவே துளசியும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும். குழந்தைக்கு நிம்மோனியா வராமல் தடுக்க துளசி இலை சாறுடன், கருப்பட்டி கலந்து கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதன் மூலம், அதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் வைரஸ் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

குழந்தைக்கு நிம்மோனியா இருப்பின், மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை முறையைக் கையாளலாம். மேலும், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு இதில் கொடுக்கப்பட்ட வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம்.

Image Source: Freepik

Read Next

Diaper Hygiene Rules: குழந்தைக்கு டயப்பர் இவ்ளோ விஷயம் இருக்கா? இது நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.

Disclaimer