Raisins For Babies Benefits: குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை மேம்படுத்த ஒவ்வொரு பெற்றோரும் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக உணவு முறையில் சிறப்பான கவனம் தேவை. எனவே இதற்கான குழந்தைகளுக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் உலர் பழங்களைக் கொடுப்பர். இந்த சூழ்நிலையில், குழந்தைகளுக்கு திராட்சை தருவதும் நன்மை தரும். திராட்சையில் உள்ள கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடைய உதவுகின்றன. மேலும், குழந்தைகளின் உடல் வளர்ச்சியையும் இது துரிதப்படுத்துகிறது. குழந்தைகளுக்கு திராட்சை கொடுப்பது, மூளைக்கும் ஊட்டச்சத்தை அளிக்கும். குழந்தைகளுக்கு உலர் திராட்சையின் நன்மைகளைக் காணலாம்.
குழந்தைகளுக்கு உலர் திராட்சை தரும் ஆரோக்கிய நன்மைகள்
குழந்தைகளுக்குப் பல்வேறு வழிகளில் உதவும் உலர் திராட்சையின் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
நினைவாற்றல் மேம்பாட்டிற்கு
குழந்தைகளின் மூளை வளர்ச்சியடையவும், நினைவாற்றலை கூர்மைப்படுத்தவும் திராட்சையைக் கொடுக்கலாம். தினமும் சிறு குழந்தைகளுக்கு திராட்சை தருவது, அவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Newborn Sleeping: குழந்தைக்கு நல்ல தூக்க பழக்கத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள்
உடல் வளர்ச்சிக்கு
சிறிய குழந்தைகளுக்கு உலர் திராட்சை அளிப்பது, குழந்தையின் விரைவான உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. இது அவர்களை எப்போதும் ஆரோக்கியமாக வைக்க உதவும். திராட்சையை உண்பது குழந்தைகளுக்குத் தேவையான முழுமையான ஊட்டச்சத்து கிடைக்கும்.

காய்ச்சல் தடுப்பு
குழந்தைகள் பொதுவாக அடிக்கடி சளி மற்றும் காய்ச்சலை சந்திப்பர். இதற்கு குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதே காரணமாகும். குழந்தைகளுக்கு உலர் திராட்சை கொடுப்பது காய்ச்சலை குணப்படுத்தும். இதற்கு திராட்சையில் உள்ள பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளே காரணமாகும்.
மலச்சிக்கல்லில் இருந்து விடுபட
சிறு குழந்தைகளும் பெரும்பாலும் மலச்சிக்கல்லால் பாதிக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு திராட்சை தருவது பெரிதும் நன்மை தரும். திராட்சையில் உள்ள அதிக அளவிலான நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை எளிதாக்கி மலச்சிக்கல்லைத் தீர்க்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Newborn Sleeping: குழந்தைக்கு நல்ல தூக்க பழக்கத்தை வளர்ப்பதற்கான சிறந்த வழிகள்
இரத்த சோகை நீங்க
பல குழந்தைகள் இரத்த சோகை நோயால் பாதிக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு உலர் திராட்சை தருவது பெரிதும் நன்மை தரும். திராட்சையில் உள்ள இரும்புச்சத்துக்கள், இரத்த சோகையை நீக்க உதவுகிறது. இது அவர்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு எப்போது திராட்சை கொடுக்க ஆரம்பிக்கலாம்?
பிறந்த குழந்தைகள், முதல் 6 மாதங்களுக்குப் பின் தாய்பாலுடன் லேசான உணவு மற்றும் பானங்களை சாப்பிட தொடங்குவர். அதே சமயம், 6 மாத குழந்தைக்கு நிறைய திரவங்களைக் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு உலர் திராட்சை கொடுக்க விரும்புபவர்கள், 8 மாத வயதுக்குப் பின் கொடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: New Born Baby Care Tips: பிறந்த குழந்தையின் சில பராமரிப்பு முறைகள்.!
குழந்தைகளுக்கு திராட்சை எப்படி கொடுப்பது?
குழந்தைகளுக்கு திராட்சையைக் கொடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். திராட்சையின் முழுமையான ஊட்டச்சத்த்க்களைப் பெற திராட்சைச் சாறு, ப்யூரி அல்லது நசுக்கி குழந்தைக்குக் கொடுக்கலாம். முழு திராட்சையையும் குழந்தைக்குக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இது குழந்தையின் தொண்டையில் சிக்கி பிரச்சனையை உண்டாக்கலாம். எனவே திராட்சையை நசுக்கி அல்லது சாறாக கொடுக்கலாம்.
திராட்சையை குழந்தைக்கு ஊட்டுவதால் ஏற்படும் தீமைகள்
- குழந்தைகளுக்கு உலர் திராட்சை தருவது அலர்ஜி பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
- இதன் இனிப்பு சுவை, குழந்தைகளுக்குப் பல் பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
- உலர் திராட்சை குழந்தையின் தொண்டையில் சிக்கி பிரச்சனையை ஏற்படுத்தலாம்
- அதிகளவு திராட்சையைக் கொடுப்பது, குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கலாம். எனவே அதிகளவு கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

திராட்சையை குழந்தைகளுக்குக் குறைந்த அளவிலேயே கொடுக்க வேண்டும். அதிகளவு கொடுப்பது, குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிக்கலாம். மேலும், குழந்தைக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையின் படியே திராட்சையைக் கொடுக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Newborn Hair Growth: பிறந்த குழந்தைக்கு முடி அதிகமாக வளர இத செய்யுங்க
Image Source: Freepik