Diaper Hygiene Rules: குழந்தைக்கு டயப்பர் இவ்ளோ விஷயம் இருக்கா? இது நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.

  • SHARE
  • FOLLOW
Diaper Hygiene Rules: குழந்தைக்கு டயப்பர் இவ்ளோ விஷயம் இருக்கா? இது நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.

இன்றைய காலகட்டத்தில் சிறு குழந்தைகளுக்கும் டயப்பர் முக்கிய தேவையாக மாறிவிட்டது. இதில் குழந்தை டயப்பர்களை அணியும் முன் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியமான குறிப்புகளைக் காணலாம். இதில் குழந்தைகளுக்கு வாங்கும் டயப்பர்களை நல்ல நிறுவனத்திடம் மட்டுமே வாங்க வேண்டும். ஏனெனில், இவை சுத்தமாக மற்றும் தரமாக இருப்பது அவசியம். டயப்பர் அளவையும் மனதில் கொள்ள வேண்டும். இது மிகவும் தளர்வாக இருப்பின், குழந்தை ஈரமாக இருக்கும். மிகவும் இறுக்கமாக இருந்தால், தோலில் அடையாளங்கள் தோன்றும். இதில் புதிய பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய குழந்தையின் சுகாதாரம் தொடர்பான சில விதிகள் குறித்துக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Baby Face Massage: குழந்தைக்கு ஃபேஸ் மசாஜ் செய்ய போறீங்களா? அப்ப கண்டிப்பா இத தெரிஞ்சிக்கோங்க.

டயபர் சுகாதாரம் தொடர்பான விதிகள்

குழந்தைகளுக்கு டயப்பர் அணிவதன் மூலம், பல பிரச்சனைகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்க முடியும். ஆனால், டயப்பரை தவறாக அணிவதால் குழந்தைகளுக்குப் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இவை குழந்தைகளுக்கு சொறி, தொற்று உள்ளிட்ட பல கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதில் டயப்பர் அணிவது தொடர்பான சில முக்கிய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.

கை கழுவுதல்

குழந்தைகளுக்கு டயப்பர் அணிவிக்கும் முன் மற்றும் பின், கைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் டயப்பர் அணியும் போது கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளாததால், குழந்தைகளுக்கு தொற்றுக்கள் ஏற்படலாம். எனவே குழந்தையின் சருமத்தை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க, கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

தடிப்புகளைத் தவிர்த்தல்

குழந்தைகளுக்கு டயப்பர் தடிப்பு வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதன் படி, எப்போதும் டயப்பரின் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், ஈரப்பதத்தை அகற்ற, அதிக திரவத்தை உறிஞ்சும் திறனுள்ள டயப்பர்களைப் பயன்படுத்தலாம். ஈரமான டயப்பரில் குழந்தைகளை நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது. குழந்தையின் டயப்பர் அதிகம் அழுக்கடைவதற்கு முன் மாற்ற வேண்டும். குழந்தையின் டயப்பரில் இருக்கும் ஈரப்பதம் குழந்தைக்கு தொற்று மற்றும் தடிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே டயப்பர் அணியும் முன் இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: குழந்தைக்கு உலர் திராட்சை கொடுப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா. அப்ப இப்படி கொடுங்க.

சரியான டயப்பர் தேர்வு

குழந்தைகளுக்கு எப்போதும் சரியான டயப்பரைத் தேர்வு செய்ய வேண்டும். சந்தையில் பல வகையான டயப்பர் இருப்பினும், அனைத்து வகையான டயப்பர்களும் குழந்தைக்கு பயனுள்ளதாக இருக்காது. எனவே, குழந்தைக்கு டயப்பர் தேர்வு செய்ய முன், அது மிகவும் உறிஞ்சக் கூடியதாகவும், ஈரப்பதத்தை நன்கு உறிஞ்சும் திறன் கொண்டதாகவும் அமையும். இந்த டயப்பர்களைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தையை பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க முடியும்.

வெதுவெதுப்பான நீர் பயன்பாடு

குழந்தைகளுக்கு டயப்பர் சொறி ஏற்படின், பருத்தி உருண்டைகள், வெதுவெதுப்பான நீர் மற்றும் கிரீம் பயன்படுத்தலாம். டயப்பரின் ஈரப்பதம் மற்றும் எரிச்சல் காரணமாக டயபர் தடிப்புகள் உண்டாகிறது. எனினும், சில டயபர் தடிப்புகள் மருத்துவ நிலையைக் குறிக்கலாம். பெரும்பாலான டயபர் தடிப்புகள் ஒப்பீட்டளவில் லேசானவையாகவும், சில தடிப்புகள் மிக கடுமையாகவும் இருக்கலாம். இதனால் வலிமிகுந்த சிவப்பு புள்ளிகள் மற்றும் இன்னும் சில நேரங்களில் தோலில் விரிசல் உண்டாகலாம்.

ஆரோக்கியமாகக் கையாளுதல்

டயப்பரைப் பயன்படுத்திய பிறகு, அதை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். ஆரோக்கியமான மற்றும் தூய்மையான சூழலைக் கொண்டிருப்பதன் மூலம் பல வகையான தொற்றுநோய்களைத் தவிர்க்கலாம். எனவே டயப்பரைப் பயன்படுத்திய பிறகு, அதை சரியான முறையில் அகற்ற வேண்டும். எப்போதும் டயப்பரை அகற்றிய பிறகு கைகளை நன்கு கழுவ வேண்டும்.

டயபர் சுகாதார விதிகளைத் தெரிந்து கொள்வதன் மூலம், குழந்தையை பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க முடியும். எனவே பெற்றோர்கள் ஒவ்வொருவரும் இந்த டயப்பர் விதிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Baby Neck Rash Prevention: மழைக்காலத்தில் குழந்தையின் கழுத்தில் ஏற்படும் சொறியிலிருந்து பாதுகாக்க இத செய்யுங்க

Image Source: Freepik

Read Next

Mustard Oil Massage: குழந்தைக்கு மசாஜ் செய்ய கடுகு எண்ணெய் பயன்படுத்தலாமா?

Disclaimer